Thursday, August 7, 2008

ஆடி வெள்ளி: ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!

ஆதிபராசக்தி-ன்னு ஒரு படம் வந்துச்சி ரொம்ப நாள் முன்னாடி! எப்போன்னு எல்லாம் எனக்குத் தெரியாது! ஆனா சின்ன புள்ளையா இருக்கச் சொல்ல, டீவில போட்டுக் காட்டுவாய்ங்க! அதுல ஒரு சூப்பர் சீன்!

மீன்காரச் செம்படவன் சுருளிராஜன், அம்பாளைப் பார்த்த மாத்திரத்தில், மனசே உருகிப் போய் பக்தி பண்ணக் கூடிய நல்ல உள்ளம்!
இத்தனைக்கும் தான் பண்ணுறது பக்தி-ன்னு கூடத் தெரியாது! ஏதோ அம்மா-ன்னா அம்புட்டுப் பாசம்! அம்புட்டு தான்!
நம்பியார் (சாமியார்) தினமும் ஆத்துல போய் ஏதோ மந்திரம் சொல்லிக்கிட்டே குளிப்பார். அதை பார்த்த சுரளிராஜன் சாமி என்ன பண்ணறீங்கனு கேட்பார்.
இவரு ஏதோ மந்திரம் சொல்லி அதை சொல்லி மூச்சை அடக்கி தண்ணில மூழ்கி எழுந்திரிச்சா சாமி கண்ணுக்கு முன்னாடி வருவானு சொல்லுவார்.
சுரளிக்கு அந்த மந்திரம் வாய்லயே வராது. அதனாலா மாரியாத்தா காளியாத்தானு சொல்லு போதும்னு சொல்லிடுவாரு.

இவருக்கு படையலுக்கு நேரமாகிட்டே இருக்கும். அதனால சுரளிக்கிட்ட இருந்து சீக்கிரம் தப்பிக்கனும்னு வேக வேகமா சொல்லுவாரு.
சாமி கண்ணுக்கு தெரியுமானு சுருளி திரும்பவும் கேட்பாரு. அதுக்கு நம்பியார், நிச்சயம் தெரியும்னு சொல்லிடுவாரு :-)

இவரும் மாரியாத்தா காளியாத்தானு சொல்லி மூச்சை அடக்கி மூழ்க ஆரம்பிப்பாரு. முதல்ல சாமி வராது. ஒரு வேளை நம்ம சரியா அடக்கலயோனு ரொம்ப நேரம் மூச்சையடுக்குவாரு. கொஞ்சம் விட்டா ஆளே அவுட்ங்கற நிலைமை வரும் போது,
அப்போ அவரின் உறுதியை மெச்சி, அன்னை காட்சி கொடுத்து, அவர் குடிசைக்குத் தானே வருவாங்க!

அன்னையைக் கையும் ஓடாம, காலும் ஓடாம, அவங்க உபசரிக்கிற அழகு! அவளுக்குச் சோறு ஊட்டுகிற அழகு! அன்னையும் அவர்களும் பேசிக் கொள்ளும் உரையாடல்!
அதன் பின்னால் மந்திர கோஷ்டியின் ஆலயத்தில் போய் பார்க்கும் போது, அன்னையின் நைவேத்திய பிரசாதங்களை, அவர்கள் வச்சிக் கட்டும் காட்சி...
அதைப் பார்த்து சுருளி மயக்கம் போட்டு விழாத குறை-ன்னு அத்தனை சீனும் சூப்பரா இருக்கும்! :))
நீங்களே பதிவின் இறுதியில் வீடியோவில் பாருங்க!


அதுக்கு முன்னாடி இன்றைய ஆடி வெள்ளி ஸ்பெஷல்...சுருளி பாடும் அழகான பூவாடைக்காரி பாட்டு! ஆத்தா வரலையே-ன்னு ஏக்கத்துல பாடுறதை, சீர்காழி தன் கணீர் குரலில் வெளிப்படுத்தி இருப்பாரு!
நடுநடுவே லலிதா சகஸ்ர நாமத்தில் இருந்து மந்திர உச்சாடனங்கள்! அதையும் கொடுத்துள்ளேன்!

