அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்!
மூவாறு கரங்களுடன்
முகம்பொழியும் கருணையுடன்
மூவுலகும் காக்க வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
சேலாடும் விழிகளுடன்
நூலாடும் இடையினுடன்
எண்திசையும் வெல்ல வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
வேல்விழிகள் பளபளக்க
கோபத்திலே ஜொலிஜொலிக்க
வேகம்மிகக் கொண்டு வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
வீரமகள் வந்தணைக்க
வெற்றிமகள் சேர்ந்திருக்க
மகிஷன்சிரம் அறுத் தெறிந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
காளியென நீலியென
கனிவுமிகும் அன்னையென
காப்பாற்ற வந்தவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
சண்டியென சூலியென
சடுதியிலே வந்துஎங்கள்
சங்கடங்கள் தீர்ப்பவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
ஓமென்று உன்நாமம்
ஓயாமல் உரைத்திருந்தால்
ஓடோடி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
வீணென்று இப்பிறவி
ஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!
--கவிநயா
நவராத்திரி திருநாளில் தெய்வீகமான பாடலை பொழிந்து மகிழ்வித்தமைக்கு நன்றி.அந்த தேவி உமை ரட்சிக்கட்டும். நன்றி
ReplyDeleteநவராத்திரி திருநாளில் தெய்வீகமான பாடலை பொழிந்து மகிழ்வித்தமைக்கு நன்றி.அந்த தேவி உமை ரட்சிக்கட்டும். நன்றி
ReplyDeleteமழையெனப் பொழிகின்றன சொற்கள். அருமையாக இருக்கிறது அக்கா.
ReplyDelete//வீணென்று இப்பிறவி
ReplyDeleteஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்!//
அப்படியே விரைந்தேகி வராப் போலயே இருக்கு! :)
கவிக்கா கவியே கவி!
இப்படிக்கு, ரவி!
//மழையெனப் பொழிகின்றன சொற்கள். அருமையாக இருக்கிறது//
ReplyDeleteகுமரன் சொன்ன மழைலே நானும் நனைஞ்சாச்சு.
சுப்பு தாத்தா.
//அந்த தேவி உமை ரட்சிக்கட்டும்.//
ReplyDeleteஎனக்கு பிடித்த வாழ்த்து :) அவள் அருள் உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் நிறைந்திருக்க நானும் வேண்டிக்கிறேன்.
முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி கலா.
//மழையெனப் பொழிகின்றன சொற்கள். அருமையாக இருக்கிறது அக்கா.//
ReplyDeleteமிக்க நன்றி குமரா.
//கவிக்கா கவியே கவி!
ReplyDeleteஇப்படிக்கு, ரவி!//
:)))
//அப்படியே விரைந்தேகி வராப் போலயே இருக்கு! :)//
வராப் போல இருந்தா மட்டும் பத்தாதே... வரணுமே.
நீங்க வந்ததுக்கு நன்றி :)
//குமரன் சொன்ன மழைலே நானும் நனைஞ்சாச்சு.//
ReplyDeleteசந்தோஷம் தாத்தா :) மிக்க நன்றி.
கவிக்கா கவியே கவி!
ReplyDeleteஇப்படிக்கு, ரவி!
இப்படிக்கு, இன்னொரு கவி! (இங்கே மட்டும் கவிக்குப் பொருள் குரங்கு) :-)
தங்களின் எழுத்துக்கு மகுடம் சூடும் ஒரு பாடல்
ReplyDeleteபாடலைப் படிக்க படிக்க
பக்தி பரவசத்தைத் தூண்டுகிறது
/குமரன் (Kumaran) said...
ReplyDeleteமழையெனப் பொழிகின்றன சொற்கள். அருமையாக இருக்கிறது அக்கா.
/
அதே
//கவிக்குப் பொருள் குரங்கு) :-)//
ReplyDeleteகுமரனுக்கு குறும்பு :)
//தங்களின் எழுத்துக்கு மகுடம் சூடும் ஒரு பாடல்
ReplyDeleteபாடலைப் படிக்க படிக்க
பக்தி பரவசத்தைத் தூண்டுகிறது//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், திகழ் :)
நவராத்திரி வாரத்தில் தெய்வீகமான பாட்ல்...
ReplyDeleteஅருமையா இருக்குங்க...
வாழ்த்துக்கள்.
பாட்டு அருமையா இருந்தது,
ReplyDeleteநவராத்ரியும் அருமையா அமையட்டும்!
//நவராத்திரி வாரத்தில் தெய்வீகமான பாட்ல்...
ReplyDeleteஅருமையா இருக்குங்க...
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி குமார். உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துகள் :)
//பாட்டு அருமையா இருந்தது,
ReplyDeleteநவராத்ரியும் அருமையா அமையட்டும்!//
நன்றி ஜீவா. உங்களுக்கும் நவராத்திரி இனிமையாக அமையட்டும் :)
இந்தப் பாடலுக்கு எல்லாம் பின்னூட்டம் இடுவது ரொம்ப கஷ்டம் அக்கா. :-)
ReplyDelete//இந்தப் பாடலுக்கு எல்லாம் பின்னூட்டம் இடுவது ரொம்ப கஷ்டம் அக்கா. :-)//
ReplyDeleteஅது சரி. இப்படில்லாம் தப்பிச்சுக்க முடியாது தம்பீ :) எப்படியோ, போட்டுக் குடுத்த பிறகாச்சும் வந்தீங்களே, நன்றி :)