Tuesday, March 31, 2009

பங்குனியில் ஒரு நவராத்திரி - 1 (மீனாட்சி பஞ்சரத்தினம்)



மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்குத் திருநாளை முன்னிட்டு இந்த 'அம்மன் பாட்டு' பதிவில் இன்று முதல் குடமுழுக்கு நன்னாளான ஏப்ரல் எட்டாம் நாள் வரை 'பங்குனியில் ஒரு நவராத்திரி' கொண்டாடப்படுகின்றது.

முதல் நாளாகிய இன்று அன்னையின் புகழினைப் பாடும் மீனாட்சி பஞ்சரத்தினம் என்னும் துதிப்பாடலைக் காண்போம்.

குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழை இங்கே காணலாம்.

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் கேயூர ஹாரோஸ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் - ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்

கேயூர ஹாரோஸ்வலாம் - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்

பிம்போஷ்டீம் - கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்

ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம் - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்

பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்

விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

தத்வ ஸ்வரூபாம் - உண்மைப் பொருளானவளும்

சிவாம் - மங்கள வடிவானவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்


முக்தாஹார லஸத் கிரீடருசிராம் - முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும்

பூர்ண இந்து வக்த்ர ப்ரபாம் - ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும்

சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் - கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும்

பத்மப்ரபா பாஸுராம் - தாமரை போல் அழகு பொருந்தியவளும்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் - அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும்

கிரிஸுதாம் - மலைமகளும்

வாணீ ரமா ஸேவிதாம் - கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.



ஸ்ரீவித்யாம்
சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்


ஸ்ரீவித்யாம் - மறைகல்வி வடிவானவளும்

சிவவாமபாகநிலயாம் - சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும்

ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும்

ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் - ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும்

ஸ்ரீமத் சபாநாயகீம் - சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்

ஸ்ரீமத் ஜகன்மோஹினீம் - உலகங்களை மயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் - சுந்தரேசருடைய நாயகியும்

பயஹராம் - அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும்

ஞானப்ரதாம் - அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும்

நிர்மலாம் - குறையொன்றும் இல்லாதவளும்

ச்யாமாபாம் - கருநீல நிறம் கொண்டவளும்

கமலாசன அர்ச்சித பதாம் - தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

நாராயணஸ்ய அனுஜாம் - நாராயணனுடைய தங்கையும்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் - யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும்,

நானாவிதாம் அம்பிகாம் - பல்விதமான உயிர்களுக்கு அன்னையும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நாநார்த்த சித்திப்ரதாம்
நாநா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேனார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் - சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும்

நாநார்த்த சித்திப்ரதாம் - வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும்

நாநா புஷ்ப விராஜித அங்க்ரியுகளாம் - எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும்

நாராயணேன அர்ச்சிதாம் - நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும்

நாதப்ரஹ்மமயீம் - நாதபிரம்ம உருவானவளும்

பராத்பரதராம் - உயர்ந்ததிலும் உயர்வானவளும்

நாநார்த்த தத்வாத்மிகாம் - அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

19 comments:

  1. நவராத்ரிகள் வருசத்து நாலுமுறை வருது.

    ஆஷாட (ஆடி மாசம்)

    சாரதா (புரட்டாசி)

    சியாமளா ( தை மாசம்)

    வசந்தா ( பங்குனி)

    இவைகளில் நம்ம தென்னிந்தியாவில் நாம் கொலு வச்சுக் கொண்டாடுவது புரட்டாசி மாசம் வருதே அதுலேதான்.

    தோழி ஒருத்தர் (பஞ்சாபி- இந்து) இந்த நாலுக்குமே உபவாசம் இருப்பாங்க.

    ReplyDelete
  2. அன்னையின் விழாவிற்கு அவனிக்கே வாழ்த்துக்கள்!
    பஞ்சரத்தின பஞ்சாமிருதம் அருமை! :)
    இதை எழுதியது யார் குமரன்?

    டீச்சர் சொன்ன நவராத்திரி தகவலுக்கு ஒரு ஷொட்டு!
    டீச்சர், கொலு வச்சீட்டீங்க-ல்ல! தோ வந்துடறேன்! :)

    //பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்//

    தங்கச்சியும் பீதாம்பரமா? போச்சு போங்க! நல்ல அண்ணன்! நல்ல தங்கச்சி! :)

    ReplyDelete
  3. //தங்கச்சியும் பீதாம்பரமா? போச்சு போங்க! நல்ல அண்ணன்! நல்ல தங்கச்சி! :)//

    "எங்க வீட்டுலே இப்படித்தான்......குடும்பப் பழக்கம். பட்டுதான் கட்டுவோம்,ஆமா"

    சொன்னது நான் இல்லை, மீனாட்சியாக்கும்:-)

    ReplyDelete
  4. //ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்

    ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்

    ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்

    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்//

    வாம பாகத்து வனிதாய்
    வித்தை நீ மந்திரம் நீ!

    சக்ர ராஜாங்க நிலையே
    சதாசிவ சபைக்கரசி நீ!

    கந்த கணேசன் தாயே
    காசினிக் காந்திமதி நீ

    மீனாட்சி கருணைக் கடலே - எங்கள்
    செல்வமே உனைப் போற்றுவாம்!!!

    ReplyDelete
  5. அப்ப இது வசந்த நவராத்திரி தான். இல்லீங்களா துளசிக்கா?! :-)

    வசந்த காலத்துல வர்ற வசந்த நவராத்திரியைக் கொண்டாட சியாமளையான மீனாட்சியம்மையின் திருக்கோவில் திருக்குடமுழுக்குத் திருவிழா தான் பொருத்தமான நேரம். :-)

    ReplyDelete
  6. www.kamakoti.orgல் இந்தத் துதியைக் கண்டேன். அதனால் இது ஆதிசங்கரர் இயற்றிய துதியாகவோ அவர் பெயரில் வழங்கப்படும் ஒரு துதியாகவோ இருக்கலாம் இரவி.

    ReplyDelete
  7. இதே மாதிரி மற்ற சுலோகங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க இரவி. நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. நானும் இதனை இடுகையாக எழுதவேண்டும் என்று இருந்தேன்....நன்றி குமரன்.
    தினமும் சொல்லும் ஸ்லோகம்....ஆதிசங்கரர் செய்ததே!.

    ReplyDelete
  9. நீங்கள் ஏற்கனவே எழுதிவிட்டீர்களோ என்று ஒரு முறை 'ஸ்தோத்ர மாலா'விலும் 'மதுரையம்பதி'யிலும் சரி பார்த்த பின்னரே எழுதினேன் மௌலி. :-)

    ஆதிசங்கர விரஸித என்று படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  10. //குமரன் (Kumaran) said...
    இதே மாதிரி மற்ற சுலோகங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க இரவி. நல்லா இருக்கு//

    நன்றி குமரன்!
    அடியேன் மொழியாக்கத்தையும் ஒரு ஓரமா பதிவில் போடுவீங்கன்னா சொல்லுங்க! ஆக்கித் தாரேன்! :))

    ReplyDelete
  11. எழுதித் தாங்க. தனி இடுகையாவே போட்டுறலாம். :-) இல்லை இந்த இடுகையில தான் இருக்கணும்ன்னு விரும்புனீங்கன்னா அப்படியே செய்யலாம். உங்கள் விருப்பம் எங்கள் பாக்கியம். :-)

    ReplyDelete
  12. மீனாக்ஷி பஞ்சரத்னம் பாரம்பரியமாகப் பாடப்பெறும் ராகத்தில் (மெட்டில்) இங்கு
    கேட்கலாம்.

    திரு குமரன் அவர்கள் அருள் கூர்ந்து இங்கு வரவேண்டும்.

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  13. ஆதி சங்கரர் எழுதியதுதான் இந்த பஞ்சரத்னம்.

    நல்ல தொடக்கம் குமரன்!

    ReplyDelete
  14. மீனாட்சி பஞ்சரத்தின சுலோகத்தைப் பாடித் தந்ததற்கு நன்றி சுப்புரத்தினம் ஐயா. கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  15. நன்றி எஸ்.கே. ஐயா.

    ReplyDelete
  16. நானும் மீனாட்சியை வணங்கிக்கிறேன். பஞ்சரத்ன பொருளுக்கு மிக்க நன்றி குமரா. நிதானமா படிக்கணும்கிறதால தாமதமாயிடுச்சு. சுப்பு தாத்தா பாடலும் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  17. நன்றி அக்கா. எனக்கும் அப்படித்தான். நானும் மெதுவாகத் தான் மீனாட்சி கலிவெண்பாவைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  18. thanks for the explanation. Kindly post the explanation for other Ambal Slokams by Adi shankara since most of us doesnt know the meaning. The way you explained word by word is wonderful.

    ReplyDelete