கீதாம்மா தன் இனிய குரலில்...கதனகுதூகலம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!
வசந்த காலம் வந்தது,
மனதில் மகிழ்வு
தந்தது
மலர்களெல்லாம்
உன் முகம் போல்
மலர்ந்து சிரிக்குது
ஒலிகளெல்லாம் உன்
பெயரைக்
கானம் படிக்குது
(வசந்த)
சலசலவென சலசலவென
ஓடும் நதியில்
கலகலவெனக் குலுங்கும்
உனது சதங்கை கேட்குது
சடசடவென சடசடவென
மழையில் நனைகையில்
பொழியும் உந்தன்
அருளில் நனைதல் போலத் தோணுது
(வசந்த)
விரிந்து கிடக்கும்
நீலவானை நிமிர்ந்து பார்க்கையில்
பரந்து விரிந்த
உந்தன் உள்ளம் போலத் தோணுது
நீரையுண்ட மேகங்களின்
கருமை காண்கையில்
கருணை வழியும்
உந்தன் விழிகள் போலத் தோணுது
(வசந்த)
அலையடிக்கும் கருங்கடலின்
கரங்கள் காண்கையில்
அரவணைக்கும் உந்தன்
கரங்கள் போலத் தோணுது
பசுமையான பச்சைப்
புல்லில் படுத்துப் புரள்கையில்
பாசமான உந்தன்
மடியைப் போலத் தோணுது
(வசந்த)
---கவிநயா
அழகான வரிகள்
ReplyDeleteநன்றி அக்கா !
மிக்க நன்றி ஷைலன்!
Delete