ஆடி முதல் வெள்ளி வணக்கம் = ஆத்தாளுக்கு, அண்டமெல்லாம் பூத்தாளுக்கு!
கவிக்கா என்னை மன்னிக்க, நான் அவசரப்பட்டு முந்திக்கிட்டு இருந்தா..
எட்டிப் பார்த்தேன்.. எந்தப் பதிவும் இல்லையென்பதால் நானே இட்டுவிட்டேன்..
* மாயி என்றால் என்ன?
* மணி மந்திர சேகரி என்றால் என்ன பொருள்?
- யாரேனும் சொல்லி உதவுங்கள்!
”மாரியம்மன் தாலாட்டு” என்னும் நாட்டுப்புறப் பாடலைச் சுருக்கி, ஆக்கிய திரைப்பாடல் இது..
படம்: ஆதி பராசக்தி
குரல்: பி. சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
ஆயி மகமாயி.. ஆயிரம் கண்ணுடையாள்
நீலி திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே.. சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தை விட்டுச் சடுதியிலே வாருமம்மா..
--
மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே, ஆத்தா.. என் மாரிமுத்தே
(மாயி)
சிலம்பு பிறந்ததம்மா, சிவலிங்கச் சாலையிலே
பிரம்பு பிறந்ததம்மா, பிச்சாண்டி சன்னிதியில்
உடுக்கை பிறந்ததம்மா, உருத்திராட்ச பூமியிலே
பம்பை பிறந்ததம்மா, பளிங்குமா மண்டபத்தில்
(மாயி)
பரிகாசம் செய்தவரைப் பதைபதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டுவிட்டா, பக்கத்துணை நீ இருப்பே
மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை
நீ பார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்
(மாயி)
குழந்தை வருந்துவது, கோவிலுக்குக் கேட்கலையோ?
மைந்தன் வருந்துவது, மாளிகைக்குக் கேட்கலையோ?
ஏழைக் குழந்தையம்மா.. எடுத்தோர்க்குப் பாலனம்மா
உன் தாளைப் பணிந்து விட்டால், தயவுடனே காருமம்மா!
கத்தி போல் வேப்பிலையாம்.. காளியம்மன் மருத்துவராம்
ஈட்டி போல் வேப்பிலையாம்.. ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்.. விந்தைதனை யார் அறிவார்
ஆயா மனமிரங்கு - என் ஆத்தா மனமிரங்கு
அன்னையே நீ இரங்கு என் அம்மையே நீ இறங்கு!
பரவாயில்லை, ஆடி வெள்ளிக்குப் பதிவிடுங்கன்னு குழு மக்களுக்கு மடல் அனுப்பணும்னு நினைச்சேன், அப்புறம் விட்டுப் போச்சு. நீங்க பதிவிட்டதில் மகிழ்ச்சியே. நன்றி கண்ணா!
ReplyDeleteஅறிவினாதானே கேட்கிறீங்க? (அதாவது already அறிஞ்ச வினா:) நீங்களே சொல்லிடுங்க!