Sunday, April 1, 2007

"காமாக்ஷி அம்மன் விருத்தம்" -1


இன்று பங்குனி உத்தர நன்நாள்~!

காஞ்சியில் மாமரத்தடியில் அமர்ந்து, மண்ணால் சிவலிங்கம் பிடித்துப் பூசித்த காமாக்ஷி அம்மனை, கச்சி ஏகம்பன் கைப்பிடித்த திருநாள்!

இன்று தொடங்கி அடுத்த 11 நாட்களுக்கு காஞ்சி காமாக்ஷி அம்மன் விருத்தம் எனும் தெள்ளுதமிழ் பாசுரம் தினம் ஒன்றாக வெளியிடப்படும்.

இதற்கு விளக்கமே தேவையிருக்காது![என நம்புகிறேன்!]. தேவைப்படும் போது வரும்!

மற்றவர்கள் மன்னிக்க!
:)

காமாக்ஷி அம்மன் விருத்தம்

கணபதி காப்பு

மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷி மிசை
துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பணி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.



[துங்கம்= உயர்ச்சி, பெருமை]; திங்கள்= நிலவு; பணி= பாம்பு; கயமுகன்= ஆனை முகத்தோன்; ஐங்கரன்= துதிக்கையுடன் சேர்ந்து ஐந்து கைகளுடைய பிள்ளையார்]

பதிகம்:

நாளை வரும்!

ஜெய ஜெய காமாக்ஷி!

10 comments:

  1. SK ஐயா...
    காமாக்ஷி அம்மன் விருத்தம் இயற்றியவர் பெயரும் நாங்கள் எல்லாம் அறியச் சொல்லுங்களேன்!

    பங்குனித் திருவிழா பதிக மாலையா அம்பாளுக்கு! அற்புதம்!!

    ReplyDelete
  2. கச்சிநகர் = காஞ்சிபுரம்.

    ReplyDelete
  3. பதினோரு நாள் விரதம் உண்டா.
    புதிய செய்தி. எஸ்.கே.

    தினமும் படிக்கக் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. இதுவரை அறியாத பாடல்கள் எஸ்.கே. தொடர்ந்து படித்து மகிழ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. இயற்றியவர் பெயர் தெரியவில்லை திரு. ரவி!
    :(

    அவர் பெயர் எங்குமே இல்லை.
    பிரதியும் என்னிடம் இல்லை.

    ஒரு 30 ஆண்டுகளாக தினமும் சொல்லிவரும் திருப்பதிகம் இது.
    நினைவில் இருந்துதான் இதனைத் தருகிறேன்.

    ReplyDelete
  6. குமரன், ஜி.ரா. மூலமாக கச்சி ஏற்கெனவே நம் வலை நண்பர்களுக்குத் தெரியுமென்பதால் விட்டேன்.

    [கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம்]

    சுட்டியதற்கு நன்றி, ஓகையாரே!

    ReplyDelete
  7. விரதம் இல்லை வல்லியம்மா.

    மொத்தம் பதினொரு பாடல்கள்[காப்பையும் சேர்த்து] என்பதால், தினம் ஒன்றாகப் பதிய எண்ணம்.

    மிக, மிக உரிமை எடுத்துக் கொண்டு காமாக்ஷியை வம்புக்கும் சண்டைக்கும் இழுத்துப் போற்றும் பதிகம் இது.

    சொந்த அம்மாவிடம் பிள்ளைகள் சண்டை போடுவது போல!

    ReplyDelete
  8. இதை அதிகம் பேர் படிக்கக் கேட்டதில்லை என்பதாலும், பாடலின் சிறப்பு கருதியுமே[வல்லியம்மாவுக்கு எழுதியதைப் படிக்கவும்] பதிக்கத் துணிந்தேன், குமரன்!

    நன்றி, இடமளித்தமைக்கு!

    ReplyDelete
  9. ஒவ்வொரு பாடலும்

    'அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே"

    என்று முடியும் பதிகத்தையா குறிப்பிடுகிறீர்கள் ?
    படிக்கவும், கேட்கவும் மிக நன்றாக இருக்கும்.

    ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  10. அதுவேதான் ஜெயஸ்ரீ!

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது!

    ReplyDelete