Monday, January 25, 2010

என்று தருவாய்?

அன்னை உன்னைக் காணாமல் அலை பாய்கிறேன் - அம்மா
உன்னருளை உணராமல் உள்ளம் காய்கிறேன்
காணும் பொருள் ஒவ்வொன்றிலும் உன்னைத் தேடினேன்
காணாமல் கண்ணீரிலே நானே மூழ்கினேன்

வானெங்கும் விண்மீன்கள் சிரிக்குதம்மா - ஆனால்
வெண்ணிலவை மேகங்கள் மறைக்குதம்மா
தண்ணொளியாம் உன்னருளை வேண்டி நிற்கும் - இந்தப்
பெண்மகளைக் கண்ணால் கொஞ்சம் பாராய் அம்மா

தேனை தேடும் வண்டாக அலையுதம்மா மனம் - ஆனால்
பூ மலரக் காணாமல் குமையுதம்மா தினம்
என்னுயிரில் பூவாக என்று மலர்வாய் - அம்மா
உன்னருள் தேன் எனக்கு என்று தருவாய்?


--கவிநயா

11 comments:

  1. http://www.youtube.com/watch?v=MN-kDYTNbZ8

    really remarkable song.
    subbu thatha sings here in Raag Atana

    subbu rathinam
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. //உன்னருள் தேன் எனக்கு என்று தருவாய்?//

    தாயே உனது அருள் மழைக்காக காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  3. பாடல் கேட்டு (மறுபடியும்) கண் நிறைந்தது தாத்தா. படங்களும் அழகா போட்டிருக்கீங்க. மிக்க் நன்றி.

    ReplyDelete
  4. வாருங்கள் கைலாஷி. நன்றி.

    ReplyDelete
  5. //அன்னை உன்னைக் காணாமல்...தேடினேன்//
    //பெண்மகளைக் கண்ணால் கொஞ்சம் பாராய் அம்மா//
    அடாடாடாடா ! அம்மாவை எங்கும் தேட வேண்டாம். கொஞ்ச நாள் தன் பிள்ளை வீட்டில் இருந்து விட்டு வரலாம் என்று என் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். கொஞ்ச நாள் கழித்து பத்திரமா அனுப்பி வைக்கிறேன். :)

    ReplyDelete
  6. //கொஞ்ச நாள் தன் பிள்ளை வீட்டில் இருந்து விட்டு வரலாம் என்று என் வீட்டிற்கு வந்து இருக்கிறாள்//

    பிள்ளை அம்மாவுக்கு சமைச்சிப் போடுதா?
    இல்லை வழக்கம் போல, அம்மா பிள்ளைக்குச் சமைச்சிப் போடறாங்களா? :)

    //கொஞ்ச நாள் கழித்து பத்திரமா அனுப்பி வைக்கிறேன். :)//

    அம்மாவுக்கு பொண்ணைப் பாக்காம இருக்க முடியாது!
    அதுனால நீங்களே மறந்தாலும், அம்மா இங்கன வந்துருவாக! :)

    ReplyDelete
  7. அம்மாவுக்கு தெரியாத சமையல் எல்லாம் இருக்கே. quick noodles, appalam without oil etc etc எல்லாம் அம்மாவுக்கு செய்ய தெரியாது. நான் தான் செஞ்சி கொடுக்கணும்.:)

    ReplyDelete
  8. //quick noodles, appalam without oil etc etc எல்லாம்//

    Eat healthy!
    Be wealthy!
    Come back jalthi amma! :)

    ReplyDelete
  9. என்னடா திடீர்னு இங்கிட்டு கலகலப்பா இருக்கேன்னு பார்த்தேன். வாங்கப்பா தம்பிங்களா... :)

    ReplyDelete
  10. //Realy superb song this ..//

    வாங்க ராஜேஷ். (உங்க வலைப்பூ உங்க பேர் சொல்லுச்சு :) வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete