Monday, September 13, 2010

அம்மா வருவாயோ?


அம்மா வருவாயோ - வந்தென்
அல்லல் களைவாயோ
அன்பைத் தருவாயோ - தந்தெனை
அணைத்துக் கொள்வாயோ

ஒன்றும் அறியாத பெண்ணாய்
என்னைப் படைத்தாயே
எல்லாம் அறிந்த அம்மா என்னை
அலைக் கழித்தாயே

முன்னம் வினையெல்லாம் அம்மா
முறித்து அருள்வாயே
கண்ணால் காப்பவளே கொஞ்சம்
கருணை செய்வாயே!


--கவிநயா


20 comments:

  1. Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

    ReplyDelete
  2. அம்மா இங்கே வா வா
    ஆசை முத்தம் தா தா...மாதிரி

    அம்மா வருவாயோ
    அன்பைத் தருவாயோ
    அணைத்துக் கொள்வாயோ?-ன்னு நல்லா இருக்கு-க்கா!

    //ஒன்றும் அறியாத பெண்ணாய் என்னைப் படைத்தாயே//

    ஆகா! யார் இந்தப் பொண்ணு? :)

    ReplyDelete
  3. //எல்லாம் அறிந்த அம்மா என்னை அலைக் கழித்தாயே//

    அதானே! ஏம்மா இப்படி என்னை அலைக் கழிக்கற?
    இப்படி நீ செஞ்சிக்கிட்டே இருந்தே, எனக்குச் சாப்பாடு வேணாம் போ!

    ஒன்றும் அறியாப் பேதை என்று என்னைப் படைத்தாயே!
    என்றும் ஆன அம்மா என்னை அலைக் கழித்தாயே!

    ஒன்றும் வேணாம் செல்! உன் சோறு வேண்டாம் செல்!
    தின்று வாழ்ந்து தானா நான் ஜீவிக்க வேணும்?

    அன்று பால் கொடுத்த நீயா ஆதி பரா சக்தி?
    இன்று வந்து ஏனோ என் இன்னல் களைய மாட்டாய்?

    முன்பு வந்து எந்தன் கண்ணீர் துடைக்கா விட்டால்
    சென்று நானும் உந்தன் சோறு உண்ண மாட்டேன்!!
    அம்மா சோறு உண்ண மாட்டேன்!

    ReplyDelete
  4. அம்மாகிட்ட சும்மாவாச்சுக்கும் இப்படி சொல்லலாம். ஆனா சாப்புடாம இருக்கக் கூடாது இரவி! No Smiley!

    ReplyDelete
  5. ஏன், என்னைப் பார்த்தால் பொண்ணா தெரியலையா கண்ணா? :)

    உண்மையில் அலைக்கழிப்பவள் அவள் இல்லை. நம் வினைகளேதான் நம்மை அலைக்கழிக்கின்றன. உண்மையாக பக்தி செய்வோரை அவற்றிலிருந்து காப்பவள்தான் அன்னை. பிள்ளைகள் புரியாமல் அழுவது போல் நாம் அவளை தெரியாமல் திட்டுகிறோம். பாவம் அவள். அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.

    'தீ மேல் இடினும் ஜெய சக்தி' யெனச் சொல்லி துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தியை அவள் நமக்கு அருளட்டும். அதற்காக சாப்பிடாமல் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். உடம்பினுக்குள்ளே உறுபொருள் இருக்கையில் அதனை காப்பது நம் கடமை. அபூர்வமாகக் கிடைக்கும் மனிதப் பிறவியை வீண்டிக்காமல் இருப்பது தலையாய கடமை.

    இதெல்லாம் உங்களுக்குப் போய் நான் சொல்லுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் அன்பினால் சொல்லத் தோன்றியது.

    ReplyDelete
  6. //இதெல்லாம் உங்களுக்குப் போய் நான் சொல்லுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது//

    :)
    அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க?
    சின்ன பசங்களுக்கு பெரியவங்க தானே சொல்லித் தரணும்?

    //இருந்தாலும் அன்பினால் சொல்லத் தோன்றியது//

    நன்றி-க்கா!

