கற்பனைக் கெட்டாத கற்பகமே
அன்புருவே அமுதே அற்புதமே
பொற்பதம் பணிதலன்றி வேறறியேன் - உன்றன்
நற்புகழ் பாடலன்றி தொழிலறியேன்
பற்பலரும் போற்ற பனிமலை வீற்றிருப்பாய்
சொற்பதங் கள்கடந்த சுந்தர னுடன்களிப்பாய்
நற்கதி அருள்பவளே நலந்தரும் உமையவளே
சிற்சபை யில்ஆடும் சிவனிடம் உறைபவளே!
--கவிநயா
அருமையான பாடல்.
ReplyDeleteசியாம கிருஷ்ண சகோதரி
சிவசங்கரி பரமேஸ்வரி - நினை
ஏத்துகிறாள் ராதா சகோதரி - செவி
சாய்த்து அழகா நீ சிரி.
:-)
//நினை
ReplyDeleteஏத்துகிறாள் ராதா சகோதரி - செவி
சாய்த்து அழகா நீ சிரி.//
ச்சோ ச்வீட். லவ் இட் :)
நன்றி தம்பீ :)
உண்மையிலே கற்பகம்பாளின் அருள்
ReplyDeleteஅற்புதமே ! அதைப் பாடி மகிழும் உங்கள் மன்மும்
அவள் உறைவிடமே..
இங்கே சுப்பு தாத்தா பாடியிருக்கிறார். சஹானா ராகத்தில்.
கூடவே ஒரு போனஸாக, எங்கள் மகள் செள்த் ப்ரன்ச்விக் என்.ஜெ.
வீட்டு கொலுவும் வீடியோவில் வருகிறது.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
http://kandhanaithuthi.blogspot.com
http://www.youtube.com/watch?v=ASAzPC_kd6U
ReplyDeletesame song in Raag Shanmughapriya
subbu thatha
வாங்க தாத்தா. உங்கள் மகள் வீட்டுக் கொலுவையும் கண்டு களித்தேன். சுண்டல்தான் கிடைக்கலை :(
ReplyDeleteஇரண்டு ராகங்களிலும் பாடல் அழகா வந்திருக்கு. வழக்கம் போல நானாகவும் மனதுக்குத் தோன்றிய மெட்டில் பாடிக் கொள்வதுண்டு (ராகம் பெயரெல்லாம் தெரியாமலயே). இப்போதான் தெரியுது, நான் பாடிக் கொண்டதும் ஷண்முகப்ரியா என்று :)
மிகவும் நன்றி தாத்தா.