Monday, February 1, 2021

அற்புதம் நீ

 

எத்தனை துன்பம் வந்தாலும்

 உனை மறவாத வரம் வேண்டும்

இத்தரை இன்பபுரி ஆனாலும்

 உனை மறவாத வரம் வேண்டும்

(எத்தனை)

 

கற்பனை என்பார் சில பேர்கள்

கற்சிலை என்பார் பல பேர்கள்

அற்புதம் நீயென் றறியாமல்

பொற்பதப் பெருமை புரியாமல்

(எத்தனை)

 

கருப்பொருள் நீயே கருமாரி

உருப்பட வைப்பாய் அருள்மாரி

விருப்புடன் வந்தேன் உனை நாடி

பொறுப்புடன் காப்பாய் மகமாயி

(எத்தனை)



--கவிநயா


2 comments:

  1. எத்தனை துன்பம் வந்தாலும்

    உனை மறவாத வரம் வேண்டும்!
    எனக்கும் அம்மா .

    அழகான வரிகள் , நன்றி அக்கா !

    ReplyDelete