Monday, October 25, 2010

கயிலாயம் உனக்கெதற்கு?


எழில்ராணி உன்பதங்கள் போற்றுகின்றேன்
தமிழ்ப் பாமாலை தினமுனக்கு சாற்றுகின்றேன்
உனக்கெனவே ஒருகோவில் அமைத்து வைத்தேன்
அதில் உடன்வந்து குடிபுகவே உனை அழைத்தேன்

கயிலாயம் உனக்கெதற்கு, குளிர் நடுக்கும் - உன்றன்
மலர்ப்பாதம் தரைதொட்டால் மனம் பதைக்கும்;
தாமரையில் நீநின்றால் கால் கடுக்கும் - நறு
மணமலர்நீ எனமயங்கி வண்டு கடிக்கும்!

வீணைமீட்டி மீட்டிப்பிஞ்சு விரல் வலிக்கும் - சிம்மம்
ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்;
பூந்தளிரே புதுமலரே இனியேனும் நீயென் - உளக்
கோவில் வந்தமர்ந்தால் மனம் களிக்கும்!


--கவிநயா

16 comments:

  1. // சிம்மம்
    ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்;//

    நக்கீரா !!

    சொல் இறைவா !!

    உன் பாட்டில் பொருட்குற்றமிருக்கிறது !!

    அது என்ன குற்றம் !!
    சொன்னால் கணக்கில் அடங்காது !!

    எண்ணிக்கை தெரியாத குற்றமோ !!

    நகை வேண்டாம். உமக்குத் தெரிய வேண்டின்
    குமரனைக் கூப்பிட்டுக் கேளும் !!

    அல்லது !!!

    கே. ஆர்.எஸ் தானே வந்து சொல்லும் வரை காத்திரும் !!

    அது வரையில் ??

    சுப்பு தாத்தா பாடுவதை சகித்துக்கொண்டிரும்.
    http;//menakasury.blogspot.com

    ReplyDelete
  2. என் அம்மாவை அவள் பிள்ளை ஜாலியா கிண்டல் பண்றதில் பொருட் குற்றமாவது ஒண்ணாவது. என்னவா இருந்தாலும் என் அம்மா ஒண்...ணுமே சொல்ல மாட்டா!

    ReplyDelete
  3. பாடல் அருமை தாத்தா. இதுவும் என் மனதில் அமைந்த ராகத்திலேயே வந்திருக்கறது சந்தோஷமா இருக்கு :) என்ன ராகம்னு சொல்லலையே...

    உங்கள் உடல் நலம் விரைவில் சீராக அம்மாவை வேண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. என்னாச்சு சூரி சாருக்கு?
    எதுவாகிலும் விரைவில் நலம்!!

    "பொருட்" குற்றமா?
    என்ன, அன்னை கிட்ட வாங்கன காசைக் கவிக்கா குடுக்கலியா? :)

    ReplyDelete
  5. //சிம்மம் ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்//

    வீணே
    சுற்றி வந்தால்
    களைப்பு

    இதெல்லாம் அன்னைக்கு ஏலுமா? Too bad kavi-kka! அந்த கேஆரெஸ் பய புள்ள கூடச் சேர்ந்து சேர்ந்து, நீங்களும் எம்பெருமான்களை ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்க, கோதையை வாடீ போடீ-ன்னு டீ போட்டு பேசுறாப் போல! :)

    ReplyDelete
  6. //உன் பாட்டில் பொருட் குற்றமிருக்கிறது
    அது என்ன குற்றம் !!
    எண்ணிக்கை தெரியாத குற்றமோ !!//

    எண்ணிக்கை தெரியாத குற்றம் இல்லை!
    எண்ணிக் கை தெரியாத குற்றம் தான் இருக்கு! :)

    அவளை எண்ணி எண்ணி, எழுதி எழுதி, தன் கையே தனக்குத் தெரியாமல் போய் விட்டது கவி-க்காவுக்கு! அதான் எண்ணிக் கை தெரியாத குற்றம்! :))

