Wednesday, October 13, 2010

முக்தி ப்ரதாயினி !. மனமிரங்கி அருள்வாய் நீ !

 அம்பே !அம்பிகே !  அபிராமியே  !!
 அகிலத்து நாயகியே !                                      
 ஓம் ஜெகதம்பாயை நம: !!  
அஞ்ஞான இருளகற்றும் அறிவே !
 ஆனந்தவல்லித்தாயே... 
ஓம் தமோ நாசின்யை நம;
      
  அ  உ ம் உன்னுள் ! உமையே ! ஓம்காரமே !
  அவை உச்சரிக்கும்போதெழும் நாதமும் நீயே !!     
ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம :
  ஓம் நாதரூபாயை நம:
         
 ஆனைக்காவலிலே அகிலாண்ட நாயகியே  ! 
 ஆரணி நாரணியே ! ஆனந்தரூபிணியும்  நீயே !!   
  ம் மஹேஸ்வர்யை நம:


    அம்ருத வர்ஷிணி !ஆவுடை நாயகி !

  

இடப வாகன‌ன்  ஈசன்  இடபுறம் நீ! பார்வதியே !!
இயற்கையின் கண் உயிர் ஈந்த பவானியும் நீயே !!       
  ஓம் பவான்யை நம:
  உமையே ! உண்ணாமுலையாளே !
  வையம தோன்றுமுன்னே நிஜமாய் நின்றவளே !    
   ஓம் அஜாயை நம: 
 விஸ்வ ஜனனி நீ ! விஸ்வ காரணியும் நீ ! 
 எமை எல்லாம் ஈன்ற பின்னே எம் பசி ஆற்றுபவள் நீ. !  

   கௌரி கல்யாணி காயத்ரி  காம வர்தினி 
   சுஹாசினி சுவாசினி சுகந்தினி சுக ப்ரதாயினி 
    தருணி  தத்வமயி தாரித்ரிய த்வம்சினி தேவி 
    பத்மினி புஷ்டி நீ பிரசன்ன புவனேஸ்வரி
kamakshi
 
  கரும வினை தொலைத்திடவே
  காஞ்சி நகர் வருவார்தம்
  காம க்ரோத மதமழிக்கும்
  காமாட்சியே ! காமேஸ்வரி தாயே !  
  ம் ப்ரபன்ன துக்க ஹாரிண்யை நம: 
     
    சங்கரி  சந்திர வதனி சாம்பவி சரஸ்வதி
    சத்ய ஸ்வரூபிணி சதுர்வேத நிவாசினி
    சியாமளி சின்மயி சர்வ சித்தி ப்ரதாயினி 
    சிவமயி சூலினி சாவித்ரி ஸ்ரீசக்ர நிவாசினி 

 கசியும் விழியுடனே காசி அடைந்தோர்க்கு
 காலபயம் நீங்க  கங்கை நீர் தருபவளே !
முக்தி அளிப்பவளே !! முந்தைவினை அழிப்பவளே !!
நற்கதி விண்ட‌ருள்வாய்  ! விசாலாட்சி தாயே நீ !!  
ம் அபவர்கப்ரதாயை நம:
  வைகை நகர் ஆளும்
  சொக்கனின் சுந்தரியே !! அவன்
  கைபிடித்து மணம் புரிய
  மாமதுரை வந்தனையோ  !!
  மீன்விழியாளே ! மீனாட்சி தாயே !!             
   ஓம் ஸித்தி ரூபாயை நம:
Devi Karpagambikai
  மயிலை நகரிலே ஒயிலாக வலம் வந்து
  கயிலை மலை வாசன்  கபாலியும் கண்டு மகிழ
 அறுபத்து மூவர் போற்றும் அன்னையே
 கற்பக அம்பிகையே ! எமை
 ரக்ஷிப்பதுன்னதருளே !!                
  ஓம் சங்கர்யை  நம:
மந்திரமே மருந்தாய் ஈசன்   வைத்தீச்வரன் அருகில்
சுந்தரியாய்  வீற்றிருக்கும்  பாலா அம்பிகையும் நீயே
தான்  (ஐ)அறுப்பவளே தையல் நாயகியே !!
தருமத்தைக் காப்பவளே ! தர்மசம்வர்த்தினியே !!     
ஓம் அபய ப்ரதாயை நம:
Neelayadakshi
  கருந்தடங் கண்ணி என சுந்தரவிடங்கருடன்
  அரும்பதிகமது புனையும் விரி கேட்டனையோ !!
   நீலக்கடலோரம் நாகைத் தலத்தினிலே
   நீலாய தாட்சி நீ  உடன் வந்து எனை ரட்சி.        
   ஓம் சிவாயை நம:

குடம் நிறை பாலும் தேனும் அம்மா உனக்கபிஷேகம்.
 ஞ்சள் நீராட்டிய பின்,மலர்  மாலை ஆபரணம்
 க்த வர்ண சேலை கட்டி குங்குமத்திலகமிட்டு
(உ)ன்னை நான் பூசிப்பேன் வண்ண வண்ண மலரெடுத்து.

 கேட்கும் ஒலியெல்லாம் துர்கே !! நின் ஓம்காரம்
   ஆர்ப்பரிக்கும் அலை  மனதில்,  நிர்மலே ! நீ நங்கூரம்
   எஸ்ஸ்ருதி எவ்வேதம்  ஸரஸ்வதி  நீ ஸானித்யம்
   ஞ்சினி விமலி  சங்கரி   நிதர்சனம் நின்  சத்தியம் ..
  
                         ஓம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாயை நம:

    ஓம் தயாகர்யை நம:

ரும்பு வில்லாளே கடைக்கண் பார்வையுந்தன் 
விழுந்தாலும் போதும் விமோசனம் யான் பெற்றிடுவேன்.
 ற்சங்கம் நாடி,   நிர்மோக  நிலை அடைவேன். 
 யாதுமான நின் ஒளியில் இரு வினையும் தொலைத்திடுவேன்.
    
    ஓம் தஹராகாச ரூபிண்யை நம: ற்பூர நாயகி கமனீயகாந்தி கஸ்தூரி திலக கதம்பவனவாசினி  
விண்ணோரும் வந்திக்கும் வாக்தேவி வைசாலி விஸ்வேஸ்வரி
வராத்ரி நாயகி நவரத்ன பூஷணி  நான்முகனின் தேவி நமோ நம:  .
 யாண்டும் யாவர்க்கும் யாதுமானாய். நின் தாள்  போற்றி போற்றி.
ஓம் சர்வ மங்களாயை நம:
Devi RajaRajeswari
 
 மாயே !  மாதே ! மாதங்கி !   மஹாசக்தி  !
மோகினி ! மஹேஸ்வரி ! மாங்கல்ய தாயினி ! மஞ்சு பாஷிணி !  
முக்தி ப்ரதாயினி !.   மனமிரங்கி அருள்வாய் நீ !
வேதவல்லியே ! வித்யே ! வந்திப்போம் யாம் உனையே !
 ஓம் ராஜ ராஜேச்வர்யை நம: 

Please Click here to listen to Aarthi
                                                           (courtesy: Sri Kumaran )
நவராத்திரி நாட்களில் , திருலோக நாயகியை திருவரங்க நாயகியை  மஹா லக்ஷ்மியை வந்தித்து எழுத அழைப்பு வந்ததும் அவளது அருளே.
ல்லோருக்கும்து ராத்திரி வாழ்த்துக்ள்.
தேவியின் சில நாமாக்களுடன் அதற்கேற்ற பாடல்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டு உள்ளன. கிளிக்கினால் கேட்கலாம்.

எழுதியது: சுப்பு ரத்தினம் ( சூரி ) 17 comments:

 1. மிக்க நன்றி சுப்பு தாத்தா ! இமகிரி தனையே பாடல் அருமை.

