பலவிதமாய்ப் பாடுகிறேன் தாயே, உன்றன்
புகழை சந்தத் தமிழினிலே நானே
(பல)
அடியவர்கள் கூட்டம் என்றும் அதைக் கேட்கும்
அடியவளின் கூவும் குரல் கேட்காதோ உனக்கும்
(பல)
பற்று வைத்தேன் தாயே, அதைத் திருப்பிடு உன்மேலே
பந்தம் கொண்டேன் தாயே, உன்னைச் சொந்தமாக்கு
நீயே
வினைகளெல்லாம் ஓடிவிடும் சரணமென்றால் தாயே
விதியுமுன்றன் அடிமை கொஞ்சம் மனது வைத்தால்
நீயே
(பல)
--கவிநயா
No comments:
Post a Comment