சித்தமெல்லாம் நிறைந்தாய் சர்வேஸ்வரி - என்
பித்தும்நீ யேயானாய் புவனேஸ்வரி
விதிஎனும் வலைப் பட்டு மதி இழந்தேன் - உன்னை
கதிஎன்று கொண்ட பின்னே மனம் தெளிந்தேன்
சந்ததமும் உனைப் பணிந்து அகம் மகிழ்ந்தேன் - உன்னை
செந்தமிழால் பாடிப் பாடி உள்ளம் குளிர்ந்தேன்
பத்தும் பறந்து விடும் உன்னை நினைத்தால் - எந்த
பற்றும் அகன்று விடும் உன்னை துதித்தால்
ஒத்துஒரு மனதாய் உன்றன் நாமம் ஜெபித்தால் - பெரும்
சொத்தெனவே நீ கிடைப்பாய் அன்பு வரத்தால்
--கவிநயா
etiruga nannu mettil intha paattai
ReplyDeleteenathu valaiyil kezhungal.
subbu rathinam.
http://menakasury.blogspot.com
/பத்தும் பறந்து விடும் உன்னை நினைத்தால் - எந்த
ReplyDeleteபற்றும் அகன்று விடும் உன்னை துதித்தால்
ஒத்துஒரு மனதாய் உன்றன் நாமம் ஜெபித்தால் - பெரும்
சொத்தெனவே நீ கிடைப்பாய் அன்பு வரத்தால்
/
இந்த மாதிரி பாடல் கிடைத்ததே
மிகப் பெரிய சொத்து
bakththiththudhi ezhudha kavinayaa
ReplyDeleteirukka,-nalla
mettu poda namma surisir irukka,
baktharukku enna kurai paramesvari?
-paattu
kettapadi kumbiduvom kaamesvari.
ராகம் பொருத்தமாக அமைந்திருக்கிறது தாத்தா! மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி திகழ்!
ReplyDeleteபக்தருக்கு என்ன குறை பரமேஸ்வரி - பாட்டு
ReplyDeleteகேட்டபடி கும்பிடுவோம் காமேஸ்வரி
-- நல்லாருக்கு லலிதாம்மா :) மிக்க நன்றி.
\\...என்
ReplyDeleteபித்தும்நீ யேயானாய் புவனேஸ்வரி\\
என்னமோ இடிக்குதே. பித்திற்கும் காரணம் நீயே என்று சொல்ல்வந்தீர்களோ?!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
வாங்க கோபி.
ReplyDelete//என்னமோ இடிக்குதே.//
அப்படியா, இடிச்சா கொஞ்சம் தள்ளி நின்னுக்கோங்க! ஹி... ஹி...
//பித்திற்கும் காரணம் நீயே என்று சொல்ல்வந்தீர்களோ?!//
நீங்க எது மேலேயாச்சும் பைத்தியமா (பித்தா) இருக்கறதுண்டா? நான் அவமேல அப்படி இருக்கேன்னு சொல்ல வந்தேன் :)
வருகைக்கு நன்றி கோபி.
அற்புதமானப் பாடல் !!! நிறைய தெம்பினை தருகிறது. :-)
ReplyDelete//அற்புதமானப் பாடல் !!! நிறைய தெம்பினை தருகிறது. :-)//
ReplyDeleteநல்லது ராதா! மிக்க நன்றி :)