Monday, January 7, 2019

தயவுடன் காப்பாய்



உன்னடி பணிந்திட உமையே அருள்வாய்
உன் புகழே பாட வரம் நீ தருவாய்
(உன்னடி)

சிவனில் ஓர் பாதி
அகிலத்தின் ஆதி
பரமேஸ்வரி நீயே
பரிவுடன் காப்பாயே
(உன்னடி)

பகலவனின் ஒளியே
பனி பொழியும் மதியே
இகபர சுகம் யாவும்
இசைவுடனே அளியேன்
(உன்னடி)

தினந் தினமும் உனையே
நினைந்துருகும் பணியே
தந்திடுவாய் தாயே
தயவுடன் காப்பாயே
(உன்னடி)



--கவிநயா

1 comment:

  1. ஒவ்வொரு கவிதையிலும் அம்பாளின் திருவுருவ படங்கள் அருமை. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete