எண்ணாதிருந்தாலும் அருளுவையே, என்னைக்
கண்ணால் பணித்தாண்டு அருள் உமையே
(எண்ணாதிருந்தாலும்)
விண்ணாதி தேவரொடு, மன்னாதி மன்னவரும்
அண்ணன் கோவிந்தனும் அன்னையென வணங்கிடும் நீ
(எண்ணாதிருந்தாலும்)
உலகினில் உழலுகின்றேன், உன்னை எண்ணும்
எண்ணமின்றி
பிறவியில் மயங்குகின்றேன், உன்னைப் போற்ற
நேரமின்றி
பேதையின் புலம்பலுக்குக் கோதை நீ வருவாயோ
வாதையைத் தீர்த்திடவே தாயுன் மடி தருவாயோ
(எண்ணாதிருந்தாலும்)
--கவிநயா
No comments:
Post a Comment