அம்மன் பாட்டு-ன்னாலே கவிநயா அக்கா தான்!
இருந்தாலும் அம்மா-க்கு பொண்ணுங்களை விட பசங்க தான் ஒரு சுத்து ஜாஸ்தியா பிடிக்குமாம்!:)
அதனால் நான்...இன்று, இங்கு, அம்மன் பாட்டிலே...
ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்
கந்தன் மனக் கல்லுருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே!
அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?
பலருக்கும் இந்தப் பாட்டு தெரியும்!
புகழ்பெற்ற இந்தப் பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் (தஞ்சை இராமையா)!
தஞ்சைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில், ஒரு சிவன் கோயில்! உடல் முழுக்க திருநீறு பூசிக் கொண்டு, கோயிலில் போக்கற்று திரிந்த காலத்தில், இவர் பாடிக் கொண்டே இருப்பதைக் கண்டு, அவ்வூர் மக்கள்...
நம்மூரு "பாபநாசத்தில் ஒரு சிவன்" போல இருக்கிறாரே என்று வியக்க...அதுவே நாளடைவில் "பாபநாசம் சிவன்" என்றே நிலைத்து விட்டது!
கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் சொற்பமாக இருந்த காலத்திலே...
தமிழ்ப் பாடல்களாக எழுதிக் குவித்த அண்ணல்! தமிழ்த் தியாகைய்யர் என்றும் போற்றுவார்கள்! 1973-இல் மறைந்தார்!
தமிழிசை, மற்றும் தமிழ்மொழியில் கர்நாடக இசை...இரண்டுக்கும் பெருந்தொண்டு ஆற்றியவர் நம் பாபநாசம் சிவன்!
நீ இரங்காயெனில் புகலேது - இந்தப் பாடலின் பின் ஒரு கதையும் உண்டு!
இதை சினிமாவுக்காக எழுதிக் கொண்டு சென்றார் சிவன்! ஆனால் அந்த இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லை! மனமொடிந்த சிவன், இதை இராஜாஜி-யிடம் காண்பிக்க...
அவர் அதை எம்.எஸ் அம்மாவிடம் காண்பிக்க, ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கே-ன்னு எம்.எஸ் அதை "ஹம்" பண்ணிக் காட்ட, அருகில் இருந்த பலரும் சொக்கிப் போய் விட்டார்கள்!
பின்பு.....எம்.எஸ் அதை உருக உருகப் பாடி.....
ஒரு மறுதலிக்கப்பட்ட பாடல்...
ஏற்றுக்கொண்ட பாடலாகி...
மேடை தோறும் மேடை தோறும்...
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகல் ஒன்றில்லா அடியேன்,
நீ இரங்காய் எனில் - புகல் ஏது?
கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
* எம்.எஸ்.சுப்புலட்சுமி
* மகாராஜபுரம் சந்தானம்
* நாதசுரம் - Fusion - கோகுல்
நீ இரங்காய் எனில் புகல் ஏது? - அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)
தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?
சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)
பாற்கடலில் உதித்த திருமகளே - செள
பாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)
வரிகள்: பாபநாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி
பிற கலைஞர்கள்: (One Stop Shop)
* சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்
* வயலின் - குன்னக்குடி
* வீணை - காயத்ரி
* சுதா ரகுநாதன்
* மும்பை ஜெயஸ்ரீ
* உன்னி கிருஷ்ணன்
//இருந்தாலும் அம்மா-க்கு பொண்ணுங்களை விட பசங்க தான் ஒரு சுத்து ஜாஸ்தியா பிடிக்குமாம்!:)//
ReplyDeleteஐய்ய்ய்ய.... நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்! :) இருந்தாலும் அருமையான பாடலை தந்ததால மன்னிச்சிடச் சொன்னா அம்மா :) நன்றி கண்ணா.
மிக அருமையான பாடல், பல குரல்களில்...நன்றி. பத்மாசூரி.
ReplyDeleteபாபநாசம் சிவனே ஒரு வாக்கேயக்காரர். பல படங்களுக்கு அவரே இசையமைத்துள்ளார். அப்படிப்பட்டவரின் பாடலை கண்டு கொள்ளாத அவ்வளவு பெரிய இசையமைப்பாளர் யார் என்று சொன்னால் நல்லது. இல்லாவிட்டால் இந்தப் பதிவு பாபநாசம் சிவன் புகழுக்கு ஒரு கறையாக இருக்கும்.
ReplyDelete