Monday, August 4, 2008

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி


மாங்காட்டுத் திருத்தலத்தில்
காமாக்ஷி என்றபெயர்
கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா!

பூங்காற்றுபோல நெஞ்சம்
தழுவுகின்ற கருணையினால்
எமைஆட்சி செய்திருக்கும் அம்மா!

அக்கினியின் நடுவினிலே
முக்கண்ணனை வேண்டி
உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!

ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!

பற்றனைத்தும் விட்டுவிட்டு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!

இற்றைக்கும் ஏழேழு
பிறவிக்கும் உன்னடிகள்
போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!

மூவிரண்டு வாரங்கள்
மனமொன்றி வேண்டி நின்றால்
மறுக்காமல் அருள்கின்ற அம்மா!

நாவினிக்க உன்பெயரை
நாள்தோறும் பாடுகின்றேன்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!


--கவிநயா

பி.கு: அன்னை காமாக்ஷியின் திருவுருவப் படத்திற்கு கைலாஷி அவர்களுக்கு நன்றி.

15 comments:

  1. மாங்காட்டு அம்மாவின்
    மகத்தான கோலத்தைப்
    பூங்காற்றுக் கவிதையில்
    படைத்தவர் கவிநயா!
    வாழி நீர் வாழி!

    //இற்றைக்கும் ஏழேழு
    பிறவிக்கும் உன்னடிகள்
    போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!
    //
    liked these lines so much :)

    ReplyDelete
  2. என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. கவிதையும் படமும் அருமை அருமை.

    ReplyDelete
  3. /////இற்றைக்கும் ஏழேழு
    பிறவிக்கும் உன்னடிகள்
    போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!
    //
    liked these lines so much :)//

    தெரியுமே :) இதை எழுதும்போது உங்களையும் அவளையும் நினைச்சேன் :)

    வாழ்த்துக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  4. //என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. //

    மிக்க மகிழ்ச்சி ப்ரசன்னா :) ரசித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. //நாவினிக்க உன்பெயரை
    நாள்தோறும் பாடுகின்றேன்
    நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!//


    மானிடருக்கு இதைவிட வேறேன்ன வேண்டும்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  6. //மானிடருக்கு இதைவிட வேறேன்ன வேண்டும்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய்.

    ReplyDelete
  7. அன்னையின் திருவுருவ தரிசனம் அருமை. மிக்க நன்றி அக்கா. அன்னையின் தவக்கோலத்தை மாங்காட்டில் சென்று தரிசிக்கும் பாக்கியம் விரைவில் கிடைக்கவேண்டும்.

    ReplyDelete
  8. நன்றி குமரா. உங்கள் விருப்பம் கைகூட அன்னை அருளட்டும் :)

    ReplyDelete
  9. அம்மன் பாட்டு என
    அம்மா அம்மா எனக் கரையும்
    கவி நயா ! எழுதுகிறேன்
    கவிதை எனச் சொல்லிக்
    காணுவோர் கண்களில்
    கடலலையைக்
    கொண்டுவரும்
    விந்தையும் அந்த மாங்காட்டாள் உமக்களித்த‌
    வித்தையோ !

    சுப்பு தாத்தா.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  10. இந்தப் பாடலை மாங்காடு அம்மன் சன்னதியிலே
    பாடவேண்டும் என அடம் பிடிக்கிறாள் ஒரு நூறு வயதுக்கிழவி.
    இங்கே வந்து பாருங்கள்.
    http://ceebrospark.blogspot.com
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  11. //எழுதுகிறேன் கவிதை எனச் சொல்லிக் காணுவோர் கண்களில்
    கடலலையைக் கொண்டுவரும்
    விந்தையும் அந்த மாங்காட்டாள் உமக்களித்த‌ வித்தையோ !//

    சரியாதான் சொன்னீங்க சுப்பு தாத்தா; அம்மா தராட்டா சொத்து எங்கேருந்து வரும்? :)

    "எப்போ?"வையும் சிந்து பைரவியில் கேட்டு நெகிழ்ந்தேன். உங்களுடைய அன்புக்கும் ஆர்வத்துக்கும் மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. அன்னையின் அருட்சரிதத்தை அழகான கவிதையாக அவளுக்கு உகந்த ஆடி மாதத்தில் வர வைத்த அம்மனுக்கும் அதை பதிவிட்ட தங்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.

    தங்கள் பணி மேன் மேலும் சிறக்க அந்த மாங்காட்டு காமாக்ஷி அருள் புரியட்டும்.

    ReplyDelete
  13. வருக கைலாஷி. உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  14. //இற்றைக்கும் ஏழேழு
    பிறவிக்கும் உன்னடிகள்
    போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!//

    ஏங்க விடாமல் தந்திடுவாள் அன்னை மாங்காட்டு காமாக்ஷி!

    ReplyDelete
  15. நல்வரவு ராமலக்ஷ்மி. நல்வார்த்தைகளுக்கு நன்றி :)

    ReplyDelete