உனதருளே
உலகினிலே உலவிடுதே
உனதருளால்
உயிர்களெல்லாம் வாழ்ந்திடுதே
(உனதருளே)
உமை
நீயே இமை போலே காப்பதினால்
சுமை
கூடச் சுகமாகத் தோன்றிடுதே
(உனதருளே)
தங்க
நிறப் பாதம் அதைத் தந்து விட்டால் போதும்
தஞ்சம்
என்று உன்னைத் தானே நாடி வந்தேன் நானும்
கமலம்
போல விழிகள் கவின் மிகும் உன் மொழிகள்
செந்தமிழால்
பாடப் பாட தீர்ந்து விடும் வலிகள்
(உனதருளே)
--கவிநயா
இனிய புத்தாண்டில் எல்லா வளமும், நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வு பெறவும் அம்மாவின் அருள் பெற வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteமிக்க நன்றி, ஷைலன். புதுவருடம் உங்களை மறுபடி அழைத்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து உங்களை இங்கு பார்க்கலாம் என்று நம்புகிறேன். உங்களுக்கும் அன்னை எல்லா நலன்களையும் அருளட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete