Monday, March 7, 2011

உன்மீது பித்தான அன்பொன்றே வேண்டும்!சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா!

ஆய்ந்தாய்ந்து பார்க்கின்ற அறிவெனக்கு வேண்டாம்!
ஞாலமெலாம் புகழ்கின்ற ஞானமும் வேண்டாம்!
ஆண்டாண்டு காலமாய் புவியாளும் தேவீ!
உன்மீது பித்தான அன்பொன்றே வேண்டும்!

உன்அன்பின் மதுவுண்டு நான்களிக்க வேண்டும்!
அம்மதுவின் போதையிலே எனைமறக்க வேண்டும்!
பக்தர்களின் இதயங்களைக் கொள்ளைகொள்ளும் காளீ!
உனதன்புக் கடலினிலே எனைமூழ்க வைநீ!

சுழல்கின்ற புவியோடு உணர்வுபல சுழலும்;
உலகெல்லாம் உன்னுடைய மாயைதனில் உழலும்!
சிரிப்போரும் அழுவோரும் மகிழ்வோரும் உண்டு;
சிறிதும்உன்னை நினையாது மரிப்போரும் உண்டு!

யேசுவும், மோசஸும், புத்தர், கௌரங்காவும்
உன்னன்பின் மதுவருந்தி போதையிலே திளைத்தார்;
நானும் அந்நிலையடைந்து அவரோடு களிக்கும்
நாளெந்த நாளோ? நீசொல்வாய் அம்மா!

--கவிநயா

('Gospel of Sri Ramakrishna' புத்தகத்திலிருந்து 'make me mad with thy love' என்ற பாடலை தழுவி எழுதியது)

17 comments:

 1. /உன்அன்பின் மதுவுண்டு நான்களிக்க வேண்டும்!
  அம்மதுவின் போதையிலே எனைமறக்க வேண்டும்!
  பக்தர்களின் இதயங்களைக் கொள்ளைகொள்ளும் காளீ!
  உனதன்புக் கடலினிலே எனைமூழ்க வைநீ!/

  அழகு

  பாடலில் என்னை முழ்க வைத்து விட்டீர்கள் அக்கா

  ReplyDelete
 2. நீங்க ரொம்ப விவரம்.

  அம்பாள் மேல மாறாத அன்பு வாய்க்கும் பட்சத்தில் மீதி எல்லாம் தானாகவே வாய்த்துவிடும்.

  ReplyDelete
 3. //பாடலில் என்னை முழ்க வைத்து விட்டீர்கள் அக்கா//

  மிக்க மகிழ்ச்சி திகழ் :) நன்றி.

  ReplyDelete
 4. //அம்பாள் மேல மாறாத அன்பு வாய்க்கும் பட்சத்தில் மீதி எல்லாம் தானாகவே வாய்த்துவிடும்.//

  நீங்க சொன்னது சரியே, என்றாலும் நான் அப்படி 'விவரமா' இருக்க விரும்பல :) கள்ளமில்லாத தூய்மையான அன்பே நான் வேண்டுவது.

  வருகைக்கு நன்றி கோபி :)

  ReplyDelete
 5. அழகான பாடல் .
  அமுதமான உணர்வு.
  சாரங்க ராகத்தில் இதை பாடி என்
  வலையில் இட்டிருக்கிறேன்.

  சுப்பு ரத்தினம்.
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 6. /sury said...

  அழகான பாடல் .
  அமுதமான உணர்வு.
  சாரங்க ராகத்தில் இதை பாடி என்
  வலையில் இட்டிருக்கிறேன்./

  கேட்க கேட்க இனிக்கிறது

  நன்றி அய்யா

  ReplyDelete
 7. //கேட்க கேட்க இனிக்கிறது//

  அதேதான். மிகவும் நன்றி தாத்தா. இங்கும் இடுகையில் இணைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. naanum annilaiyadainthu
  avarodu kalikkum
  naalentha naalo?
  nee solvaayammaa!
  solvaayammaa!!ammaa!
  solvaayammaa!!!

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி லலிதாம்மா!

  ReplyDelete
 10. //'Gospel of Sri Ramakrishna' //
  தன் கையெழுத்துக் கூட போடத் தெரியாத பைத்தியத்தை நினைவுப்படுத்தியமைக்கு நன்றி அக்கா. Glory to my master ! :-)

  ReplyDelete
 11. //தன் கையெழுத்துக் கூட போடத் தெரியாத பைத்தியத்தை நினைவுப்படுத்தியமைக்கு நன்றி அக்கா. Glory to my master ! :-)//

  நீங்க சொன்ன விதத்திலிருந்தே குருதேவர் மீது உங்களுக்கிருக்கும் அபரிமிதமான பிரேமை புரியுது. இந்த பாடலை இடுகையில் உங்களதான் நினைச்சேன். எப்படியும் வாசிப்பீங்கன்னு தெரியும். நன்றி ராதா!

  'நினைவின் விளிம்பில்...' வலைபூவில் சில அமுத மொழிகள் பதிவுகள் இருக்கு... நேரம் கிடைச்சா பாருங்க.

  ReplyDelete
 12. அதை எல்லாம் எப்பவோ படிச்சி முடிச்சாச்சு. :-)
  [சில சமயம் நிறைய வாசிக்கும் பொழுது கமென்ட் போட தோன்றுவதில்லை.] அப்புறம் எனக்கு உண்மையில் விவேகானந்தர் மேல் தான் அன்பு ப்ரேமை எல்லாம். விவேகானந்தருக்காக பரமஹம்சரை பிடிக்கும். :-)

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. சாரி. கமென்ட் விண்டோ மாறி விட்டது. :-)

  ReplyDelete
 15. //அப்புறம் எனக்கு உண்மையில் விவேகானந்தர் மேல் தான் அன்பு ப்ரேமை எல்லாம். விவேகானந்தருக்காக பரமஹம்சரை பிடிக்கும். :-)//

  அப்படியா.. நாதான் தவறா புரிஞ்சிக்கிட்டேன் போல.

  பதிவுகளை வாசிச்சதுக்கு நன்றி ராதா.

  ReplyDelete
 16. பெரிதாக ஒன்றும் தவறாக இல்லை அக்கா.ராமகிருஷ்ணரிடம் அன்பு/பக்தி இல்லாமல் இல்லை.ஒவ்வொருக்கும் "மிக மிக பிடித்தமான" என்று ஒரு மகான் இருப்பார். பரமஹம்சரிடம் உள்ள அளவிற்கு பக்தி/அன்பு எனக்கு பகவத் ராமானுஜரிடமோ, ஆதி சங்கரரிடமோ இல்லை. நரேனிடம் உள்ள அளவிற்கு வேறு யாரிடமும் இல்லை. :-) மகான்களுள் யாரிடமாவது மிகத் துணிவுடன் என்னை முழுமையாக ஒப்படைத்துவிடுவேன் என்றால் அது சுவாமி விவேகானந்தரிடம் மட்டும் எளிதாக முடியும். "Complete works of Swami Vivekananda" படித்ததன் தாக்கம் எனலாம்.

  ReplyDelete
 17. புரிகிறது ராதா; விளக்கத்திற்கு நன்றி :)

  ReplyDelete