கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
கற்றது எதுவும்
கை கொடுக்க வில்லை
பெற்றதும் மற்றதும்
வழி நடத்த வில்லை
சிற்றிடை மருங்கினில் செய்யப்பட்டு மின்னும்
சிற்றிடை மருங்கினில் செய்யப்பட்டு மின்னும்
பற்றெதும் அற்றவளே,
பற்றினேன் உன் பதமே
(கற்றது)
காடே கதியென்று
தவமிருப் போருண்டு
நீயே கதியென்று
துதித்திருப் போருண்டு
வீடே கதியென்று
பவவினையில் உழன்று
வீழ்ந்தேன் கடையேனைக்
காப்பாய் நீயின்று
(கற்றது)
கற்றோரும் அறியா
கருணைக் கடல் நீயே
மற்றோரின் தூய
மனதில் எழுந் தீயே
பொற்றா மரைத்தாளில்
பணிந்தேன் திருத் தாயே
வற்றாத அருட் சுனையே
வருவாயே
(கற்றது)
--கவிநயா
"காடே கதியென்று தவமிருப் போருண்டு
ReplyDeleteநீயே கதியென்று துதித்திருப் போருண்டு
வீடே கதியென்று பவவினையில் உழன்று
வீழ்ந்தேன் கடையேனைக் காப்பாய் நீயின்று"
அழகான வரிகள்
நன்றி அக்கா !
மிக்க நன்றி, ஷைலன்!
Delete