    ReplyDelete
  7. ஒரு வேகத்தில் உங்க கவிதைக்கு எசப்பாட்டாய் வந்துருச்சி! அவ்ளோ தான்! Comma போடலை போல! அதான் பாட்டாத் தெரியாம, படும் பாட்டா தெரிஞ்சிரிச்சோ? :)

    இந்தாங்க கமா போட்ட கவி!

    ஒன்றும் அறியாப் பேதை,
    என்று என்னைப் படைத்தாயே!
    என்றும் ஆன அம்மா,
    என்னை அலைக் கழித்தாயே!

    ஒன்றும் வேணாம் செல் - உன்
    சோறும் வேண்டாம் செல்!
    தின்று வாழ்ந்து தானா,
    நானும் ஜீவிக்க வேணும்?

    அன்று பால் கொடுத்த,
    நீயா ஆதி பரா சக்தி?
    இன்று வந்து ஏனோ - என்
    இன்னல் களைய மாட்டாய்?

    முன்பு வந்து எந்தன்
    கண்ணீர் துடைக்கா விட்டால்,
    சென்று நானும் உந்தன்
    சோறு உண்ண மாட்டேன்!!

    No Issues-kka! Yday was a spl day! So it just came like that! :)

    ReplyDelete
  8. //பிள்ளைகள் புரியாமல் அழுவது போல் நாம் அவளை தெரியாமல் திட்டுகிறோம்//

    சேச்சே, நான் அவளை போய்த் திட்டலையே! என்னைத் தானே சாப்பாடு வேணாம்-னு சொன்னேன்! சும்மா கோச்சிக்கிட்டேன்! வேறு யாரு இருக்கா கோச்சிக்க, உற்ற தோழனையும் அவளையும் தவிர? :)

    //நம் வினைகளேதான் நம்மை அலைக்கழிக்கின்றன. உண்மையாக பக்தி செய்வோரை அவற்றிலிருந்து காப்பவள்தான் அன்னை//

    பக்தி செய்வோரைக் காப்பது தான் அன்னையா?
    என்னைப் போல் பக்தி செய்யாதவர்கள் கதி??

    உன்மை! நம் வினைகள் தான் அலைக்கழிக்கின்றன!
    ஆனால் குழந்தை கை தவறிக் கொட்டி விட்டாலும், அதை பொறுக்கி எடுத்துக் கோர்த்துத் தருவாளே ஒரு அன்னை? அப்படி இல்லையா?

    ReplyDelete
  9. அதானே, கண்ணன் எப்படி கேள்வி கேட்காம விட்டுட்டாரேன்னு நினைச்சேன் :)

    உங்ககிட்ட இன்னும் சொல்ல பயமா இருக்கு. இன்னும் ஏதாச்சும் கேட்பீங்களே :) இருந்தாலும் தெரிஞ்சதைச் சொல்றேன், அவளைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு... :)

    அன்னையின் அருளைப் பெற நமக்கு முழு விருப்பம் இருக்கணும். கள்ளமில்லாத குழந்தை மனசு இருக்கணும். முழுமையா அவளிடம் சரணடைஞ்சிட்டா, அவளே கீழே விழுந்ததை எடுத்து கோத்தும் தருவாள்.

    எல்லா இடத்திலும்தான் மழை விழுது. ஆனால் பள்ளம் இருக்கிற இடத்தில்தானே தண்ணீர் சேருது? அது போல அவள் அருள் எங்கும் நிறைந்துதான் இருக்கு; ஆனாலும் பாத்திரம் சரியாக இருந்தால்தான் அதைப் பெற முடியும். இது என் புரிதல் மட்டுமே.

    இதுக்கு மேலே கேட்டா இன்னும் உளறுவேன். அதனால கேட்காதீங்க :)

    ReplyDelete
  10. @கவிக்கா
    அட, இதை இப்பத் தான் பார்த்தேன்!

