தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது...மிக்க நன்றி தாத்தா!
என் மன ஊஞ்சலிலே உன்னை வைத்தேன்
உந்தன் திருப் பாதங்களில் என்னை
வைத்தேன்
(என்)
நிலையில்லாத நெஞ்சம் நித்தியக்
கூத்தாட
விலையில்லா உனை மறந்து வேதனையில்
வாட
சிலை கொண்ட கரத்தாளே சிக்கென
உனைப் பிடித்தேன்
சிந்தையிலே உன்னைச் சிக்க வைத்தேன்
(என்)
சஞ்சலம் மிகக் கொண்ட நெஞ்சகந்தனைக்
கொண்டேன்
அஞ்சுகம் உன்பதமே தஞ்சம் எனக்
கண்டேன்
குஞ்சித பாதனவன் கொஞ்சிடும் பைங்கிளியே
அஞ்சலென அருள வருவாயே
(என்)
--கவிநயா
அருமை...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்!
Delete