Monday, December 6, 2010

உன்னையன்றி எவருமில்லை...


உன்னையன்றி எவருமில்லை
உள்ளந்தன்னில் திறனுமில்லை
முள்ளிலிட்ட சேலை போலே
நானும் ஆகினேன் – அம்மா
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
கானம் பாடினேன்

உன்னைப் பாடும் பாடல் எல்லாம்
காற்றில் கரைந்து போகுதோ?
இல்லை யுன்னைத் தேடி வந்துன்
பாத மலரில் சேருதோ?

என்றன் கண்ணின் ஈரம் என்று
உன்னை வந்து நனைக்குமோ?
உன்றன் அன்பின் ஈரம் என்று
என்னை வந்து அணைக்குமோ?

ஏதும் அறி யாத பிள்ளை
உன்மடி யைத் தேடுது
பாதம் பற்றிக் கொண்டு நீயே
சொந்தம் என்றுபாடுது!


--கவிநயா

3 comments:

  1. //Madam,
    Were you also thinking of this tune, when composing this song? The song is superb and fits quite well into the parameters of Raag mukhari.
    hope u and ur family members are well. God Bless you all.
    subbu thatha

    http://www.youtube.com/watch?v=GCS-pdJgrDg//

    இல்லை தாத்தா; நான் நினைச்சது கொஞ்சம் வேற மாதிரி இருந்தது. ஆனா நீங்க தேர்ந்தெடுத்த ராகமும் பாடிய விதமும் மனதை உருக்குவதாக அமைஞ்சிருக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. \\என்றன் கண்ணின் ஈரம் என்று
    உன்னை வந்து நனைக்குமோ?
    உன்றன் அன்பின் ஈரம் என்று
    என்னை வந்து அணைக்குமோ?

    ஏதும் அறி யாத பிள்ளை
    உன்மடி யைத் தேடுது
    பாதம் பற்றிக் கொண்டு நீயே
    சொந்தம் என்றுபாடுது!\\

    ஒரு குழந்தை தாயிடம் மன்றாடுவது போல இருக்கிறது.

    நல்லா எழுதுறீங்க!

    ReplyDelete
  3. //ஒரு குழந்தை தாயிடம் மன்றாடுவது போல இருக்கிறது.//

    "போல" இல்லை; அதுதான் :)

    //நல்லா எழுதுறீங்க!//

    நன்றி கோபி.

    ReplyDelete