Wednesday, April 1, 2009

மீனாட்சி என்ற பெயர் எனக்கு! பங்குனியில் ஒரு நவராத்திரி - 2

மதுரை மீனாட்சியம்மன் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டு விழாப் பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று...பிரபல பாடல்...நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே!
சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்...

அத்தனை அம்மன்கள் இருந்தாலும், சமயபுரத்தாளே, "நான்மாடக் கூடலிலே நான் மீனாட்சி" என்று தான் துவங்குகிறாள்! அதை இன்று அன்பர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்! குடமுழுக்கு நாயகி மீனாட்சி திருவடிகளே சரணம்!




படம்: ஆதிபராசக்தி
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: உடுமலை நாராயண கவி

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு


கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்


ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!


காஞ்சி காமாட்சி - மதுரை மீனாட்சி - காசி விசாலாட்சி

6 comments:

  1. சமயபுரம் மட்டுமில்லை, இங்கே மதுரையில் கூட அப்படி ஒரு ஆங்கிலேயனுக்கு அன்னை அருள் பாலித்ததாக ஒரு வழக்கு உண்டு. ரோஸ் பீடர் என்ற கலெக்டர் உயிரை, ஒரு சிறுமியாக வந்து காப்பாற்றினாளாம், நன்றிக்கடனாக, தன் பெயர் பொறித்த தங்கத்திலான shoe வை துரையவர்கள் காணிக்கையாக செலுத்தினாராம். எத்தனையோ நகைகள் இருந்தாலும், இது தான் பெரிதாகப் பேசப்பட்டிருக்கிறதாம்!
    "கோயில் கட்டியவர்களை நினைத்து இன்றும்
    மரியாதை செலுத்துவது மீனாட்சி அம்மன் கோயில்." என்று பெருமிதப்பட்டிருக்கிறார் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன். சேதி தெரியுமோ?

    http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=12033&cls=row3&n...

    ReplyDelete
  2. மிக நல்ல பாடல் இரவி. அடிக்கடி விரும்பிக் கேட்பது.

    ReplyDelete
  3. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
    //ரோஸ் பீடர் என்ற கலெக்டர் உயிரை, ஒரு சிறுமியாக வந்து காப்பாற்றினாளாம், நன்றிக்கடனாக, தன் பெயர் பொறித்த தங்கத்திலான shoe வை துரையவர்கள் காணிக்கையாக செலுத்தினாராம்.//

    ஆகா! சூப்பர் தகவல்! அன்னைக்கு பொற்கழலா!

    //மரியாதை செலுத்துவது மீனாட்சி அம்மன் கோயில்." என்று பெருமிதப்பட்டிருக்கிறார் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன். சேதி தெரியுமோ?//

    மிகவும் நல்ல விஷயம்! நீத்தார் கடன் போல, உருவாக்கியவர்க்கு நன்றி நவில்வது மிகவும் அவசியம்!
    குடந்தை சாரங்கபாணி ஆலயத்திலும் இதோ போல், உருவாக்கியவருக்கு, இன்றும் பெருமாள் ஆண்டுதோறும் திவசம் கொடுக்கிறார்.

    கருமுத்து கண்ணன் அவர்களின் பல சீரிய முயற்சிகள், மீனாட்சியம்மன் கோயிலை மேம்படுத்தித் தான் உள்ளது! பிற அறங்காவலர்களுக்கு ஒரு முன் மாதிரியும் கூட!

    ReplyDelete
  4. //குமரன் (Kumaran) said...
    மிக நல்ல பாடல் இரவி. அடிக்கடி விரும்பிக் கேட்பது.
    //

    நன்றி குமரன்!

    ReplyDelete
  5. எனக்கும் பிடித்த பாடல். மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  6. //கவிநயா said...
    எனக்கும் பிடித்த பாடல். மிக்க நன்றி கண்ணா//

    நன்றி-க்கா! இந்தப் படம் பாத்து இருக்கீங்களாக்கா?

    ReplyDelete