செக்கச் சிவந்திருக்கும் கமலத்திலே
செந்தாமரையின் வடிவத்திலே
ஸ்ரீலக்ஷ்மி தாயார் வீற்றிருப்பாள்
என்றன் சிந்தையிலும் அவள் கொலுவிருப்பாள்
மாலவனின் மார்பில் மணியாவாள்
கோல எழில் தேவி ஒளியாவாள்
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியாவாள்
பணிந்திடும் பக்தருக்குப் பெருநிதி அவளாவாள்
ஆதிலக்ஷ்மியும் கஜலக்ஷ்மியும் தனலக்ஷ்மியும்
அவளாவாள்
தான்ய தைர்ய சந்தான விஜய வித்யா லக்ஷ்மியும்
அவளாவாள்
அஷ்ட லக்ஷ்மிகளும் அவளாவாள்
மஹாலக்ஷ்மியும் அவளாவாள்
இஷ்ட லக்ஷ்மியும் அவளாவாள்
கஷ்டம் நீக்கிடும் தாயாவாள்
ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி
ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி
ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி
ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி
--கவிநயா
No comments:
Post a Comment