Friday, October 12, 2007

மதுரை அரசாளும் மீனாட்சி - நவராத்திரிப் பாடல் 2


மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி (மதுரை)

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி? (மதுரை)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி (மதுரை)


பாடலை இங்கே கேட்கலாம்.

7 comments:

  1. குமரா!
    நல்ல பாடல், சீர்காழியிலே எனும் போது சீர்காழியார் ஓர் அழகான முத்திரை அழுத்தம் கொடுப்பர்.
    ரசிப்பேன்.

    ReplyDelete
  2. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    சீர்காழியிலே எனும் போது சீர்காழியார் ஓர் அழகான முத்திரை அழுத்தம் கொடுப்பர்//

    பாட்டில் "திரிபுரசுந்தரி சீர்காழியிலே" என்று வரும் போது, சீர்காழியும் குழைவார்! அவர் சொந்த ஊர் பாசம் ஆச்சே! சும்மாவா?

    இந்தப் பாட்டு சினிமாவில் மட்டும் அல்லாது, மேடைக் கச்சேரிகளிலும் பாடப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும் மதுரை சோமு அண்ணா பாடிக் கேட்க எவ்வளவு சிறப்பு!
    மதுரை சோமு பாடுகிறார் இங்கே, ஆனால் வித்தியாசமான கர்நாடக மெட்டில்
    http://www.musicindiaonline.com/p/x/A4X2Qu_zHt.As1NMvHdW/


    --------------------------------------------------------------------------------

    ReplyDelete
  3. ரவி!
    நான் மதுரையாரின் ''என்ன? கவி பாடினாலும்'' கேட்டுக்கொண்டு இருக்க
    அவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.
    இப்போ கரகரப்பிரியாவில் குழைகிறார்.
    'பக்கல நிலப்படி' பாட...
    வேலையால் வந்து கீதத்தில் நனைகிறேன்.
    அலுத்த உடம்புக்கு ஒத்தடம் போல் உள்ளது..

    ReplyDelete
  4. அருமையான பாடல். நவராத்திரி வைபோகம் திரு குமரன் அவர்களால் தொடங்கியிருக்கிறது. அப்படி என்றால் இன்னும் நல்ல பாட்டுக்கள் வரும் என எதிர் பார்கலாம்.

    ReplyDelete
  5. ஆமாம் யோகன் ஐயா. நானும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கவனித்தேன். சீர்காழியார் சீர்காழியிலே என்னும் போது நன்கு பாடுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  6. இரவிசங்கர். நீங்கள் இந்தப் பாடலை ஏற்கனவே ஆடி மாதத்தில் இட்டுவிட்டீர்கள். தெரியாமல் நானும் இப்போது நவராத்திரிக்கு இட்டுவிட்டேன். :-)

    முன்பு நீங்கள் இட்ட இடுகையிலும் மதுரை சோமு அவர்கள் பாடியதைத் தந்திருந்தீர்கள். கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. அன்புத்தோழி. நவராத்திரி வைபவம் இரவிசங்கரால் தான் தொடங்கப்பட்டது. நேற்றைய இடுகையைப் பாருங்கள்.

    நீங்களும் உங்கள் பங்கிற்கு இடுகை இடவேண்டும்.

    ReplyDelete