அமிர்த வர்ஷிணியில் அமிர்தமாகாவே வர்ஷிக்கிறது, கீதாம்மாவின் குரல்! மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!
அருள் நீ புரிவாயோ?
வரம் நீ தருவாயோ?
(அருள்)
ஒரு முறை உனை நினைந்து உள்ளம்
உருகிடவும்
கதி நீ என உணர்ந்து கண்ணீர் பெருகிடவும்
(அருள்)
கருவறையில் பிறந்து, விதி வலையில் விழுந்து,
மதியிழந்து உழன்று, வழி மாறி,
சுகம் எதென அலைந்து, உனை மறந்து
தொலைந்து,
அகம் கலங்கி மலங்கித், தடுமாறும் எனக்கு
(அருள்)
--கவிநயா
மிக்க நன்றி கவிநயாம்மா! அருமையான வரிகள்...
ReplyDeleteகீதா
உங்கள் தேனினிய குரலால் அம்மாவையும் அனைவரையும் பாடிப் பரவசப்படுத்துவதற்கு மிக்க நன்றி கீதாம்மா. உங்களை அழைத்து வந்த சுப்பு தாத்தாவிற்கும் நன்றிகள் பலப்பல.
Delete