Monday, August 16, 2010

சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே!சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
முந்தைவினை ஓய அபிராமியே

(சிந்தையில்)

பரிபுரை பனிமொழி திரிபுரை தீங்கனி
எரிபுரை மேனியற்கு ஒருபுறம் அருள்சகி

(சிந்தையில்)

புவனங்கள் யாவையும் பூத்திட்ட பயிரவி
சலனங்கள் தீர்த்தெம்மை காத்திடும் சாம்பவி
ஜகமெல்லாம் நகக்கண்ணில் அடக்கிய மாலினி
உளமெல்லாம் புளகிக்க பணிந்திட்டோம் வாழிநீ

(சிந்தையில்)


--கவிநயா

12 comments:

 1. அழுகின்ற மனது
  ஆறுதல் அடைவது உன்னாலே
  தாயே உன்னாலே

  அலைகின்ற மனது
  அமைதி கொள்வது உன்னாலே
  தாயே உன்னாலே

  முடிவில்லாத வாழ்வு
  முற்றுப் பெறுவது உன்னாலே
  தாயே உன்னாலே

  ReplyDelete
 2. //பரிபுரை பனிமொழி திரிபுரை தீங்கனி
  எரிபுரை மேனியற்கு ஒருபுறம் அருள்சகி//

  அன்னையே உன் பாதம் சரணமம்மா. அனைவரையும் காப்பாற்று.

  ReplyDelete
 3. எனக்குத் தெரிந்து முதற்தடவையாக பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பரம்பரை ரீதியில்
  எழுதத் துவங்கியிருக்கிறீர்கள்.
  எடுத்த எடுப்பிலேயே களை தட்டி நன்றாக இருக்கிறது.
  மத்யமாவதி ராகத்தில் கொஞ்சம் கூட பிசிரு இல்லாமல் பாட முடிகிறது.
  " நகுமோமு கலவானி...." பாடல் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா ! அந்த ராகம்.
  எனது வலையில் பார்க்கலாம்.

  நிற்க. இது போல இன்னும் பல கீர்த்தனைகள் எழுதவேண்டும். இது உங்களால் கண்டிப்பாக முடியும். ஏதேனும் ஒரு கீர்த்தனையை எடுத்துக்கொண்டு, அந்த மெட்டினை மனதிற்கொண்டு வந்து
  இதே போல பல்லவி, அனுபல்லவி, சரணம் என எழுதுங்கள். உங்களுக்கு ராகங்களின் அடிப்படையான
  ஆரோஹனம், அவரோஹனம் பாடம் ஆகியிருந்தால், ஏற்கனவே தெரிந்திருக்கும் கீர்த்தனைபோல் தான்
  அமையவேண்டும் எனபதில்லை.

  சாதாரணமாக, பல்லவியில் ஒரு அடி போதும். அனுபல்லவியில் ஒண்ணே முக்கால் அல்லது
  இரு அடிகள் வரலாம்.

  இது ஒரு சஜஷன் தான். ஐ ஆம் டேகிங் டூ மச் லிபர்டி என்று தோன்றினால் இதை இக்னோர்
  செய்து விடவும்.

  யூ ஹாவ் மேட் எ குட் ஸ்டார்ட். கீப் இட் கோயிங்.
  All my Best Blessings to you and to your family members
  சுப்பு ரத்தினம்.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 4. //எனக்குத் தெரிந்து முதற்தடவையாக பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பரம்பரை ரீதியில்
  எழுதத் துவங்கியிருக்கிறீர்கள்.
  எடுத்த எடுப்பிலேயே களை தட்டி நன்றாக இருக்கிறது. //
  ரிப்பீட்டு!

  ReplyDelete
 5. அருமையான கவிதைப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திகழ்.

  ReplyDelete
 6. வாருங்கள் கைலாஷி. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. பாடல் அருமையாக வந்திருக்கிறது தாத்தா. ஆனால் இது போல முன்பும் சில பாடல்கள் எழுதி இருக்கிறேன் :) முயற்சித்து எழுதுவதில்லை, எது வருகிறதோ, என்ன தருகிறாளோ, அது அப்படியே... :) ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி தாத்தா.

  ReplyDelete
 8. வாருங்கள் ஜீவா. வெகு நாட்களுக்குப் பின் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி :)

  ReplyDelete
 9. அக்கா, கொஞ்ச நாள் கழித்து இந்தப் பக்கம் வருகிறேன்.
  வழக்கம் போலவே அருமையாகவும் பக்தியை வளர்க்கும் விதமாகவும் பாடல்கள் உள்ளன.

  ReplyDelete
 10. இசைப்பாடல் நன்றாக இருக்கிறது அக்கா. இந்த மாதிரி கீர்த்தனை இயற்றுபவர்கள் கடைசி வரியில் தங்கள் முத்திரையாக ஒரு சொல்லை வைப்பார்கள். உங்கள் முத்திரை என்ன?

  ReplyDelete
 11. //அக்கா, கொஞ்ச நாள் கழித்து இந்தப் பக்கம் வருகிறேன்.
  வழக்கம் போலவே அருமையாகவும் பக்தியை வளர்க்கும் விதமாகவும் பாடல்கள் உள்ளன.//

  வாங்க ராதா! உங்களை காணுமேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் :) மிக்க மகிழ்ச்சி. நானுமே அவ்வப்போது இங்கு எழுதுவதுடன் சரி, வலைபூக்கள் பக்கம் அதிகம் உலாவ முடிவதில்லை...

  ReplyDelete
 12. //இசைப்பாடல் நன்றாக இருக்கிறது அக்கா. இந்த மாதிரி கீர்த்தனை இயற்றுபவர்கள் கடைசி வரியில் தங்கள் முத்திரையாக ஒரு சொல்லை வைப்பார்கள். உங்கள் முத்திரை என்ன?//

  வாங்க குமரா. தெரியலையே... அப்படில்லாம் யோசிக்கலைப்பா...

  ReplyDelete