  ReplyDelete
 2. அன்னையின் எழிலார்ந்த பலப்பல நாமங்களுடன் அற்புதமாய்த் தந்திருக்கிறீர்கள் தாத்தா. வணங்கிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. கேஆரெஸ், ரவி, சங்கர், குமரன் என அனைவரையும் வைத்தும் எழுதிட்டீங்க. ரொம்ப நல்லாயிருக்கு சார்! வணங்குகிறேன்.
  கவிநயாவுக்கு ரெண்டு பாடல்! மிக அருமை!

  ReplyDelete
 4. Vsk sir, thank u.
  VSK stands for what name
  எனத் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்களது அத்தனை ப்ளாக்கிலும்கூட அதற்கான க்ளூ கிடைக்கவில்லை.
  தங்களையே கேட்டு உங்களை embarass
  செய்வது நன்றாக இருக்காது என விட்டுவிட்டேன்.
  எனக்கு மட்டும் உங்கள் திரு நாமத்தைச் சொல்லுங்களேன்.
  எனது இமெயிலுக்கு.
  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 5. I am so happy to see this post! read it so many times!
  actually not "read"; "saw" it so many times, bcoz...
  //(ர)ஞ்சினி (வி)மலி சங்கரி நிதர்சனம் நின் சத்தியம் ..//

  அம்மாவின் பல நாமங்களில், இந்த "சங்கரி" என்ற பேர், எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஏன்-ன்னு தெரியலை! சின்ன வயதிலிருந்தே, கிராமத்தில் இருந்தே!

  சங்கரி-ன்னு சொல்லும் போதே ஒரு சந்தோஷம் பரவுவதை உணர்வேன்! நெருங்கிய தோழனுக்கு இது தெரியும்! கூடவே கேலியும் சீண்டலும் :)

  தனக்கு-ன்னு ஒரு பெயரும் வைத்துக் கொள்ளாது, பேர் கூட அவனுடையதேயே தாங்கி நிற்கும் ஒரு உன்னதக் காதலி - அவள் தான் சங்கரி!

  கண்ணா-கண்ணி-ன்னு சொல்ல முடியாது!
  முருகா-முருகி-ன்னு சொல்ல முடியாது!
  ராமா-ராமி-ன்னு சொல்ல முடியாது!
  ஆனா
  சங்கரன்-சங்கரி-ன்னு சொல்லலாம்!

  சங்கரி, உடல் பொருள் ஆவி மட்டுமல்ல! உன் பேரும் உரித்து அவனுக்கே!

  ReplyDelete
 6. படமெல்லாம் பதிவில் பட்டையைக் கெளப்புது! நன்றி சூரி சார்! இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!

  சின்னப் பையன் இப்படியெல்லாம் வாழ்த்தக் கூடாது! இருந்தாலும் சங்கரி மகிழ்ச்சியில் வாழ்த்தி விடுகிறேன்! :) ஓம் சங்கர்யை நம:! தங்கள் பதிவுக்கு இட்டுள்ள தலைப்பையே, மிக்கதொரு கடைக்கால ஐச்வர்யமாக, அன்பர்களுக்கு அவள் அருளட்டும்! ஓம் முக்தி பிரதாயின்யை நம:!

  //ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம//

  இதுக்குப் பொருள் சொல்ல வேணுமாய் விண்ணப்பம்!

  ReplyDelete
 7. கே.ஆர்.எஸ் அவர்கள் வருகைக்கு எனது இத்ய பூர்வ நன்றி.

  க்ஷராக்ஷராத்மிகா என்னும் சொற்தொடர் லலிதா ஸஹஸ்ர நாம த்தில் 757 வது வருகிறது.
  க்ஷர அக்ஷர ஆத்மிகா என்று பதம பிரித்துப் பார்த்தால்,
  க்ஷரம் என்றால் தேய்வது, அழிவது. அக்ஷரம் என்றால் அழிவற்றது. அக்ஷரமாக, என்றுமே அழியாததாக
  இருப்பது பிரும்மம் ஒன்று தான். அந்த பிரும்ம் தான் இயக்கும் சக்தி.அந்த சக்தி இயக்குவதன் காரணமாகத்தான்
  அண்டத்தில் இருக்கும் தேயும், அழியும் எல்லாமே இயங்குகிறது. தான் அழியாது நின்று, அழிகின்ற எல்லாவற்றிற்கும் காரணியாக இருப்பவள் அந்த லோக நாயகி. அந்த சக்தியாக இருந்து சர்வ லோகத்திலேயும்
  இருக்கும் எல்லா க்ஷர வஸ்துக்களையும் உண்டு பண்ணி, உயிர் கொடுக்கும் பவானியாக : பூதஸ்த மாக இருக்கிறாள்.

