Monday, February 22, 2010

அவசியம் நீ வர வேணும்!



பாடிப் பாடித் துதிச்சிருக்கேன்
பாசத் தோட காத்திருக்கேன்
பாவி எனக் கருள் புரிய
பைங்கிளிக்கு மனசு வல்ல

தேடித் தேடித் தவிச்சிருக்கேன்
தேவி ஒன்னத் துதிச்சிருக்கேன்
ஓடி வந்து அருள் புரிய
ஒனக்கு இன்னும் மனசு வல்ல

கருண நெறஞ்ச மனம்
கல்லாகிப் போனதென்ன?
வருந்தி அழைச்ச பின்னும்
வாராம இருக்கதென்ன?

நம்பித்தான் காத்திருக்கேன்
நாயகியே வர வேணும்
வம்பேதும் பண்ணாம
வண்ண மயில் வர வேணும்

அன்பு மீறக் கூப்பிடுறேன்
ஆசையாக வர வேணும்
அம்மான்னு கூப்பிடுறேன்
அவசியம் நீ வர வேணும்


--கவிநயா

21 comments:

  1. "உன் உருவம் கல்லன்றி உன் திரு உளமும் கல்லோ !
    உலகில் ஏழை என்னுடைய புண்பாடல் உன் செவிக்கு வேம்பாமோ !!"
    என்ற பாபநாசம் சிவன் பாடலை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
  2. பாடல் நன்றாக இருக்கு கவிநயா.

    ReplyDelete
  3. //பாபநாசம் சிவன் பாடலை நினைவுபடுத்துகிறது.//

    அப்படியா, லிங்க் இருந்தா அனுப்பறீங்களா?

    வருகைக்கு நன்றி ராதா.

    ReplyDelete
  4. //கவிதை அற்புதம்.//

    மிக்க நன்றி நிகே.

    ReplyDelete
  5. //பாடல் நன்றாக இருக்கு கவிநயா.//

    மிக்க நன்றி உயிரோடை.

    ReplyDelete
  6. அம்மா, அம்மான்னு கூப்பிடறேன் அவசியம் நீ வரவேணும்...

    வந்து விட்டாள் போல் இருக்கிறதே!
    youtube
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. http://www.youtube.com/watch?v=ZMqkJpbIKdM

    subbu thatha

    ReplyDelete
  8. அக்கா ! சற்றே பொறுங்கள். கண்ணன் பாடலில் இட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  9. arumayana padal amma. todartum ungal sevai

    ReplyDelete
  10. தாத்தா, ரொம்ப மன்னிக்கணும். இன்னும் கேட்கலை. சீக்கிரம் வரேன்...

    ReplyDelete
  11. //அக்கா ! சற்றே பொறுங்கள். கண்ணன் பாடலில் இட்டுவிடுகிறேன்.//

    இட்டாச்சான்னு பார்க்கலை. இட்ட பிறகு எனக்கு சொல்லுங்க ராதா. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  12. //arumayana padal amma. todartum ungal sevai//

    அன்னை அருள் இருந்தா தொடரத்தான் விருப்பம் :)

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி LK.

    ReplyDelete
  13. @கவிநயா

    விரைவில் ஒரு இலவச தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். உங்கள் பங்களிப்பு அதற்கு மிக அவசியம். விரைவில் அதற்கான அறிவிப்பை எனது பதிவில் வெளியிட உள்ளேன் .
    நன்றி
    LK

    ReplyDelete
  14. ஒரு வழியா கேட்டுட்டேன் தாத்தா :) வழக்கம் போல அருமை. என்ன ராகம்னு சொல்ல மறந்துட்டீங்க மறுபடி :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  15. //விரைவில் ஒரு இலவச தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். உங்கள் பங்களிப்பு அதற்கு மிக அவசியம்.//

    நீங்கள் ஆரம்பிக்கும் இதழ் நல்லபடியாக வளர, வாழ்த்துகள் LK. என்னால் இயன்றதை செய்கிறேன்.

    ReplyDelete
  16. ராகம் முகாரி. பைரவி போல் இருக்கும். சிறிது வித்தியாசம். சில ஸ்தாயிகளில் ஹுசைனி போலவும்
    தோன்றும். கவனமாக இருக்க வேண்டும்.


    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  17. நன்றி தாத்தா :)

    ReplyDelete
  18. கவிதை அற்புதமா.. இருக்குங்க.

    ReplyDelete
  19. கவிதை அற்புதமா.. இருக்குங்க.

    ReplyDelete
  20. //கவிதை அற்புதமா.. இருக்குங்க.//

    வாங்க தோழி. முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete