Monday, March 30, 2009

தங்கமணி மண்டபத்தில்...



தங்கமணி மண்டபத்தில்
தங்கத்தாய் உன்னைக் கண்டேன்
தாமரையே தாமரையில்
வீற்றி ருக்க அதிசயித்தேன்

முத்துமணி ஆரங்கள்
மங்கையுன்மேல் தவழக் கண்டேன்
முத்துமுத்துப் புன்னகையில்
முத்தின் ஒளி மங்கக்கண்டேன்

பட்டாடை பரவசமாய்
பாவையினைத் தழுவக் கண்டேன்
விட்டோடி வேதனைகள்
விரைந்து ஓடி மறையக்கண்டேன்

சித்திரம்போல் மேனியதில்
சிங்காரம் கொஞ்சக் கண்டேன்
பத்திரமாய் உன்னைநெஞ்சில்
பொக்கி ஷமாய் பதுக்கிக்கொண்டேன்!

--கவிநயா

11 comments:

  1. அன்னையவள் புகழ் பாடும் கவிதை கண்டேன்
    என்தனையும் அவள் அருளே ஆளக் கண்டேன்
    சிந்தையிலோர் ஒளி வந்து சேரக் கண்டேன்
    முந்தைவினை முழுதும் ஓடக் கண்டேன்

    ReplyDelete
  2. யக்கா...
    தங்கமணி மண்டபம்-ன்னு பார்த்தவுடன் வலையுலகத் தங்கமணிகள் எல்லாம் ஒன்னாக் கூடி மண்டபம் கட்டி இருக்காங்களோ-ன்னு நினைச்சேன்! :))

    //முத்தின் ஒளி மங்கக்கண்டேன்//

    அன்னை மீது ஒளி மங்குமா என்ன?
    பொங்கும்! மங்கிடாது!
    முத்தின் ஒளி பாயக் கண்டேன், வீசக் கண்டேன்-ன்னு மாத்தினா சரியாயிரும்-க்கா!

    //பத்திரமாய் உன்னைநெஞ்சில்
    பொக்கி ஷமாய் பதுக்கிக்கொண்டேன்!//

    பொக்கிஷமாக நானும் பதுக்கி வச்சிக்கறேன்!:)

    ReplyDelete
  3. வாருங்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி. அழகான கவிதையில் உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி :) முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வருக கண்ணா.

    //தங்கமணி மண்டபம்-ன்னு பார்த்தவுடன் வலையுலகத் தங்கமணிகள் எல்லாம் ஒன்னாக் கூடி மண்டபம் கட்டி இருக்காங்களோ-ன்னு நினைச்சேன்! :))//

    அது சரி :)

    //அன்னை மீது ஒளி மங்குமா என்ன?
    பொங்கும்! மங்கிடாது!//

    நான் சொல்ல வந்தது, அன்னையின் முத்துப் புன்னகையின் ஒளியில் அவள் அணிந்திருக்கும் முத்தின் ஒளி குறைஞ்சிட்டதுன்னு. அதனால மாத்தலை :) தவறா நினைக்காதீங்க.

    வருகைக்கு நன்றி கண்ணா :)

    ReplyDelete
  5. மாலவனின் மார்பகத்தில்
    மங்கை உன்னை நானும் கண்டேன்
    மந்திரமாய் அவன் நெஞ்சில்
    மலரம்பு தூவக் கண்டேன்

    சேயெனது குற்றம் எல்லாம்
    சேர்ந்தெனது முன்னே நிற்க
    நீயவனின் செவியினில் சொல்
    மன்னிப்பை மனதில் கொண்டேன்

    மாயவனின் மனமதை நீ
    மாயமாய் மாற்றக் கண்டேன்
    தூயவன் நான் என்றே நீ
    திருவடியில் சேர்க்கக் கண்டேன்

    தாயாக நீ இருக்க
    தந்தையிடம் தயக்கம் உண்டோ
    சேயாக நானும் நின்றேன்
    சேர்த்துக் கொள்வாய் என்னை அம்மா!

    ReplyDelete
  6. //தாமரையே தாமரையில்
    வீற்றி ருக்க அதிசயித்தேன்
    //

    இது ரொம்ப நல்லா இருக்கு. :-)

    ReplyDelete
  7. வருக குமரா. கலக்குறீங்க :) எல்லா வரிகளுமே அழகு.

    //இது ரொம்ப நல்லா இருக்கு. :-)//

    வாசிப்புக்கும் கவிதைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  8. //நான் சொல்ல வந்தது, அன்னையின் முத்துப் புன்னகையின் ஒளியில் அவள் அணிந்திருக்கும் முத்தின் ஒளி குறைஞ்சிட்டதுன்னு. அதனால மாத்தலை :) தவறா நினைக்காதீங்க//

    அட! இதிலென்ன தவறா நினைச்சிக்கறது-க்கா? :)
    ஓ...அதை அப்படி படிக்கணுமா?

    நானு "முத்துமுத்துப் புன்னகையில்...அவள் முத்தின் ஒளி மங்கக்கண்டேன்"-ன்னு நினைச்சிட்டேன்!

    அந்த முத்துமுத்துப் புன்னகை "முன்"
    இந்த முத்தின் ஒளி மங்கக்கண்டேன்-ன்னு இப்ப நீங்க சொன்னதுக்கு அப்புறம் முத்து-லட்சுமி நல்லாவே மின்னுறாங்க! :)

    ReplyDelete
  9. //இப்ப நீங்க சொன்னதுக்கு அப்புறம் முத்து-லட்சுமி நல்லாவே மின்னுறாங்க! :)//

    :))) புரிதலுக்கு மிக்க நன்றி கண்ணா :)

    ReplyDelete
  10. in raag varali, an attempt is made to sing this song :
    Please log on to:

    http://pureaanmeekam.blogspot.com
    subbu thatha

    ReplyDelete
  11. தங்கமணி மண்டபத்துக்கு பொருத்தமா படமெல்லாம் போட்டு அருமையாக அமைத்தமைக்கு மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete