Wednesday, October 17, 2007

நவராத்திரி பாடல் அகரமுரல எழுத்தெல்லாம்

நவராத்திரி வைபோகத்தை ஒட்டி எல்லாரும் போட்டு கலக்குகிறார்கள். நானும் என் பங்குக்கு சரஸ்வதி சபதம் படத்தில் வரும் அகர முதல எழுத்தெல்லாம் என்கிற பாட்டை போடலாம் என்றிருக்கிறேன். இந்த பாட்டில் ஒவ்வொரு வரியும் ஆரம்பிக்கும் போது உயிர் எழுத்துக்கள் வரிசையாக வரும். இந்த பாட்டு சரஸ்வதியைப் பற்றியது. ஊமையாக இருக்கும் சிவாஜிக்கு பேச வைத்தும், அறிவுத்திறணையும் கொடுத்து அவனை கவிஞன் ஆக்குகிறாள். அதற்கு நன்றி செலுத்தும் விதத்தில் சிவாஜி இப்பாடலை சரஸ்வதியின் சிலை முன் பாடுகிறார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன், பாடியது டி எம். சௌதராஜன், எழுதியது கண்ணதாசன். இப்படத்தை எடுத்தவர் ஏ பி நாகராஜன். இப்படம் வெளியான வருடம் 1966.



அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி (அகர)

ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி (அகர முதல)

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
(அகர முதல)

எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும், தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் பார்த்தது
யானை சேனை படையுடன் வேந்தது

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயிலாத பிள்ளையென்று வாயில்லாத
ஊமையென்று ஆயிரங்களான கல்வி
வாய்திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன் தேவி


குறிப்பு; எங்காவது தவறாக எழுதியிருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்.

3 comments:

  1. அழகான பாடல் அன்புத்தோழீ!
    நடிகர் திலகம் சிவாஜி பாடுவதைப் பார்க்கும் போது, சிலிர்க்கும்!
    உயிரெழுத்துக்கள் ஒவ்வொன்றாய் (அகர முதலியாய்) ஒவ்வொரு வரியிலும் வருவதும் சிறப்பு!

    வீடியோ-வை பின்னாடி இணைச்சீங்க போல! முதலில் காணவில்லை! ஆனாப் பின்னூட்டம் போட வந்த போது ரெடியா இருக்கு! :-))

    ReplyDelete
  2. நன்றி திரு. KRS. எல்லாத்தையும் கவனிச்சிட்டீங்களா? ;-))

    ReplyDelete
  3. அகர முதல் எழுத்தெல்லாம் அறிய வைத்தீர் அன்புத்தோழி. நன்றி.

    ReplyDelete