  மேலும், கீதையில் 16வது அத்தியாயத்திலும் இக்கருத்து இருக்கிறது. பகவான் சொல்கிறார்:

  dvaavimou purushou loke kshara akshara eva cha
  ksharaha sarvaani bhutani kootastho akshara uchyate
  uttamaha purusha stu anyaha - param aatmeti udaahritaha


  விஷ்ணு புராணத்திலும் இக்கருத்து காணப்படுகிறது.

  என்ன இது ! வம்பாப்போச்சு !!
  தாத்தா பேச ஆரம்பித்துவிட்டால், நிறுத்த மாட்டார் போலிருக்கிறதே !
  அப்படின்னு நீங்க நினைக்கிறது தெரியறது.

  ஃபுல் ஸ்டாப் வச்சுடுரேன்.

  சுப்பு ரத்தினம்.
  http://pureaanmeekam.blogspot.com
  http://movieraghas.blogspot.com  ReplyDelete
 8. Ms. ராதா அவர்கள் வருகைக்கு மிக்க நன்றி.

  ஹிமகரி தனயே பாட்டு ரசித்தீர்களா .. சுத்த தன்யாசி ராகம்.
  ஹரிகேசனல்லூர் முத்தையா பாகவதர் க்ருதி .

  அந்த ஹிமகிரி தனயி, ஹேமலதே பவனி வரும் காட்சியை கண்டிருப்பீர்களே !!
  அவள் அருள் அனைத்தையும் பெற்று
  ஆனந்தமாக வாழ்ந்து இந்த
  இகபர சுகமெல்லாம்
  ஈண்டு பெற்று
  உளமாற அனுபவித்து நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் உங்கள் வலையிலும் படிக்கிறேன்.
  எனது ஆசிகள்.

  சுப்பு ரத்தினம்.
  http://movieraghas.blogspot.com

  ReplyDelete
 9. சுப்பு தாத்தா,
  நமஸ்காரம் செய்து கொள்கிறேன். பாடல் பின்னனியில் அம்பாள் பவனி மனதிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
  கண்ணன் பாடல்கள் பதிவுகள் தங்களுக்கும் பிடிக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. :-)
  உங்கள் பதிவுகளில் இருந்து நிறைய எம்.எஸ் அம்மா பாடல்களை டௌன்லோட் செய்து இருக்கிறேன்.
  :-)
  ~
  ராதாமோகன்

  ReplyDelete
 10. ஒவ்வொரு பாடலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஐயா. மிக்க நன்றி.

  ReplyDelete
 11. அனைத்து பாடல்களையும் கேட்டேன் ஐயா. நல்லதொரு தொகுப்பு.

  ReplyDelete
 12. தாத்தாவைப் போல நானும் பேசிக்கொண்டே போகப் போகிறேன். :-)

  க்ஷராக்ஷராத்மிகா = க்ஷர + அக்ஷர + ஆத்மிகா. க்ஷரம் = அழியக்கூடியது = ப்ரக்ருதி = அசேதனம் = அறிவில்லாதது = உயிரில்லாதது. அக்ஷரம் = அழியாதது = புருஷன் = சேதனம் = அறிவுள்ளது = உயிருள்ளது. உடலை உயிர் இயக்குவதைப் போல் க்ஷரம் அக்ஷரம் இரண்டையும் அவற்றின் ஆத்மாவாக இருந்து இயக்குபவள் க்ஷர அக்ஷர ஆத்மிகா.

  உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்!

  ய: ப்ருத்வியாம் திஷ்டன் ப்ருத்வியாந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம்! (யார் பூமியில் இருக்கிறானோ, பூமியின் உள்ளே இருக்கிறானோ, யாரை பூமி அறியாதோ, யாருக்கு பூமி உடலோ...)

  ய: ஆத்மானி திஷ்டன் ஆத்மனோந்தரோ யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்! (யார் உயிரில் இருக்கிறானோ, உயிரின் உள்ளே இருக்கிறானோ, யாரை உயிர் அறியாதோ, யாருக்கு உயிர் உடலோ...)

  ய: ப்ருத்வீமந்தரோ சஞ்சரன் யஸ்ய ப்ருத்வீ சரீரம் யம் ப்ருத்வீ ந வேத! (யார் பூமிக்கு உள்ளே நகர்கிறானோ, யாருக்கு பூமி உடலோ, யாரை பூமி அறியாதோ...)

  ய: அக்ஷரமந்தரே சஞ்சரன் யஸ்ய அக்ஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத! (யார் அழிவில்லாத உயிரின் உள்ளே நகர்கிறானோ, யாருக்கு அழிவில்லாதது உடலோ, யாரை அழிவில்லாதது அறியாதோ...)

  யோ ம்ருத்யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் ய ம்ருத்யுர் ந வேத! (யார் மரணத்தின் உள்ளே நகர்கிறானோ, யாருக்கு மரணம் உடலோ, யாரை மரணம் அறியாதோ...)

  ஏஷ - அவன்

  சர்வ பூத அந்தராத்மா - இருப்பவை எல்லாவற்றிற்கும் (அழிபவை, அழியாதவை அனைத்துக்கும்) உள் நின்று இயக்கும் உயிர்!

  அபஹதபாப்மா - ஆனாலும் அவற்றின் குறைகளால் பாவங்களால் தீண்டப்படாதவன்

  திவ்யோ தேவ - மிகப் பெருமை வாய்ந்த ஒளிவுருவானவன்

  ஏகோ - அவன் ஒருவனே

  நாராயண: - அவன் பெயர் நாராயணன்!

  ReplyDelete
 13. Ithellam ennathu kumaran aNNa?
  I understood only one thing :) -நாராயண:

  ReplyDelete
 14. அது புரிஞ்சா போதும்ன்னு நீங்க தானே சொன்னீங்க. அப்புறம் என்ன?

  ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
  சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

  அந்த நாராயண: தான் இந்த நாராயணி! :-)

  ReplyDelete
 15. க்ஷரா அக்ஷராத்மிகாயை நமஹ என்னும் நாமாவுக்குத் தொடர்ச்சியாக
  ஸ்ரீ குமரன் எழுதியது மேலும் என்னை எழுத வைக்கிறது.
  ஹெச். என். முத்தையா பாகவதர் சம்ஸ்க்ருதத்தில் ஒரு க்ருதி எழுதியிருக்கிறார்.
  நாயகி ராகம் ஆதி தாளம்.
  முத்தையா பாகவதர்
  பல்லவி
  சராசர ஜெகத்ரூபே அம்பா
  அனுபல்லவி
  பராத்பரே பாகாரினுதே பரிபாலிசம்ம பரம த்யானிதி
  (parAtparE pAkArinutE paripAlisammA parama dayAnidhi)
  சரணம்
  ரமா பாரதி சேவித பாதே ரக்ஷித சகல ஜீவையதே குமார ரமாதே
  குவலய நேத்ரே அமோக மஹிமே ஹரிகேச ஹிதே

  சுப்பு தாத்தா

  ReplyDelete
 16. அதே அதே!

  நன்றி தாத்தா.

  ReplyDelete
 17. இப்போதுதான் பார்த்தேன்.
  படங்களும் பாடல்களும், எதுகையும் மோனையும் அன்பர்களின் அக்ஷரங்களும் அருமை, அருமை!

  ReplyDelete