அம்மா உன்னை நினைத்தாலே
ஆறுதலாய் இருக்குதடி
சும்மா உன்பேர் சொன்னாலும்
சுமையெல்லாம் இறங்குதடி
கற்பனையில் கண்டாலும்
கனிந்துமனம் மலருதடி
பொற்பதங்கள் பணிந்தபின்னே
பாரமெல்லாம் கரையுதடி
செய்யும்செயல் பலனெல்லாம்
உன்னிடத்தில் தந்துவிட்டேன்
உய்யும்உடல் உயிர்பொருளை
உனதென்று அளித்துவிட்டேன்
உனக்கென்று தருவதற்கு
வேறெதுவும் இல்லையடி
எனக்கென்று இன்றும்என்றும்
நீஇருந்தால் போதுமடி!
--கவிநயா
//உனக்கென்று தருவதற்கு
ReplyDeleteவேறெதுவும் இல்லையடி
எனக்கென்று இன்றும்என்றும்
நீஇருந்தால் போதுமடி!//
ஆகா...
சின்ன மீனைக் கொடுத்துட்டு, பெரிய மீனா அவளையே பிடிக்கறீங்களா-க்கா? :)
கொடுத்துது என்னை
எடுத்தது உன்னை
யார் கொலோ சதுரர்?-ன்னு மாணிக்கவாசகர் கேட்பது போல் இருக்கு!
உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் அக்கா - அதை நானும் உணர்கிறேன்.
ReplyDeleteஅக்கா,அபிராம பட்டரின் "அழியாத குணக்குன்றே அருட்கடலே
ReplyDeleteஇமவான் பெற்ற கோமளமே" பாடல் நினைவிற்கு வருகிறது.
வருக கண்ணா :)
ReplyDelete//கொடுத்துது என்னை
எடுத்தது உன்னை
யார் கொலோ சதுரர்?//
உண்மைதான். நம்மை முழுசா குடுக்கதான் இன்னும் தெரிய மாட்டேங்குது. முயற்சிக்கிறேன்...
//உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் அக்கா - அதை நானும் உணர்கிறேன்.//
ReplyDeleteமகிழ்ச்சி குமரா :)
//அக்கா,அபிராம பட்டரின் "அழியாத குணக்குன்றே அருட்கடலே
ReplyDeleteஇமவான் பெற்ற கோமளமே" பாடல் நினைவிற்கு வருகிறது.//
வாங்க ராதா. பட்டர் பாடல்களில் ஊறித் திளைச்சிருக்கீங்கன்னு தெரியுது :)