Monday, August 11, 2008
மதுரையிலே அவள் மீனாக்ஷி
வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி
துள்ளிச் செல்லும் மானழகி
அள்ளித் தரும் அன்பழகி
தங்கத் தமிழ்ப் பேரழகி
வைகைநதிக் கரை யோரம்
வாகாய்நீ வீற்றி ருப்பாய்
பொய்கையிலே தாமரை போல்
பூத்துச் சிரித்தி ருப்பாய்
மலையத் துவச னுக்கு
மகளாய் பிறந்து வந்தாய்
திக்விஜயம் செய்து வந்தாய்
திக்கெட்டும் வென்று வந்தாய்
சுந்தரரைக் கண்ட பின்னே
சொக்கிப்போய் காதல் கொண்டாய்
மனம்போல் மணம் முடித்தாய்
மதுரையை ஆண்டு வந்தாய்
மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி
பூவை உன்னைப் பார்த்திருந்தால்
பூவுலகம் மறக்குதடி
பாவை யுன்னைப் பாடிவந்தால்
பாவமெல்லாம் கரையுதடி
நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?
--கவிநயா
மீனாக்ஷி அம்மையின் படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/tamilnadu/madurai/meenakshi_en.htm
Subscribe to:
Post Comments (Atom)
மீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாருங்க. அம்மா கொள்ளை அழகு :)
ReplyDeleteபடத்தை கிளி-க்கி பாத்தாச்சிக்கா!
ReplyDeleteமீனாள் எம் தேனாள்!
ஆனாள் எம் கோனாள்!
//நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ?//
அருமை!
ஏக்கம் அருமை!
க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகையில் சிலிர்க்க
ReplyDeleteகூடவே ஓடியது இவ்வரிகளும்:
//நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?//
நல்லாயிருக்குங்க..
ReplyDelete/நீயேந்தும் கிளியாக
ReplyDeleteநான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?/
அருமையான வரிகள்
ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.
ReplyDelete//ஏக்கம் அருமை!//
ReplyDeleteநன்றி கண்ணா. உங்களுக்கு புரியுது. புரிய வேண்டியவளுக்கு...?
//க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகையில் சிலிர்க்க
ReplyDeleteகூடவே ஓடியது இவ்வரிகளும்://
ஆஹா :) வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
//நல்லாயிருக்குங்க..//
ReplyDeleteநன்றீங்க. ஆனாக்க, மதுரையம்பதியா இருந்துகிட்டு மீனாக்ஷி பாட்டுக்கு இம்புட்டு சுருக்கமா பின்னூட்டம் போட்டிருக்கீங்களே, நியாயமா? :)
//அருமையான வரிகள்//
ReplyDeleteவருக திகழ்மிளிர். அவளைப் பாட வேண்டுமென்று நினைத்தாலே பாடல் தானே எழுதிக் கொள்கிறது. மிக்க நன்றி.
//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.//
ReplyDeleteமிக்க நன்றி குமரா.
அன்னையைப் போல அழகேது?
அவள் அன்புக்கு நிகர்தான் ஏது?
அன்னையின் திருவடிகள் சரணம்.
//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.//
ReplyDeleteமிக்க நன்றி குமரா.
அன்னையைப் போல அழகேது?
அவள் அன்புக்கு நிகர்தான் ஏது?
அன்னையின் திருவடிகள் சரணம்.
\\கவிநயா said...
ReplyDeleteமீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாருங்க. அம்மா கொள்ளை அழகு :)
\\
ஆமாங்க கொள்ளை அழகு :)
\\மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி
\\
\\நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?
\\
:))
வாங்க ரம்யா!
ReplyDeleteநன்றி...நன்றி!
கிளி கையாளை கிளிக்கியதில் ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. :)
ReplyDeleteரொம்ப நன்னி கவிநயா அக்கா. :)
நல்லா இருக்கு கவி வர்ணனை!
ReplyDeleteஅன்புடன்,
ஜோதிபாரதி.
அடியேனும் வந்து அம்பாளை தரிசித்து விட்டேன் அருமையான பாடல் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்துள்ள அனனை மீனாக்ஷி மேல்.
ReplyDeleteநல்ல படம். நல்ல வரிகள்!
ReplyDeleteஆனால் ஏனோ, அவசரமாய் முடித்ததுபோல ஒரு தோற்றம்.
இந்தப் படத்தை வரைந்தவர் கொண்டையா ராஜு.
நல்வரவு அம்பி! அம்மாவுக்குதான் நன்றி சொல்லணும். உங்களை வரவழைச்சதுக்கு :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி!
ReplyDeleteவாங்க கைலாஷி. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.
ReplyDeleteவாசித்ததற்கும், படம் வரைந்தவர் பற்றி சொன்னதற்கும் நன்றி அண்ணா.
ReplyDeleteஇந்த வாரத்திற்கு அடியேனுடைய வலைபூவில் என்னையும் ஆண்டு கொள்வாய்! என்ற அன்னை மீதான பாடலை வாசிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDelete