
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆதி அந்தம் இல்லா சோதியும் நீயே
பாதியும் மீதியும் ஆனவள் நீயே
நாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே!
அன்னையும் நீயே கன்னியும் நீயே
அகில மெல்லாம் ஆளும் அரசியும் நீயே
பாலையும் வாலையும் ஆனவள் நீயே - அதி
காலை எழில் நிற கற்பகத் தாயே!
பொருளும் நீயே போகமும் நீயே
மருள் நீக்கி அருள் தெருளும் நீயே
இருளும் ஒளியும் ஆனவள் நீயே
அன்புருவே அழகே என்னுயிர்த் தாயே!!
--கவிநயா
சுப்புத்தாத்தாவின் குரலில், இசையில்... நன்றி தாத்தா.
அர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு நன்றி: http://farm1.static.flickr.com/177/398376556_0804b23684.jpg
ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=JW2eNna8YJg
ReplyDeletein Raag Dhanyasi, kindly listen to this old man singing.
subbu thatha
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ReplyDeleteஆதி அந்தம் இல்லா சோதியும் நீயே
பாதியும் மீதியும் ஆனவள் நீயே
நாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே::))
first time i just try.
என்றும் நீயே எதிலும் நீயே
பண்பும் நீயே படிப்பும் நீயே
அன்றும் நீயே இன்றும் நீயே
சக்தியும் நீயே சிவமும் நீயே
அன்பே ஆருயிரே என் கண்ணே கண் மணியே
நீயில்லாமல நானில்லை நானில்லாமல் நீயில்லை கமலக்கண்ணி தாயே!
Ramanujarin adimai
Rajesh Narayanan
//ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!//
ReplyDeleteசரியா சொன்னீங்க :) நன்றி குமரா.
//in Raag Dhanyasi, kindly listen to this old man singing.//
ReplyDeleteவெகு அருமையாகவும், இனிமையாகவும் இருந்தது தாத்தா. இடுகையிலும் இணைச்சிருக்கேன். நீங்க அண்ணாமலையான் தீபத்தை சேர்த்திருப்பது தனிச் சிறப்பு. மிக்க நன்றி தாத்தா.
ராஜேஷ், முதல் முயற்சியே அம்மா மீது, அதுவும் அழகாக அமைஞ்சிருச்சு :) இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள். வருகைக்கு நன்றி, ராஜேஷ்.
ReplyDeleteஆதியும் நீயே அந்தமும் நீயே, ஐயனின் பாதியும் நீயே அம்மா கற்பகவல்லி அனைவரையும் காப்பாற்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி கைலாஷி.
ReplyDeleteஎல்லா உலகம்ஆள்வாயே"
ReplyDeleteஉமையாள் பதி நி ஆனாயே" கவியே நீயே கவிதையயே "கருத்துடன் தினம் தினம் படைப்பாயே '
ரோசா பூவை விடமாட்டிங்களா கவி //?/////.
.................சித்ரா
வருகைக்கு நன்றி சித்ரா!
ReplyDelete