    //உங்ககிட்ட இன்னும் சொல்ல பயமா இருக்கு. இன்னும் ஏதாச்சும் கேட்பீங்களே :)//

    ஹா ஹா ஹா! சொல்லிட்டீங்க-ல்ல? இனி மேல் அக்காவுக்கு மட்டும் ஸ்பெஷல் கேள்விகள் கேட்கப்படும்! :)

    //இருந்தாலும் தெரிஞ்சதைச் சொல்றேன், அவளைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு... :)//

    இது போதுமே-க்கா! கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்கப்படும் கேள்விக்குப் பதிலா தேவை? இல்லையே! குழந்தை அம்மாவைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு கதை கேட்கும் போது, அம்மா பச்சை மரம்-ன்னு ஒரு கதை சொல்லுறாங்க! குழந்தை பச்சை-ன்னா என்னாம்மா-ன்னு கேட்குது! மரம் பச்சை-ன்னு அம்மா சொல்லிங்! அப்போ மரம்-ன்னா என்னாம்மா-ன்னு குழந்தை கேள்வியிங்! தோட்டத்தில் பச்சை கலர்-ல இருக்கே-ன்னு அம்மா சொல்றாங்க! குழந்தை, அடப் போம்மா, பச்சை-ன்னா என்னான்னு கேட்டா மரம் பச்சை-ன்னு சொல்றீங்க! மரம்-ன்னா என்னான்னு கேட்டா பச்சை கலர்-ல இருக்குமே-ன்னு சொல்றீங்க! ஹா ஹா ஹா! இந்த அம்மாவுக்கு ஒன்னுமே தெரியலை என்று குழந்தை சிரிக்கிறது! அம்மாவும் சிரிக்கின்றாள்!

    //இதுக்கு மேலே கேட்டா இன்னும் உளறுவேன். அதனால கேட்காதீங்க :)//

    கேட்பேன்!

    உளறுங்க-க்கா!
    உங்க உளறு கவி, உள்-அறு கவி! என் உள்-அறு முகனின் இன்பம் போல் இன்பம், உளறு கேவி கேட்க! :)

    ReplyDelete
  11. //அன்னையின் அருளைப் பெற நமக்கு முழு விருப்பம் இருக்கணும். கள்ளமில்லாத குழந்தை மனசு இருக்கணும்//

    குழந்தைக் கண்ணனின் கள்ளம் எல்லாம் கள்ளமுள்ள மனசா?
    அன்னைக்கு கள்ளமுள்ள குழந்தை, கள்ளமில்லாக் குழந்தை எனத் தரம் பிரிக்கவும் தெரியுமோ? :)

    //எல்லா இடத்திலும்தான் மழை விழுது. ஆனால் பள்ளம் இருக்கிற இடத்தில்தானே தண்ணீர் சேருது? அது போல அவள் அருள் எங்கும் நிறைந்துதான் இருக்கு; ஆனாலும் பாத்திரம் சரியாக இருந்தால்தான் அதைப் பெற முடியும்//

    ஹிஹி!
    பள்ளம் உள்ள இடத்தில் மட்டுமே தண்ணீர் சேரும்! சரி தான்!
    ஆனால், வழியில், யாருக்கும் தண்ணி கொடுக்க மாட்டேன், பள்ளத்தில் மட்டுமே சேருவேன் என்றா ஒரு மழை சொல்லும்? :))

    பதிலை எல்லாம் சொல்லணும்-ன்னு அவசியம் இல்லை-க்கா! :)
    ஆனா குழந்தைக் கண்ணன் உங்களை வெண்ணெய் உண்ட கையால் நோண்டியதாக நினைத்து, பதிலை யோசிச்சி மட்டும் வச்சிக்குங்க! ஹா ஹா ஹா! :)

    ReplyDelete
  12. கண்ணா,

    கள்ளமில்லா குழந்தை அப்படிங்கிறது இயல்பா வரும் சொற்றொடர். அதையும் பிரிச்சு கேள்வி கேட்காதீங்க! :)

    //குழந்தைக் கண்ணனின் கள்ளம் எல்லாம் கள்ளமுள்ள மனசா? //

    உலகத்தில் எல்லோரும் குழந்தை மனசோடவா இருக்காங்க? இருக்கணும் என்றுதான் நானும் சொன்னேன்.

