அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் தேடிய போது கிடைக்கலை. (எனக்கு ஆங்கிலத்தில் எழுதி படிப்பதை விட தமிழில் படிக்கிறதுதான் சுலபம் போல தோணும் :). அதனால ஆடியோவில் கேட்டு தமிழில் எழுதினேன். தவறு இருந்தால், தெரிந்தவர்கள் திருத்தும்படி கேட்டுக்கறேன். என்னைப் போல தேடுபவர்களுக்கு பயன்படுமே என்று இங்கே இடறேன்...
கேட்டுக்கிட்டே படிக்கலாம்...
சுமனஸவந்தித சுந்தரி மாதவி
சந்த்ர சஹோதரி ஹேமமயே
முனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதனுதே
பங்கஜ வாசினி தேவஸு பூஜித
சத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
ஆதிலக்ஷ்மி சதா பாலயமாம்
அயிகலி கல்மஷ நாஷினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரனுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸினி
தேவ கணாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தான்யலக்ஷ்மி சதா பாலயமாம்
ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயே
ஸுரகண பூஜித ஷீக்ர ஃபலப்ரத
ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜனாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தைர்யலக்ஷ்மி சதா பாலயமாம்
ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்
ஜெய கமலாசனி ஸத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதா ராஸ்துதி வைபவ வந்தித
ஷங்கர தேசிக மான்யபதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
விஜயலக்ஷ்மி சதா பாலயமாம்
ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி
சோக விநாஷினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
ஷாந்திஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
வித்யாலக்ஷ்மி சதா பாலயமாம்
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
அன்புடன்
கவிநயா
இதைத் தமிழ்ப்படுத்த ஆசைதான்!'பாப்பா ராமாயணத்தில்' மூழ்கிவிட்டதால் இதுக்கு டைம் கொடுக்க முடியலை;ஒரு நல்ல சமஸ்க்ருத அகராதியை வைத்துக்கொண்டு நீகூட முயற்சிக்கலாம்.'உன்னால் முடியும் கவிநயா'!
ReplyDeleteஜெயம், ஜயம் ரெண்டுல எது சரி? கி வாஜ ஸ்ரீராமஜெயம் என்பதை ஸ்ரீராமஜயம்னு சொல்றதுதான் சரின்னு சொல்லி இருக்கார். எங்கயோ படிச்சது இது.
ReplyDeleteகூர்மையான காதுகள் தான். 95% சரியாகவே இருக்கிறது. பாடலைக் கேட்டுப் பார்த்தேன் - அங்கும் அதே பிழைகள் தான் இருக்கின்றன. அதனால் பிழைகள் நீங்கள் செய்தவை இல்லை. :-)
ReplyDeleteஜெயவர வர்ணிணி --> ஜெயவர வர்ஷிணி, மந்தரமயே --> மந்த்ரமயே, பவபய காரிணி --> பவபய ஹாரிணி, ஸ்வரஸ்ப்த --> ஸ்வரஸப்த, கனகத ராஸ்துதி --> கனகதாரா ஸ்துதி.
//பாப்பா ராமாயணத்தில்' மூழ்கிவிட்டதால்//
ReplyDeleteஅப்படியா! ஆவலுடன்...
//நீகூட முயற்சிக்கலாம்//
விருப்பம் இருக்கு லலிதாம்மா, ஆனாலும் அருளும் வேணும். (நேரமும்). நிறைய வேலைகள் இழுத்துப் போட்டுக்கிட்டு திணறிக்கிட்டிருக்கேன்...
(சில காலம் முன்னால் மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம் தமிழில் எழுதினேன். இங்கேயே இருக்கு)
//ஜெயம், ஜயம் ரெண்டுல எது சரி?//
ReplyDeleteஅந்த அளவு எனக்கு தமிழ் புலமை இல்லை, கோபி. குமரன் சொல்லுவார். (சொல்லுவீங்கதானே? :)
//ஜெயவர வர்ணிணி --> ஜெயவர வர்ஷிணி, மந்தரமயே --> மந்த்ரமயே, பவபய காரிணி --> பவபய ஹாரிணி, ஸ்வரஸ்ப்த --> ஸ்வரஸப்த, கனகத ராஸ்துதி --> கனகதாரா ஸ்துதி.//
ReplyDeleteமிக மிக நன்றி குமரா! திருத்திட்டேன்.
வழக்கம் போலவே மிகவும் அருமையான பக்தி மணம் கமழும் பதிவு..
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிநயா...
நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் பாருங்களேன் :
"விதை” - குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html
கிரீன் டீ - மருத்துவ குணங்கள் http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post.html
ஜய என்றால் வெல்வது என்றும் ஜெய என்றால் வெல்லப்படுவது என்றும் வடமொழி அகராதி பொருள் சொல்கிறது. ஆனால் நிறைய இடங்களில் ஜெய என்பது ஜய என்ற சொல்லுக்குப் போலியாகத் தான் வந்திருக்கிறது - அதனால் ஜெய என்று எழுதினாலும் ஓகே. :-)
ReplyDeleteநன்றி குமரா!
ReplyDeleteவாங்க R.கோபி! கிரீன் டீ பதிவு பார்த்தேனே. பின்னூட்டியதாகவும் நினைவு. மற்றது கூடிய விரைவில் பார்க்கிறேன் :) வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த சுலோகம் அக்கா... :)
ReplyDeleteநன்றி சங்கர் :)
ReplyDeleteஜெயம் என்பதே சரிதான்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, செந்தில்குமார்!
ReplyDelete