Monday, April 3, 2017

எண்ணத்தில் இனிப்பவள்


கீதாம்மா தன் இனிய குரலில்...சந்த்ரகௌன்ஸ் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

கண்ணுக்குள் மணியாக உன்னை வைத்தேன், அம்மா
கவிதைக்குள் கருவாக பாடி வைத்தேன்
(கண்ணுக்குள்)

கிண்ணத்தில் மது போலே எண்ணத்தில் இனிப்பவளே!
அன்னத்தின் வடிவழகே, ஆயிரம் நிலவழகே!
(கண்ணுக்குள்)

வினையின் பயனாலே விதி வலையில் விழுந்தேன்
கதி நீயே என்று கண்ட பின்னே தெளிந்தேன்
பதமே சதமென்று காலடிகள் தொழுதேன்
உனதருளை வேண்டி தினந் தினமும் அழுதேன்
(கண்ணுக்குள்)



--கவிநயா

2 comments:

  1. "வினையின் பயனாலே விதி வலையில் விழுந்தேன்
    கதி நீயே என்று கண்ட பின்னே தெளிந்தேன்
    பதமே சதமென்றி காலடிகள் தொழுதேன்
    உனதருளை வேண்டி தினந் தினமும் அழுதேன் ! "

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்!

    ReplyDelete