Wednesday, August 11, 2010

மலயத்துவசன் மகள்

அனைவருக்கும் ஆடிப் பூரத் திருநாள் வாழ்த்துகள்!



பார்க்கும் திசையி லெல்லாம் பைங்கிளி உன்முகமே
கேட்கும் ஒலியிலெல்லாம் கோகிலம் உன்பெயரே
காக்கும் கரங்களெல்லாம் மரகத வளைக்கரமே
மீட்கும் கடலினின்றும் மீனாள்உன் கடைவிழியே!

காஞ்சன மாலைக்கென கனியமுதாய் உதித்தாய்
மாமதுரை மன்னன் மடியினிலே சிரித்தாய்
சேயெனவே வந்து சுவர்க்கசுகம் தந்தாய்
வையகம் போற்றிடவே ஆயகலை களில்தேர்ந்தாய்!

வீரத்தின் விளைநிலமே வேதங்களின் மறைபொருளே
நான்மாடக் கூடல்தன்னில் நலம்பல அருள்பவளே
திக்விஜயம் செய்து திசையெல்லாம் வென்றவளே
சுந்தரனைக் கண்டபின்னே சொக்கியங்கே நின்றவளே!

மதுரைநகர் ஆளவந்த மீனாக்ஷிதேவி போற்றி!
மாந்தர்தமைக் காக்கவந்த மங்கையர்க்கரசி போற்றி!
பச்சைக்கிளி ஏந்துகின்ற பசுங்கிளியின் தாள்கள் போற்றி!
பொற்றாமரைப் பூவேயுன்றன் பொற்பதங்கள் போற்றிபோற்றி!!


--கவிநயா

9 comments:

  1. மலையத்துவசன் மகளைப் போற்றி ஒரு அருமையான பாடல். நன்றி அக்கா.

    ReplyDelete
  2. 201, so fast கவிக்கா?
    விட்டா முந்நூறாம் பதிவு, மூனு மாசத்துல வந்துரும் போல இருக்கே! :)

    ReplyDelete
  3. மலையத் துவசன் எந்த பாண்டிய மன்னர்-ன்னு அறியத் தாருங்களேன்!
    மலை+துவசம்-ன்னா மலைக் கொடியா? பாண்டியர்க்கு மீன் கொடி தானே?

    ReplyDelete
  4. பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.
    இதை யாரேனும் அந்த மீனாட்சி சன்னதியிலே பாடவேண்டுமே !
    ராகம் ஷண்முகபிரியா வில்
    இப்போதைக்கு என் வலையில் ஒலிக்கிறது.
    இந்த பாடல் அந்த மாமதுரை கூடல் நகரில் பொற்றாமரைக்குளத்தருகே
    குடி கொண்டிருக்கும் தேவி அவள் சன்னதியிலே
    பாட பாக்கியம் பெற்றவர் யாரோ !!

    சுப்பு ரத்தினம்.

    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  5. கூடல் குமரன் முதல் ஆளாக ரசித்தது மிகப் பொருத்தம். மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  6. நீங்கள் பாடியதை மிகவும் ரசித்தேன் தாத்தா. குறிப்பாக மீனாக்ஷி போற்றி வரியை பாடியிருந்த விதம் அருமையாக இருந்தது. மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  7. //201, so fast கவிக்கா?//

    நடுவில் 200-க்காக காத்திருந்ததில் ரொம்ப நாள் பதிவு இல்லாமயே ஓடிடுச்சே... எழுதற பாடல்களை வேற என்ன செய்யறது? :)

    //மலையத் துவசன் எந்த பாண்டிய மன்னர்-ன்னு அறியத் தாருங்களேன்!
    மலை+துவசம்-ன்னா மலைக் கொடியா? பாண்டியர்க்கு மீன் கொடி தானே?//

    மலயத்துவசனா, மலையத்துவசனா, என்கிற சந்தேகம் எழுதுகையில் வந்தது. சரி பண்ணிடறேன். அதைத் தவிர, அறிவினாக்களுக்கும் நமக்கும் ராக்கெட் விட்டாலும் எட்டாத தூரம் :)

    ReplyDelete
  8. அருமையான பாடல்

    மருந்தே வருக பசுங்குதலை
    மழலைக் கிளியே வருகவே
    மலையத் துவசன் பெற்றபெரு
    வாழ்வே வருக வருகவே./

    /மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி
    தாலோ தாலேலோ
    மலையத் துவசன் வளர்த்த பசுங்கிளி
    தாலோ தாலேலோ./

    மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    படித்தது நினைவில்

    ReplyDelete
  9. மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே.
    அம்மையின் புகழ் பரவும் 201வது பாடல் அருமை கவிநயா.

    ReplyDelete