ஆடி வெள்ளியன்று கேட்டு மகிழ்ந்து, உங்கள் வீட்டுக்கும் அன்னையை வரச் சொல்லி வேண்டுங்கள்!

எங்கள் வாழைப்பந்தல் கிராமத்துப் பச்சையம்மனுக்கு, ஆடி மாசம் கூழு ஊத்திப் பொங்கலிட்டு, வெல்லம் கலக்காது, கோயிலில் படைப்போம்!
பூவாடைக்காரியைப் பச்சைப் புடைவையில் ஒரு பெண் உருவம் போல் சுற்றிச் சுற்றி அம்மா கட்டுவாங்க! அதற்கு காதோலை கருகமணி சார்த்தி, வேப்பிலை முறத்தில் ஏற்றி, அந்த அம்மனை வீட்டுக்கு அழைத்து வருவோம்!

வீட்டுக்கு வந்து இன்னொரு முறை பொங்கலிட்டு, அப்போது வெல்லம் கலந்து, படைப்போம்!
வெல்லம் இல்லாத பொங்கலைக் கோயிலில் உண்டவள், வெல்லச் சுவைப் பொங்கலும் உண்ண வீடு தேடி வருவாள் என்பது சுவையான கற்பனை!
படையலை இலையில் படைக்காது, பூசையின் முன்னால், வெறும் தரையில் பரப்பிப் படைப்பதும் கிராமத்து வழக்கம்!

(இதே தரையில் படைக்கும் வழக்கம், திருப்பாவாடை என்று தனியாக ஒரு சேவை வைத்து, திருவேங்கடமுடையான் சன்னிதியில் படைக்கிறார்கள்! இந்த முறை இந்தியப் பயணத்தில் தான் பார்க்க நேர்ந்தது! கிராமத்து வழக்கம் இங்கே எப்படி? என்று வியந்து போனேன்...பிறகு சொல்வேன்)

வெறும் சோறோ, சாதாக் குழம்போ, சர்க்கரைப் பொங்கலோ...சட்டியுடன் அன்னையின் முன்னால் வைத்து, நாலு வேப்பிலை கிள்ளிப் போட்டு, "பூவாடைக்காரி தாயே பாலு", என்று கும்பிட்டு உண்பது, இன்றும் எங்கள் கிராமத்து வீட்டில் உண்டு!
அந்த கூழும், வெல்லம் வச்ச அரிசிச் சோறு உருண்டையும் இன்னும் அடியேன் நாவில் இனித்துக் கொண்டு தான் இருக்கு!


* இதோ பாடல்! ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!
(சிறிது விளம்பரத்துக்குப் பின் தான், பாட்டு வருது!)

** இன்னொரு சுட்டி, விளம்பரம் இல்லை! ஆனால் நீங்கள் கிளிக்கி, கேட்க வேணும்! இதோ!
அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்
அனிமாதி அபிர வ்ருத்தாம்
மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்
த்யாயேத் பத்மாசன ஸ்தாம்


பூவாடைக் காரி பொன்னழகி உனக்குப்
பொங்கலிடக் கிடைச்சது பாக்கியம் எனக்கு
மீன்காரன் வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்-அடி
மீனாட்சி நீ வந்தா நெய்வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

(ஆத்தாடி மாரியம்மா)

ஸ்ரீ வித்யாம் சாந்த மூர்த்திம்!
சகல சுர நுதாம்! சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்!

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்
பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்
மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

(ஆத்தாடி மாரியம்மா)

ச குங்கும லேபன, மல்லிகா சும்பி கஸ்தூரிகாம்!
சமந்த ஹசி தேட்சணாம், ஹரி ஹராம், ராஜ ராஜேஸ்வரீம், அம்பிகானாம்!


சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி-புது
சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ர காளி ருத்ர காளி பாரடியம்மா-இந்தப்
பாவி மகன் வீட்டுல வை ஓரடியம்மா!
(ஆத்தாடி மாரியம்மா)

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: ஆதிபராசக்தி
இசை: கேவி மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்


என்னாங்க, ஆத்தாளை வீட்டுக்குக் கூப்பிட்டாச்சா?
ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!
ஆத்தா, பொன்னி அரிசி, இங்கு யானை விலை, குதிரை விலை விக்குது!
பத்து கிலோ பை, 22 டாலருக்கு விக்குறாங்க! அதுனால ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், தின்னு புட்டுப் போடியம்மா! :))


12 comments:

  1. ஆஹா, கண்ணா. மனசை டச் பண்ணீட்டிங்க! எனக்கு ரொம்பப் பிடிச்ச காட்சியும் பாட்டும். நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்துல இந்த படத்தை பார்த்தேன். மீண்டும் பார்க்க/கேட்க தந்தமைக்கு நன்றி.

    ஆத்தாடி மாரியம்மா! - எங்க
    வீட்டுக்கும் நீ வாடியம்மா!

    ப்ளீஸ்!!!!! ஓரளவு சாப்பிடற மாதிரியே பொங்கல் வைப்பேன்.

    ReplyDelete
  2. நீங்க பானை வைக்கப் போறது எனக்குத் தெரியாது ரவி.

    குமரன் யாருமே பானை வைக்கலைன்னு ஒரு செய்தி சொன்னாரு.

    சரின்னு, அவசர அவசரமா ஒரு பானை வைச்சேன்.

    போட்டதுக்கு அப்புறம் பார்த்தா ஏற்கெனவே ஒரு நல்ல பானை வைச்சுருக்கீங்க!

    சரி, பரவாயில்லை, ஒரு சின்ன பானையா இருந்திட்டுப் போகட்டும்னு அப்படியே விட்டுட்டேன்.

    பாட்டெல்லாம் ரொம்பவே அருமை.... உங்க பானையில!

    ReplyDelete
  3. //"அம்பாளுக்கு நைவேத்தியம் செய்தா, அதை அவள் உண்ண வருவா! அப்போ பார்த்து விடலாம்" என்று சில அறிவு-சால் மந்திர வல்லுனர்கள், பூஜா விதிகளில் வித்தகர்கள், சுருளிராஜனிடம் சொல்லி வைப்பார்கள்! கொஞ்சம் கேலியாக!

    அவரும் வெள்ளந்தியாக, நீங்க தினமும் அப்படிப் பண்ணும் போது பார்ப்பீர்களா என்று கேட்டு வைக்க, ஆமாம்-ஆமாம் என்று சிரித்துக் கொண்டே சுருளியை ஏத்தி விடுவார்கள்!
    அதை உண்மை என்று நம்பிய சுருளி, வூட்டுல பொங்கல் வச்சி, அம்பாளைக் கூப்பிட, அவளோ வரவே மாட்டா! சுருளியின் மனைவியும் எவ்ளோ கூப்ட்டு பாப்பாங்க! ஹூஹூம்!

    மனசு ஒடிஞ்ச போன சுருளி, ஆத்துல மூழ்கப் போவாரு!
    அப்போ அவரின் உறுதியை மெச்சி, அன்னை காட்சி கொடுத்து, அவர் குடிசைக்குத் தானே வருவாங்க!
    அன்னையைக் கையும் ஓடாம, காலும் ஓடாம, அவங்க உபசரிக்கிற அழகு! அவளுக்குச் சோறு ஊட்டுகிற அழகு! அன்னையும் அவர்களும் பேசிக் கொள்ளும் உரையாடல்!//

    படத்தோட கதை தப்பு :-)))))

    படம் DVD வீட்டில இருந்தா போட்டு பார்க்கவும்...

    ReplyDelete
  4. //வெட்டிப்பயல் said...
    படத்தோட கதை தப்பு :-)))))
    படம் DVD வீட்டில இருந்தா போட்டு பார்க்கவும்...//

    ஆகா! தப்புன்னா மொதல்ல மன்னிக்கவும்! நினைவில் இருந்து தான் எழுதினேன் பாலாஜி!

    படத்தோட சரியான கதையைச் சொல்லுங்க! பதிவில் திருத்தி விடலாம்! மத்தவங்களும் சரியான கதையைப் படிப்பாங்க-ல்ல?
    (வீட்டுல டிவிடி இல்ல! நீங்க தான் இருக்கீங்க! :-)

    ReplyDelete
  5. எனக்கு கதை நினைவில்ல. ஆனா உங்க கதையும் நல்லாதான் இருக்கு :)

    ReplyDelete
  6. //கவிநயா said...
    ஆஹா, கண்ணா. மனசை டச் பண்ணீட்டிங்க! //

    :)

    //நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்துல இந்த படத்தை பார்த்தேன்//

    அப்ப நீங்களாச்சும் சொல்லுங்கக்கா, நான் சொன்ன படக் காட்சியில் என்ன தவறு-ன்னு!

    //ஆத்தாடி மாரியம்மா! - எங்க
    வீட்டுக்கும் நீ வாடியம்மா!//

    ஏன் அவ மட்டும் தான் வரணுமா?
    அவ கூட நானும் வாரேன்!

    //ப்ளீஸ்!!!!! ஓரளவு சாப்பிடற மாதிரியே பொங்கல் வைப்பேன்//

    அத நான் வந்து சாப்ட்டு பாத்துச் சொல்லுறேன்! :))

    ReplyDelete
  7. //VSK said...
    சரின்னு, அவசர அவசரமா ஒரு பானை வைச்சேன்//

    ஆகா...
    அது அவசரமான பானையா?
    அவள் ரசமான பானை-ன்னு சொல்லுங்க!

    என்னமா பாட்டு! அதுவும் அடியாருடன் முட்டித் தள்ளி தரிசனம்!

    //பாட்டெல்லாம் ரொம்பவே அருமை.... உங்க பானையில!//

    ஹிஹி!
    ரெண்டு பானையும் இப்ப காலி பண்ணி ஆகணும்! நான் கூழு ஊத்திக் ஊத்திக் குடிச்சிட்டேன்-பா! :))

    ReplyDelete
  8. நான் படம் பார்க்கலை.. ஆனா இந்தப் பாட்டை மட்டும் நிறைய தடவை கேட்டிருக்கேன்.. கதையை இப்பத்தான் கேக்குறேன்..

    சென்னைல மூலைக்கு மூலை "ஆத்தா.. ஆத்தா.."ன்னு லவுட் ஸ்பீக்கரை போட்டு கொல்றாங்க.. அமைதியா அவனவன் வீட்டுக்குள்ள ஆத்தாவை கும்பிட்டுக்கக் கூடாதா? வர மாட்டேன்னா சொல்லப் போறா..

    என்னவோ போங்க..

    ReplyDelete
  9. மன்னிக்கனும். இப்ப தான் பார்த்தேன்.

    நம்பியார் (சாமியார்) தினமும் ஆத்துல போய் ஏதோ மந்திரம் சொல்லிக்கிட்டே குளிப்பார். அதை பார்த்த சுரளிராஜன் சாமி என்ன பண்ணறீங்கனு கேட்பார்.

    இவரு ஏதோ மந்திரம் சொல்லி அதை சொல்லி மூச்சை அடக்கி தண்ணில மூழ்கி எழுந்திரிச்சா சாமி கண்ணுக்கு முன்னாடி வருவானு சொல்லுவார். சுரளிக்கு அந்த மந்திரம் வாய்லயே வராது. அதனாலா மாரியாத்தா காளியாத்தானு சொல்லு போதும்னு சொல்லிடுவாரு.

    இவருக்கு படையலுக்கு நேரமாகிட்டே இருக்கும். அதனால சுரளிக்கிட்ட இருந்து சீக்கிரம் தப்பிக்கனும்னு வேக வேகமா சொல்லுவாரு.

    சாமி கண்ணுக்கு தெரியுமானு சுருளி திரும்பவும் கேட்பாரு. அதுக்கு நம்பியார், நிச்சயம் தெரியும்னு சொல்லிடுவாரு :-)

    இவரும் மாரியாத்தா காளியாத்தானு சொல்லி மூச்சை அடக்கி மூழ்க ஆரம்பிப்பாரு. முதல்ல சாமி வராது. ஒரு வேளை நம்ம சரியா அடக்கலயோனு ரொம்ப நேரம் மூச்சையடுக்குவாரு. கொஞ்சம் விட்டா ஆளே அவுட்ங்கற நிலைமை வரும் போது, ஆதிபராசக்தி வருவாங்க :-)

    முதல்ல அவர் அவுங்களை நம்பவே மாட்டாரு. அப்பறம் ஒரு வழியா நம்ப வைச்சிடுவாங்க. அப்பறம் தான் வீட்டுக்கு சாப்பிட வர சொல்லுவாரு.

    ReplyDelete
  10. //வெட்டிப்பயல் said...
    மன்னிக்கனும். இப்ப தான் பார்த்தேன்//

    மிகவும் நன்றி பாலாஜி!
    பதிவில் உங்கள் வைர வரிகளை அப்படியே எடுத்துப் போட்டு மாற்றி விட்டேன்! :)
    அம்மனுக்கு, இன்று அடியேன் பதிவிலேயே வெட்டி ஸ்டைலும் சேர வேண்டும் என்று விருப்பம் போல! :)

    ReplyDelete
  11. //கவிநயா said...
    எனக்கு கதை நினைவில்ல. ஆனா உங்க கதையும் நல்லாதான் இருக்கு :)//

    நோ நோ!
    திரைக்கதை எழுதியவரு கோச்சிக்கிட்டூ கேஸ் போட்டா? :)

    கதையின் சாராம்சம் என்னமோ எளிய பக்தியாக இருந்தாலும் ஆழ்ந்த பக்தி என்றால் ஆத்தா வசப்படுவா என்பது தான்! அனாலும் cinema sequence-ன்னும் ஒன்னு இருக்குல்ல?

    நைவேத்தியம் காட்டும் போது ஆத்தா வருவா-ன்னு நம்பியார் சொல்லுவாரு-ன்னு நினைச்சிட்டேன்! ஏன்னா அந்தக் கடைசிக் காட்சியில் நைவேத்தியத்தை எல்லாரும் வெட்டு வெட்டுன்னு வெட்டுவாங்க பாருங்க! அதுவே நினைவில் நின்னுப் போச்சு! :)))

    வெட்டி சொன்னா மாதிரி அது மூச்சடக்கும் போது சொல்றது, நைவேத்தியம் போது அல்ல!

    ReplyDelete
  12. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //

    உண்மைத் தமிழன் அண்ணாச்சி
    உண்மைக் கதையை வெட்டி சொல்லிட்டாரு பாருங்க! இன்னொரு தபா படிங்க :)

    //சென்னைல மூலைக்கு மூலை "ஆத்தா.. ஆத்தா.."ன்னு லவுட் ஸ்பீக்கரை போட்டு கொல்றாங்க..//

    அதுவும் சில சமயம் பரீட்சை டைம்ல! :(

    //அமைதியா அவனவன் வீட்டுக்குள்ள ஆத்தாவை கும்பிட்டுக்கக் கூடாதா? வர மாட்டேன்னா சொல்லப் போறா..
    என்னவோ போங்க..//

    ஆகா...இதுக்கெல்லாம் அலுத்துக்கக் கூடாது அண்ணாச்சி!
    அவனவன் கேபிள் டிவியில சேனல் தெரிய வுடாம எல்லாம் கோல்-மால் பண்றான்!

    இவிங்க பாட்டையெல்லாம் சொந்த முய்ற்சி/சொந்த செலவுல தானே போடுறாங்க?
    என்னா கொஞ்சம் ஓவர் எந்து!

    இதுக்குத் தான் நல்ல குருசாமிகள், ஆலய அர்ச்சகர்கள், மடாதிபதிகள்-ன்னு ஆலயத்தின் தினப்படி வேலைகளில் தலையிட்டு, யாரையும் பாதிக்காத மாதிரி ஒழுங்கு படுத்தணும்!

    ஆனா அவிங்களுக்கு எல்லாம் சண்டை போடவும், விஐபிக்களைக் கவனிக்கவும், நிதி திரட்டவும்-ன்னே நேரம் சரியா இருக்கு! :(

    ReplyDelete