அம்மா உன்னருளாலே உலகம் இயங்குது, அந்த
உலகத்திலே வாழுமென்றன் உள்ளம் கலங்குது
பந்தம் என்றும் பாசம் என்றும் பற்றித் தயங்குது
உன்னைச் சொந்தம் கொண்டதாலே கொஞ்சம் தெளியுது
அம்மா உன் நாமந்தானே நாவில் உலவுது
அதைச் சொல்லச் சொல்லக் கண்களிலே நீரும்
பெருகுது
திருமுகத்தை நினைக்கையிலே உள்ளம் குளிருது
அந்தக் குளிர்ச்சியிலே மேனியெங்கும் புளகம்
அரும்புது
திருவடிகள் பணிந்தவர்க்குத் துன்பங்கள் இல்லை
உன் எழில் வடிவம் காண்பதுவே இன்பத்தின் எல்லை
துயரமற்ற வாழ்க்கை யென்று இங்கெதும் இல்லை
தாயுன்றன் துணையிருந்தால் தொல்லைகள் இல்லை
No comments:
Post a Comment