    //, யாருக்கும் தண்ணி கொடுக்க மாட்டேன்//

    நீங்களே சொல்லிட்டீங்க. கேளுங்கள், கொடுக்கப்படும். கேட்டால், பாத்திரத்தை நீட்டினால், அண்டாவை திறந்து வைத்தால், நிரப்பும். கேட்காட்டி, எனக்கென்னன்னு போயிடும் :)

    ReplyDelete
  13. //நீங்களே சொல்லிட்டீங்க. கேளுங்கள், கொடுக்கப்படும். கேட்டால், பாத்திரத்தை நீட்டினால், அண்டாவை திறந்து வைத்தால், நிரப்பும்//

    :)
    திறந்து வச்சிட்டேன்! வெல்லம் போட்டுக் கிளறிய பால் பாயசம் நிரப்புங்க...சொல்லிட்டேன்! :)

    ReplyDelete
  14. //கேளுங்கள், கொடுக்கப்படும். கேட்டால், பாத்திரத்தை நீட்டினால், அண்டாவை திறந்து வைத்தால், நிரப்பும்//

    உண்மை தான்-க்கா!
    அண்டாவைத் திறந்து வைத்தால் நிரம்பும்!
    திறந்து வைக்கா விட்டால் நிரம்பாது!

    ஆனால் நிரம்ப வில்லை என்றாலும், மழை...தொட்டுவிட்டு நனைத்து விட்டாவது செல்லும் அல்லவா? பள்ளத்தில் தான் "சேரும்"! ஆனால் வழியில் அனைவரையும் "நனைக்கவாவது" செய்யும் அல்லவா? :) அதைச் சொல்ல வந்தேன்!

    ReplyDelete
  15. அது போல் அன்னையானவள், கள்ளமில்லாத உள்ளத்தில் "சேர்வாள்"! ஆனால் கள்ளமுள்ளார்/இல்லார் என்ற பேதமின்றி அனைவரையும் "நனைப்பாள்"!

    என்ன, நாம் தான் நனையக் கூடாது என்று வேறு எங்கெங்கோ ஒதுங்கி விடுகிறோம்! குடை பிடித்துக் கொள்கிறோம்!

    அப்போதும் மழையின் மணமாவது மூக்கைத் துளைக்கச் செய்வாள்! ஏன்-ன்னா அவள் "அம்மா"!

    அதான் அவ கிட்ட, என் கோவத்தைக் காட்டினேன்! வேற யாருமே இல்லை-க்கா எனக்கு!

    ReplyDelete
  16. //என்ன, நாம் தான் நனையக் கூடாது என்று வேறு எங்கெங்கோ ஒதுங்கி விடுகிறோம்! குடை பிடித்துக் கொள்கிறோம்!//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //வேற யாருமே இல்லை-க்கா எனக்கு!//

    எனக்கும்தான் :)

    ReplyDelete
  17. அக்கா - தம்பியின் கருத்துப் பரிமாறலால் எமக்கெல்லாம் நல்ல விளக்கம் கிடைக்கிறது! தொடருங்க!:))
    பாட்டு எளிமையா மனசுலேர்ந்து அப்படியே இயல்பா வந்திருக்கு!

    ReplyDelete
  18. ஆஹா ! இவ்வளவு எளிமையா புலம்ப கற்று கொள்ள வேண்டும். :-)
    "கற்பகவல்லி நின் பொற்பதம் பிடித்தேன்..." பாடலை நினைவு படுத்துகிறது.
    ["நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தாய்!
    நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?..."]

    ReplyDelete
  19. //அக்கா - தம்பியின் கருத்துப் பரிமாறலால் எமக்கெல்லாம் நல்ல விளக்கம் கிடைக்கிறது! தொடருங்க!:))//

    உங்களுக்கா! :)

    //பாட்டு எளிமையா மனசுலேர்ந்து அப்படியே இயல்பா வந்திருக்கு!//

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  20. //ஆஹா ! இவ்வளவு எளிமையா புலம்ப கற்று கொள்ள வேண்டும். :-)//

    நல்ல கதை! புலம்பறதுக்கு கத்துக்கணுமா? :) என்கிட்ட வாங்க. நான் அதில் expert-ஆக்கும் :)

    உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ராதா :)

    ReplyDelete