    ReplyDelete
  7. //அவளை எண்ணி எண்ணி, எழுதி எழுதி, தன் கையே தனக்குத் தெரியாமல் போய் விட்டது கவி-க்காவுக்கு! அதான் எண்ணிக் கை தெரியாத குற்றம்! :))//

    what a pun on the word enni kkai!! superb!! Fantastic ! . And that is KRS

    subbu thatha

    ReplyDelete
  8. //what a pun on the word enni kkai!! superb!! Fantastic ! . And that is KRS//

    :)
    இந்த விளையாட்டெல்லாம் என் தோழன் ராகவன் எனக்குக் கொடுத்த கொடை! :)

    ஏண்டி கோதை, உனக்கு அந்தரங்கம் வேணுமா, அந்த ரங்கம் வேணுமா? ப்ரைவசி இல்லாது வசி-ப்பாயா நீ?-ன்னு எல்லாம் சும்மா ஓட்டுவோம்! :)

    அதெல்லாம் இருக்கட்டும்! "உடல் நலம் விரைவில் சீராக"-ன்னு கவிக்கா சொல்லுறாங்க! நலம் தானே சூரி சார்?

    ReplyDelete
  9. கவி காளமேகம் அக்கா உருவுல திரும்ப வந்துட்டாருன்னு நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  10. //அந்த கேஆரெஸ் பய புள்ள கூடச் சேர்ந்து சேர்ந்து, நீங்களும் எம்பெருமான்களை ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்க//

    :)))

    பூவோடு சேர்ந்த நாரு நானு :)

    ReplyDelete
  11. //what a pun on the word enni kkai!! superb!! Fantastic ! . And that is KRS//

    ஆ..மோதிக்கிறேன் :)

    //"உடல் நலம் விரைவில் சீராக"-ன்னு கவிக்கா சொல்லுறாங்க! நலம் தானே சூரி சார்?//

    எனக்கு அனுப்பின மடலில் இருமல் அதிகமாக இருப்பதாக எழுதி இருந்தார்.

    ReplyDelete
  12. //கவி காளமேகம் அக்கா உருவுல திரும்ப வந்துட்டாருன்னு நினைக்கிறேன். :-)//

    ஆத்தாடி! எப்பவோ ஒரு முறைதானே இப்படி எழுத வருது... அதுக்கே இப்படி சொல்றீங்களே :)

    ச்சும்மா... இந்த மாதிரி அவளை தாஜா பண்ணினாலாச்சும் காரியம் நடக்குதான்னு பார்க்கிறேன்.. :)

    நன்றி குமரா.

    ReplyDelete
  13. ம்ம்ம்..."எதுக்கு வெட்டியா இங்கெ அங்கெ அலைஞ்சிட்டு இருக்கே ! ஒழுங்கா செவனேனு ஒரு எடமா ஒக்காந்து கெடக்கறதுக்கு என்ன?" அப்படின்னு அம்மாவை அதட்டறீங்கா? :-)
    ~
    ராதா
    ஒரு முக்கியமில்லாத பின் குறிப்பு:
    விருத்தாசலம் விருத்திகிரீஸ்வரர் கோவில் அம்பாள் ரொம்ப வயசான அம்பாள் என்று சொல்வாங்க. I think she is going to come and take rest in your house. :-)

    ReplyDelete
  14. //ம்ம்ம்..."எதுக்கு வெட்டியா இங்கெ அங்கெ அலைஞ்சிட்டு இருக்கே ! ஒழுங்கா செவனேனு ஒரு எடமா ஒக்காந்து கெடக்கறதுக்கு என்ன?" அப்படின்னு அம்மாவை அதட்டறீங்கா? :-)//

    ஆமா...ச்செல்லமா... :)

    அது என்ன 'முக்கியமில்லாத' பின்குறிப்பு? :)

    //I think she is going to come and take rest in your house. :-)//

    எப்படி வந்தா என்ன? வந்தாலே போதும்! :)

    ReplyDelete
  15. //Nice poem.. Kavi avargale//

    முதல் வருகைக்கு நன்றி சங்கர். ரசனைக்கும் :)

    ReplyDelete