Monday, November 29, 2010

என்று தெரிந்திடுமோ?

ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு நான் எழுதாத, ஆனா என்னுடையது போலவே இருக்கிற ஒரு பாடல் :) போன வாரம் தற்செயலாக இதைக் கேட்க நேர்ந்த போது இதை உங்களுடன் பகிர்ந்துக்கிறதுன்னு முடிவு செய்தேன்... மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மீதான பாடல்களில் ஒண்ணு. எழுதியவர் யார்னு தெரியலை; உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க. பாடியிருப்பவர் வாணி ஜெயராம்.


இந்தப் பாடலின் ஒலிச்சுட்டி.

உன்னெழில் கோலம் என்னிரு கண்ணில் என்று தெரிந்திடுமோ
உன்மலர்ப்பாதம் என்தலைமீதில் என்று பதிந்திடுமோ - அம்மா
என்று பதிந்திடுமோ?

(உன்னெழில்)

அன்னையுன் அருளால் என்னையும் மறந்து இருந்திடும் நாள்வருமோ
பொன்னையும் பொருளையும் பூமியில் வாழ்வையும் வெறுத்திடும் நாள்வருமோ - அம்மா
வெறுத்திடும் நாள்வருமோ?

ஆசையென்னும் வேதனை அகற்றி அருள்தரவருவாயா
அலைகடல் போல அலையுமென் வாழ்வினில் அமைதியைத் தருவாயா - அம்மா
அமைதியைத் தருவாயா?

(உன்னெழில்)

உலையினில் இட்ட மெழுகாய் நானும் உருகித் தவிக்கின்றேன்
உன்னருள் வேண்டி ஒவ்வொரு நாளும் பாடித் துதிக்கின்றேன் - அம்மா
பாடித் துதிக்கின்றேன்

ஊரும் பேரும் உறவும் வேண்டேன் உன்னருள் வேண்டுகின்றேன்
உலகினில் இருக்கும் காலம்வரைக்கும் உன்துணை வேண்டுகின்றேன் - அம்மா
உன்துணை வேண்டுகின்றேன்

(உன்னெழில்)

10 comments:

  1. உங்களை மாதிரி எழுதுறதுன்னா எப்படி அக்கா?

    ஏன் இந்த பாடல் உங்க பாடல் மாதிரியே இருக்குன்னு சொல்றீங்க?

    ReplyDelete
  2. // குமரன் (Kumaran) said...

    உங்களை மாதிரி எழுதுறதுன்னா எப்படி அக்கா?
    ஏன் இந்த பாடல் உங்க பாடல் மாதிரியே இருக்குன்னு சொல்றீங்க?//

    பாடலின் கருத்து என்னுடைய மனப்போக்கை ஒத்திருப்பது போல் தோணுச்சு; அதனால அப்படிச் சொன்னேன் குமரா :)

    ReplyDelete
  3. kavinayaa
    iraivanai vendum ellarukkum ore karuththuthaan.Ezgudhum vidham , ketkum vidham maarugirathu.

    ReplyDelete
  4. முதல் வருகைக்கு நன்றி லலிதா.

    எல்லோரும் ஒரே மாதிரி வேண்டிக் கொள்வதில்லை. பொன், பொருள், புகழ், குடும்பம், தான் ஆசைப்பட்டது நிறைவேற வேண்டும், இப்படி இவற்றுக்காக வேண்டிக் கொள்பவர்களே அதிகம் என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது :)

    ReplyDelete
  5. //அன்னையுன் அருளால் என்னையும் மறந்து இருந்திடும் நாள்வருமோ//
    waiting for the day !!
    vani jayaram is superb. I tried in Raag malayamarutham. The lyric suits this also.
    subbu rathinam.

    http://www.youtube.com/watch?v=iCsfE4YS8Lw&feature=player_embedded//

    மலயமாருதம் ராகத்திலும் பாடல் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறது தாத்தா. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. மனதை தொடும் பாடல்கள். நான் இதுபோல் நிறைய எழுதியுள்ளேன். விரைவில் வெளியிட ஆசை

    ReplyDelete
  7. //மனதை தொடும் பாடல்கள்.
    நான் இதுபோல் நிறைய எழுதியுள்ளேன். விரைவில் வெளியிட ஆசை//

    அப்படியா. நிச்சயம் வெளியிடுங்கள். வாசித்து மகிழ்வோம்.

    முதல் வருகைக்கு நன்றி சிவகுமாரன்.

    ReplyDelete
  8. அருமை! ஒலிச்சுட்டியில் எல்லாபாடல்களையும் போட்டால் நலம்---பத்மாசூரி

    ReplyDelete
  9. நல்வரவு பத்மா.

    http://www.dancetamil.com/devotional-mp3songs/songslist.htm

    இந்தச் சுட்டியைப் பாருங்கள். இந்தப் பதிவில் இட்ட பாடல் "மேல்மருவத்தூர் அம்மன் பாடல்கள் - வாணி ஜெயராம்" என்ற தொகுப்பில் இருந்தது.

    ReplyDelete