Monday, June 22, 2015

அவ கதையைக் கேளு!

தேரு ஏறி பவனி வரும் பொண்ணு பாரு, அவ
அழகைக் காண கோடிக் கண்ணு வேணும் கேளு
வில்லும் அம்பும் ஏந்திப் போன வீரம் பாரு, அங்கே
சொல்லும் மறந்து நின்ன அவ கதையைக் கேளு!
(தேரு)

தவமிருந்த தாய்க்கு மகளாகப் பொறந்தா, அவ
தமிழ் வளந்த மதுரையில தானும் வளந்தா
திசையெல்லாம் படையெடுத்து வெற்றி யடைஞ்சா
சிவனை வெல்லக் கைலாயம் பொறப்பட்டுப் போனா!
(தேரு)

கண்ட கண்ணு இமைக்ககூட மறந்து போனதாம்
வில்லும் அம்பும் தானா நழுவிக் கீழ விழுந்ததாம்
சண்டை போடப் போன பொண்ணு சரணமடைஞ்சிட்டா
வெக்கம் மீறச் சொக்கனுக்குச் சொந்தமாயிட்டா!
(தேரு)


--கவிநயா

 

2 comments:

  1. Listen to your song here in Raag Mohanam here
    https://soundcloud.com/meenasury/xzztzy6vgcta

    ReplyDelete
    Replies
    1. கேட்டு மகிழ்ந்தேன் தாத்தா! படமும் வெகு பொருத்தம் + அழகு. மிக்க நன்றி தாத்தா!

      Delete