கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
எழில்விழி யாலே வழிகாட்டு
குழல்மொழி யாளே மலர்ப்பாதம்
குழைந்து பணிகின்றோம் காப்பாற்று
அண்ட மெல்லாம் பூத்த அருள்சகியே - விடங்
கொண் டவனைக் கொண்ட பசுங்கிளியே
பிறை தனை முடியினில் தரித்தவளே - பிரமன்
சிரம் பறித் தவனை வரித்தவளே
மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்
கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே
பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்
கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்
--கவிநயா
வழக்கம் போல நன்றாக இருக்கிறது.
ReplyDelete//வழக்கம் போல நன்றாக இருக்கிறது.//
ReplyDelete:) வழக்கம் போல நன்றி கோபி :)
கவிதை முயற்சி எப்படி போயிட்டிருக்கு? :)
கவி...
ReplyDeleteஎப்படி இருக்கீங்க?
ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன்...
வந்தால், வழக்கம் போல் கடைவிழியால் கடைத்தேற்று என்று நீங்கள் எழுதிய அருமையான கவிதை வரவேற்றது... அதுவும் முடிவில் நீங்கள் எழுதியிருந்த இந்த வரிகள், ஆஹா அற்புதம் என்று சொல்ல வைத்தது...
//மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்
கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே
பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்
கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்//
அவளின் பாதம் பணிந்து என்னையும் கடைத்தேற்றுமாறு கேட்கிறேன்...
வாங்க ஆர்.கோபி. ஒரு நொடி குழம்பிட்டேன், இப்பதானே கோபியோட பின்னூட்டம் பார்த்தோம், அப்படின்னு :)
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில், கவிதை உங்களுக்கு பிடித்திருப்பதில், மிக்க மகிழ்ச்சி :)
கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
ReplyDeleteஎழில்விழி யாலே வழிகாட்டு
குழல்மொழி யாளே மலர்ப்பாதம்
குழைந்து பணிகின்றோம் காப்பாற்று:)
Superb:)
ஜெய ஜெய பார்வதி பதயே நமஹ!
ஹர ஹர மஹா தேவா!
வாங்க ராஜேஷ். நன்றி :)
ReplyDeleteகணினி நுணுக்கங்கள் புரிபடாததால் [முதுமை -61 ] கொமென்ட்ஸ் எழுதியபின் அழித்துவிட்டேன் .இப்போ
ReplyDeleteவெற்றி.கவிநயா,உன் அம்மன் பாட்டெல்லாமே சூ......ப்பர்.கடைசீபாட்டு படித்ததும் கடைதேறிவிடுவோம்
என்று நம்பிக்கை வந்துவிட்டது அடுத்த பாட்டுக்காக காத்திருக்கேன் .lalitha mittal
உங்களை லலிதாம்மான்னு கூப்பிடலாமா? உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிடுச்சு :) மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteசில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)
ReplyDelete//சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)//
ReplyDeleteஅப்படித்தான் எனக்கும் சில நேரம் தோணும் :) மற்ற நேரம் - சே, ஒண்ணுமே தோணலையேன்னும் தோணும்...