Monday, September 11, 2017

சின்னக் கண்ணம்மா


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

சின்னச் சின்னக் கண்ணம்மா

சேதி என்ன சொல்லம்மா

வண்ண வண்ணக் கண்ணம்மா

வாய் திறந்தால் என்னம்மா?

(சின்ன)



தேவரெல்லாம் போற்றிடுவார்

தேவியுன்னை வாழ்த்திடுவார்

தென்றலேஉன் பாதங்களில்

தீபங்களை ஏற்றிடுவார்

(சின்ன)



பாலையென வந்தவளே

பாவங்களைப் போக்கிடுவாய்

சோலையென வந்துஎங்கள்

சோகங்களை நீக்கிடுவாய்

(சின்ன)



அசுரர்களை அழிக்க

ஆயுதம் ஏந்தி நின்றாய்

ஆனந்தத்தை அளிக்க

அன்னை வடிவாக வந்தாய்

(சின்ன)

--கவிநயா 

2 comments:

  1. பாலையை நானும் இப்படி கெஞ்சட்டுமா ?

    பஞ்சுப்பதமென் சிரத்தில்

    கொஞ்சம் நீ பதிப்பாயோ ?

    அஞ்சல் என்றே என்னை

    நெஞ்சோடு அணைப்பாயோ?

    ReplyDelete
  2. ம்... நல்லாருக்கு லலிதாம்மா!

    ReplyDelete