வேறென்ன வேண்டும் அம்மா? - அம்மா
வேறென்ன வேண்டும் அம்மா?
ஈடில்லாப் பேரெழிலை
இமையாமல் பார்த்திருக்க
எந்தனுயிர் உந்தனையே
தஞ்சமென்று அடைந்திருக்க
(வேறென்ன)
வல்வி னைகளும் உன்னை
கண்டு மிரண் டோடிடுமே
காரி ருளும் கண்ணொளியில்
சின்னத் தூசாய்ச் சிதறிடுமே
உள்ள மெங்கும் ஒருஇன்பம்
ஊடு ருவிப் பரவிடுமே
உந்தன் அன்பை எண்ணிஎண்ணி
கண்ணில் நீரும் பெருகிடுமே
(வேறென்ன)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/2008/10/blog-post_05.html
//வல்வி னைகளும் உன்னை
ReplyDeleteகண்டு மிரண் டோடிடுமே
காரி ருளும் கண்ணொளியில்
சின்னத் தூசாய்ச் சிதறிடுமே//
ஆத்தா.....................
வேறெதுவும் வேண்டாம் இந்தப்பாடல் ஒன்றே போதும் கவிநயா மிக உருக்கமாய் வந்தது வாசிக்கும்போது.
ReplyDeleteபாடிக்கொண்டே படித்தேன் பாராட்டுக்கள்!
//ஈடில்லாப் பேரெழிலை
ReplyDeleteஇமையாமல் பார்த்திருக்க//
அம்மா என்றாலே அழகுதான்..
அப்படியே இந்த பக்தனையும் பாத்துக்க சொல்லுங்க..
நன்னா இருந்திச்சு.. நன்றி...
நல்லாயிருக்குக்கா....படம் எங்க ஊர் ப/வனசங்கரி தானே?.
ReplyDeleteஅருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்கா!
ReplyDeleteபாட்டும் வழக்கம் போல் நல்லாவே வந்திருக்கு!
அம்பாள் கனக துர்க்கா அல்லவோ? விஜயவாடா?
மேலே அம்மாவின் மகுடத்தில் சூர்ய பிரபை, சந்திர பிரபை எல்லாம் பாத்தா அப்படித் தான் தெரியுது!
http://www.youtube.com/watch?v=NOwqte1BS_c
ReplyDeleteListen the song here in Raag Ranjani
subbu rathinam
கனவில் கண்ட என் அம்மா தாயே! உடம்பு சிலிர்க்குது!பேசவோ எழுதவோ வார்த்தை இல்லை!
ReplyDeleteவருகைக்கு நன்றி SUREஷ்.
ReplyDelete//கவிநயா மிக உருக்கமாய் வந்தது வாசிக்கும்போது.
ReplyDeleteபாடிக்கொண்டே படித்தேன் //
அப்படியே பாடியும் கொடுத்துடுங்க ஷையக்கா :) வாசிப்புக்கு மிக்க நன்றி.
நல்வரவு ரங்கன்.
ReplyDelete//அம்மா என்றாலே அழகுதான்..//
ஆமாம்!
//அப்படியே இந்த பக்தனையும் பாத்துக்க சொல்லுங்க..//
சொல்லவே வேண்டாம். அம்மாவுடைய வேலையே அதான். பிள்ளங்கள பாத்துக்கறது :)
//நன்னா இருந்திச்சு.. நன்றி...//
முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் உங்களுக்குதான் நன்றி.
வாங்க மௌலி.
ReplyDelete//நல்லாயிருக்குக்கா....//
நன்றி...
//படம் எங்க ஊர் ப/வனசங்கரி தானே?.//
இல்லப்பா... படம் எடுத்த தளம் "விஜயவாடா கனகதுர்க்காதேவி" அப்படின்னு சொல்லுது...
வருக கண்ணா.
ReplyDelete//அருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்கா!//
ஆமால்ல? :)
//பாட்டும் வழக்கம் போல் நல்லாவே வந்திருக்கு!//
:)) என்ன வழக்கமோ? :)
//அம்பாள் கனக துர்க்கா அல்லவோ? விஜயவாடா?
மேலே அம்மாவின் மகுடத்தில் சூர்ய பிரபை, சந்திர பிரபை எல்லாம் பாத்தா அப்படித் தான் தெரியுது!//
படத்தைப் பார்த்தே, சரியா வேற சொல்லீட்டிங்களே. எனக்கெல்லாம் சான்ஸே இல்லை!
வாங்க சுப்பு தாத்தா.
ReplyDelete//Listen the song here in Raag Ranjani//
நான் மனசில் நினைச்சு எழுதிய மெட்டிலேயே வந்திருக்கு :) அருமை. மிக்க நன்றி தாத்தா.
//கனவில் கண்ட என் அம்மா தாயே!//
ReplyDeleteஅப்படியா! கொடுத்து வச்சவர் நீங்க!
முதல் வருகைக்கு மிக்க நன்றி அபி அப்பா.