Monday, January 11, 2010

எல்லாம் உந்தன் கையிலடி !



குயவன் கைக் களிமண்ணாய்
என்னை உனக்குத் தந்து விட்டேன்
என்ன பாண்டம் செய்குவையோ
எல்லாம் உந்தன் கையிலடி

கல்லான என் மனதை
உளி கொண்டு செதுக்குவையோ
கல்லைக் கனியச் செய்யும் விழியால்
என்னைக் கனியச் செய்குவையோ

பிறவிகளில் அழுக்குகளைச்
சேர்த்துச் சேர்த்துக் கரியான
எந்தன் மனதை உந்தன் அன்பால்
கட்டி வைரம் ஆக்குவையோ

எல்லாம் உந்தன் கையிலடி!

--கவிநயா

சுப்புத்தாத்தாவின் இசையில், குரலில்: நன்றி தாத்தா!

4 comments:

  1. வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரு நியாயங்கள் உள்ளதெனச் சொல்வார்கள்.
    ஒன்று குரங்குக் குட்டி ந்யாயம்.
    இன்னொன்று பூனைக்குட்டி ந்யாயம்.

    எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் என்ன செய்வானோ அதுவே சரி என
    ஒப்புக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் நிலை, பக்தனின் உன்னதமான நிலை.

    அந்த மன நிலைதனை அழகாக, எளிதாக விளக்கியிருக்கிறீர்கள்.

    பாடலை பூர்வி கல்யாணி ராகத்தில் என்னால் இயன்ற வரை பாடியிருக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. இது உண்மையிலேயே மிக அருமையான நிலை!
    "எனது விருப்பப் படியல்ல! எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் உன் திருவுள்ளப் படியே நடந்தேறட்டும்! உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும்!"

    ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் அருமையான வழி, பிரார்த்தனை இது.



    வேண்டத்தக்கது அறிவோய் நீ!
    வேண்டுவமுழுதுந்தருவோய் நீ!

    திருவருட்பாவில் வள்ளலார், தற்சுதந்திரமில்லாத நிலையை, சூரி சார் எடுத்துச் சொன்னபடி, வைணவ நிலையில் முழு சரணாகதி நிலையில் மட்டுமே இது சாத்தியம்!

    திருவருள் கை கூட்டுக!

    ReplyDelete
  3. வாங்க தாத்தா. பூர்வி கல்யாணியில் பாடல் வெகு அருமையாக வந்திருக்கு. மிக்க நன்றி. இடுகையிலும் சேர்த்திருக்கேன்.

    //எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் என்ன செய்வானோ அதுவே சரி என
    ஒப்புக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் நிலை, பக்தனின் உன்னதமான நிலை.//

    அந்த நிலையை அடைய அவளே அருள வேண்டும்.

    ReplyDelete
  4. //"எனது விருப்பப் படியல்ல! எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் உன் திருவுள்ளப் படியே நடந்தேறட்டும்! உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும்!"

    வேண்டத்தக்கது அறிவோய் நீ!
    வேண்டுவமுழுதுந்தருவோய் நீ!

    திருவருட்பாவில் வள்ளலார், தற்சுதந்திரமில்லாத நிலையை, சூரி சார் எடுத்துச் சொன்னபடி, வைணவ நிலையில் முழு சரணாகதி நிலையில் மட்டுமே இது சாத்தியம்!//

    அருமையாகச் சொன்னீர்கள் கிருஷ்ணமூர்த்தி சார். அதுவே என் பிரார்த்தனையும்.

    //திருவருள் கை கூட்டுக!//

    ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete