Monday, January 24, 2011

அம்மா வருவாய்...


அம்மா வருவாய் அல்லல் களைவாய்
அருள் புரிந்தென்னை ஆட்கொள்வாய்

அன்பைத் தருவாய் அகத்தில் நிறைவாய்
அடைக்கலம் தந்தென்னைக் காத்தருள்வாய்

கண்ணீரால் பதம் கழுவுகின்றேனே
கருணை சிறிதும் உனக்கில்லையோ

வென்னீராய் உள்ளம் கொதிக்கின்றதே - அதைக்
குளிரவைக்க மனம் வரவில்லையோ

கல்லோ உன்மனம் நானறியேன் - உன்னைக்
கனிய வைக்கும்வகை யும்அறியேன்

புல்லாம் என்மனம் பண்படுத்தி - அதில்
உன்பதம் ஒன்றே பதிய வைத்தேன்

அனுதினம் உன்பெயர் சொல்லுகின்றேன் - உன்
மலரடியில் சரணடைந்து விட்டேன்

கனிவுடன் என்திசை பார்த்தருள்வாய் - உன்
பிள்ளை என்னை ஏற்றுக் கொள்வாய்


--கவிநயா

சுப்பு தாத்தாவின் இசையில், குரலில்... நன்றி தாத்தா!

18 comments:

  1. 'peththa manam piththu; pillai manam kallu'enruthaan kelvipattirukkom ;nee 'peththa manam kallu;pillai manam piththu 'enru thonumbadi ezhuthi yirukke!ammaavoda anbu always unconditional.aval ethu seithaalum nam nalaththukkaagaththaan seivaal.
    unpattu kettathum urugi odi vanthiruppale !surysir,raagam pottaachchaa?

    ReplyDelete
  2. Romba vanjaiyoda ezhudhirukkinga akka.. :)

    ReplyDelete
  3. வழக்கம் போல நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. உங்கள் பாடல்களைப் படிக்கும் போது பெரும்பாலான நேரங்கள் பேருந்திலோ அலுவலகத்திலோ இருப்பதால் வாய் விட்டு படிக்க முடிவதில்லை. இன்று வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன். அதனால் வாய் விட்டுப் பாட முடிந்தது அக்கா. நன்றாக இருக்கிறது. :-)

    ReplyDelete
  5. மெட்டு இஸ் இன் தி பாட்டு-க்கா! :)

    மெட்டு பாட்டிலேயே அமைந்து விடு்கிறது, கவிநயா கவிகளில்! என்ன, சரி தானே? :)

    //கனிவுடன் என்திசை பார்த்தருள்வாய் - உன்
    பிள்ளை என்னை ஏற்றுக் கொள்வாய்//

    திசையை மட்டும் நீ பார்த்தீ-ன்னா போதும்! அப்பறம் என்னை விட உனக்கு மனசே வராது-ம்மா! வராது!

    ReplyDelete
  6. //aval ethu seithaalum nam nalaththukkaagaththaan seivaal.//

    ஆம் லலிதாம்மா. ஆனா அது சில சமயம் புரியற மாதிரி இருக்கு, சில சமயம் புரியலை :( வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  7. //Romba vanjaiyoda ezhudhirukkinga akka.. :)//

    வாஞ்சையோடயா, வருத்தத்தோடயா? :)

    நன்றி சங்கர் :)

    ReplyDelete
  8. //வழக்கம் போல நன்றாக இருக்கிறது//

    நன்றி கோபி!

    ReplyDelete
  9. //இன்று வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன். அதனால் வாய் விட்டுப் பாட முடிந்தது அக்கா. நன்றாக இருக்கிறது. :-)//

    சந்தோஷம் குமரா. மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. //மெட்டு இஸ் இன் தி பாட்டு-க்கா! :)//

    நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :)

    //திசையை மட்டும் நீ பார்த்தீ-ன்னா போதும்! அப்பறம் என்னை விட உனக்கு மனசே வராது-ம்மா! வராது!//

    பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க. அவள் நம் திசையில் பார்த்தாலே போதுமே!

    வாசிச்சதுக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  11. /கனிவுடன் என்திசை பார்த்தருள்வாய் - உன்
    பிள்ளை என்னை ஏற்றுக் கொள்வாய்

    /

    இது தானே வேண்டும்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  12. Don bother akka.. she is Vishwasakshini. She is just watching, what is happening to us.. She wil ensure that we are safe and happy akka.. Jus that she will enjoy, how are we tryin to tackle the situation. If you still hav any problem, kathi oru dhadava LS padinga..podhum.. all problems will get solved akka.. :)

    ReplyDelete
  13. //இது தானே வேண்டும்//

    ஆம்! அதுதான் வேணும் :)

    நன்றி திகழ்.

    ReplyDelete
  14. //Don bother akka.. she is Vishwasakshini. She is just watching, what is happening to us.. She wil ensure that we are safe and happy akka.. Jus that she will enjoy, how are we tryin to tackle the situation. If you still hav any problem, kathi oru dhadava LS padinga..podhum.. all problems will get solved akka.. :)//

    அப்படியே ஆகட்டும் தம்பீ! :)

    ReplyDelete
  15. //மெட்டு பாட்டிலேயே அமைந்து விடு்கிறது, கவிநயா கவிகளில்! என்ன, சரி தானே? :)//

    kannabiran sonna O podaama irukka mudiyuma enna !!

    itho ! chenchurittile amayarathE!

    subbu rathinam.

    ReplyDelete
  16. //itho ! chenchurittile amayarathE!//

    எனக்கு பிடிச்ச ஸ்ரீசக்ரராஜசிம்மாசனேச்வரி பாடல் மெட்டில் அழகாக அமைஞ்சிருக்கு.. :) மிக்க நன்றி தாத்தா! இடுகையில் சேர்த்திருக்கேன்.

    ReplyDelete
  17. //கல்லோ உன்மனம் நானறியேன் - உன்னைக்
    கனிய வைக்கும்வகை யும்அறியேன் //
    :-(((

    ReplyDelete
  18. //:-(((//

    என்ன பண்ணலாம்? சில சமயம் அப்படித்தான் தோணுது :( வாசித்தமைக்கு நன்றி ராதா.

    ReplyDelete