உன்னை எண்ணும் போதில் எந்தன் உள்ளம் துள்ளுதே
உன்னைப் போற்றிப் பாடச் சொல்லித் தமிழும் சொல்லுதே
உன்னை எண்ணும் போதில் உள்ளக் கமலம் மலருதே
உந்தன் பாதம் தன்னில் வைத்துக் கண்டு மகிழுதே
(உன்னை)
உறவுகளில் நிலையான உறவு நீயம்மா
உயிர்களெல்லாம் பிள்ளையாகக் காக்கும் தாயம்மா
சித்தத்திலே சிரித்தாடும் தெய்வம் நீயம்மா, அந்தப்
பித்தனோடு எம்மை என்றும் காக்கும் தாயம்மா
(உன்னை)
உன்னை அன்றித் துணையும் இல்லை உள்ளம் உணருதே
உந்தன் பாதம் சரணமென்று தினமும் புகலுதே
பற்றை விட்டு உன்னைப் பற்ற உள்ளம் விழையுதே
உன்னை மட்டும் பற்றி உந்தன் அருளை வேண்டுதே
(உன்னை)
--கவிநயா
நேற்றைக்கு இங்கே மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்பம் கண்டருளல்! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பாடலைப் படிக்கவும் பின்னூட்டம் எழுதவும் வாய்த்ததில் மகிழ்ச்சி அம்மா!
ReplyDeleteஆஹா, உங்களைப் பார்த்ததிலும் மிகவும் மகிழ்ச்சி! பின்னூட்டத்திற்கு நன்றி. அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்!
ReplyDelete