Monday, March 23, 2009

அன்னை அவளை நெஞ்சில் வை !



அன்னை அவளை நெஞ்சில்வை - அவள்
முன்னை வினைகளை ஓட்டிடுவாள்
விண்ணையும் மண்ணையும் படைத்த அவளே
உன்னையும் என்னையும் காத்திடுவாள்

முக்காலங்களும் அறிந்தவள் அவளே
எக்காலத்திலும் துணையிருப்பாள்
சொக்கநாதரின் சுந்தரி அவள்தம்
பக்கத்தில் நமக்கிடம் தந்திடுவாள்

லீலைகள் பலவும் புரியும் அவளே
மாயை களையும் களைந்திடுவாள்
மனதின் மயக்கம் நீக்கிடுவாள் - தனை
அடையும் மார்க்கமும் காட்டிடுவாள்

அன்பே உருவாய் அமைந்தவளாம் - அவள்
அருளாய் உள்ளில் உறைபவளாம்
கடலாம் கருணை நிறைந்தவளாம் - நமைக்
கனிவாய்க் காக்கும் தாய் அவளாம்!


--கவிநயா

4 comments:

  1. முக்காலங்களும் அறிந்தவள் அவளே
    எக்காலத்திலும் துணையிருப்பாள்

    எக்காலத்திலும் உனை மறவேன்
    கயிலை நிகர் மயிலை வளர் கற்பகமே

    கபாலி நாதன் காதல் நாயகி
    செந்தில் நாயகன்தனிப்பெறும்அன்னைநீ

    சுந்திரர்,இந்திரர் அனைவர்க்கும் அருள்தரும் நாயகி நீ

    தந்திரமும் மந்திரமும் கரை காணாநாயகியும் நீ

    வந்தவர் அனைவர்க்கும் வரம்தரும் கருணாநிதியும் நீ

    சந்திர சேகரனுக்கு தயயை புரியும் தயாநிதியும் நீ

    கவிநயா அக்கா பாடலில் எழுந்த என் எண்ணப் பிரதிபலிப்பு

    ReplyDelete
  2. உங்கள் எண்ணப் பிரதிபலிப்பு வெகு அழகாக இருக்கிறது தி.ரா.ச. ஐயா. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ('அக்கா'தான் கொஞ்சம் இடிக்குது :)

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=pYg1rCaxEvE

    set to Raag Bhairavi

    ReplyDelete
  4. ராகம் வெகு பொருத்தம்; பாடல் வெகு இனிமை. மிக்க நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete