Tuesday, July 28, 2020

எழுந்தருள்வாய்


ஏங்கி அழைக்கின்றேன், எழுந்தருள்வாய்!

ஏழை அழைக்கின்றேன், ஏந்திழையே, எழுந்தருள்வாய்!

(ஏங்கி)

 

பாற்கடல் பரந்தாமன் சோதரி, பார்வதி

பார்த்திட கடைப் பார்வை, தீர்த்திட என் பிறவி

(ஏங்கி)

 

பணிவில்லை பக்தியில்லை, உன்னை எண்ணும் எண்ணம் இல்லை

அறிவில்லை, ஆசையில்லை, உன்னிடத்தில் நேசம் இல்லை

பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல

நான் செய்யும் கவி கேட்டு, நாயகியே வருவாயோ?

(ஏங்கி)


--கவிநயா


4 comments:

  1. பாட்டெழுதிப் பரவுவதும் உன் பதமே - இவள்
    நாட்டியமாய் ஆடுவதும் உன் துதியே.
    ஆடிப் பரிசாய் பிறந்த அன்புமகள்
    தேடி நாடி நண்ணுவதுன்
    சன்னிதியே.

    வாரமொரு அமுதக் கவி
    பொழிகின்றாள் - தாயே!
    பார்வதி! உன் மஹிமையே மொழிகின்றாள்.
    பாரதியின் வாரிசெனத்
    திகழ்கின்றாள்.
    ஈரெட்டும் ஈந்து அவள்
    நலங் காப்பாய்!

    அன்பு மகள் கவிநயாவுக் கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல

    நான் செய்யும் கவி கேட்டு, நாயகியே வருவாயோ?


    அருமை

    ReplyDelete
  3. லலிதாம்மா, நீங்க வாழ்த்து சொல்லியிருப்பீங்கன்னு தெரியும்! பார்க்கவே ஓடி வந்தேன்! அன்புக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்

    ReplyDelete
  4. உங்கள் வாழ்த்து மிகவும் அருமை அம்மா. கண் பனிக்கச் செய்யும் உங்கள் அன்பு, அவள் ஆசியே.

    ReplyDelete