Monday, March 14, 2011

பக்திக்குள்ள நீயிருக்கே!


பாலுக்குள்ள நெய்யிருக்கு
பருத்திக்குள்ள துணியிருக்கு
வித்துக்குள்ள மரமிருக்கு அம்மா செல்லம்மா – எம்
பக்திக்குள்ள நீயிருக்கே அம்மா சொல்லம்மா

சிக்கிமுக்கிக் கல்லுக்குள்ள
சிக்கிக்கிட்ட தீயப்போல
சித்தத்துல சிக்கியிருக்கே அம்மா செல்லம்மா – அந்த
பித்துலநாம் பாடுறனே அம்மா சொல்லம்மா

ஊனுசுரு மறைஞ்சாலும்
ஒன்நெனப்பு மறையாது
மண்ணோடும் வேரப்போல அம்மா செல்லம்மா – நீ
உள்ளோடி இருக்குறியே அம்மா சொல்லம்மா!


--கவிநயா

சுப்பு தாத்தா பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில், நாட்டுப்புறப் பாடலாக பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!

22 comments:

  1. நல்ல பாடல்...தொடருங்கள்..

    ReplyDelete
  2. இந்த நாட்டுப்பாடலிலே
    பொதஞ்சு கெடக்கும் பொருளப்போலே

    நெஞ்செல்லாம் நெறஞ்சவளே,அம்மா செல்லம்மா!-உந்தன்

    அன்பொன்றே போதுமடி,அம்மா,சொல்லம்மா!

    ReplyDelete
  3. இயற்கையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நான் இப்போதெல்லாம் இறைநம்பிக்கைக்கு இரையாவதில்லை. எளியதமிழில் இனியதாக புனைந்த பாடல் என் 'சித்தத்துல சிக்கிடுச்சு'! கவிஞர்களும், கவியார்வம் கொண்டவர்களும் எந் நெறியைபின்பற்றுவர்களாக இருப்பினும் நிச்சயம் இது போன்ற பாடல்களை விரும்புவர் என்பதில் துளியளவும் ஐயமில்லை. தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை.

    ReplyDelete
  4. பாடல் அருமை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. எளிமை அதனிலும் இனிமை! அருமை!

    ReplyDelete
  6. பாலூட்டி வளர்த்த கிளி பாட்டு மாதிரி இருக்கே.

    'தில தைலவது, தாருவன் நிவது' (எள்ளினுள் எண்ணெய், அரணிக்கட்டையுள் நெருப்பு) என்று ஸ்ரீரங்க கத்யத்தில் வரும். முதல் பாடல் அதை ஞாபகப் படுத்துகிறது

    ReplyDelete
  7. // சமுத்ரா said...

    நல்ல பாடல்...தொடருங்கள்..//

    மிக்க நன்றி சமுத்ரா :)

    ReplyDelete
  8. //நெஞ்செல்லாம் நெறஞ்சவளே,அம்மா செல்லம்மா!-உந்தன்

    அன்பொன்றே போதுமடி,அம்மா,சொல்லம்மா!//

    ஆமாம் லலிதாம்மா. மிக்க நன்றி :)

    ReplyDelete
  9. //எளியதமிழில் இனியதாக புனைந்த பாடல் என் 'சித்தத்துல சிக்கிடுச்சு'!//

    மிக்க மகிழ்ச்சி, நெல்லி.மூர்த்தி. உங்கள் நம்பிக்கை வேறாக இருந்தாலும் தமிழை ரசித்து பின்னூட்டிய உங்கள் பண்பிற்கு பாராட்டுகளும், நன்றிகளும்.

    ReplyDelete
  10. //பாடல் அருமை. பாராட்டுக்கள்!//

    மிக்க நன்றி ப்ரணவம் ரவிகுமார்!

    ReplyDelete
  11. //எளிமை அதனிலும் இனிமை! அருமை!//

    மிக்க நன்றி ராஜேஷ் :)

    அது சரி... நீங்க எதுக்கு 'Thanks' சொன்னீங்க? :)

    ReplyDelete
  12. //அற்புதம்//

    நன்றி திகழ்!

    ReplyDelete
  13. //Akkaa.. Ulimate.. !! :) :)//

    சங்கர், இது கொஞ்சம் ஓவரா இல்லை? :)

    நன்றிப்பா.

    ReplyDelete
  14. //'தில தைலவது, தாருவன் நிவது' (எள்ளினுள் எண்ணெய், அரணிக்கட்டையுள் நெருப்பு) என்று ஸ்ரீரங்க கத்யத்தில் வரும். முதல் பாடல் அதை ஞாபகப் படுத்துகிறது//

    புதிதாகத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி கோபி!

    ReplyDelete
  15. சுப்பு தாத்தா பாடித் தந்ததை இடுகையில் இணைச்சிருக்கேன், கேட்டு மகிழுங்கள்!

    ReplyDelete
  16. "செல்லாத்தா எங்க மாரியாத்தா" பாடல் ஸ்டைல். :-)

    ReplyDelete
  17. அட. நல்ல Folk song என்று சொல்ல வந்தேன். பார்த்தால் ஏற்கனவே நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். :-)

    எளிமையாவும் இருக்கு. பொருளடர்த்தியாவும் இருக்கு அக்கா. :-)

    ReplyDelete
  18. //"செல்லாத்தா எங்க மாரியாத்தா" பாடல் ஸ்டைல். :-)//

    ஆமா :)

    நன்றி ராதா.

    ReplyDelete
  19. //அட. நல்ல Folk song என்று சொல்ல வந்தேன். பார்த்தால் ஏற்கனவே நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். :-)//

    :)

    //எளிமையாவும் இருக்கு. பொருளடர்த்தியாவும் இருக்கு அக்கா. :-)//

    குமரனே சொன்னப்புறம் என்ன? மகிழ்ச்சிதான் :)

    நன்றி குமரா.

    ReplyDelete