அன்பாலே வந்தென்னை அமுதாக ஆட்கொண்டாய்
அன்னையே அபிராமியே!
உன்பாலே எனை ஈந்தேன் உலகெல்லாம் ஆள்கின்ற
உண்மையே உமைராணியே!
செந்தா மரைப்பூவே சிந்தாத செந்தேனே
சிந்தைநிறை சிவகாமியே!
வண்டாடும் மலர்போல கொண்டாடு வேனுன்னை
என்தாயே சுகவாணியே!
பந்தாடும் வாழ்விதனை உன்பாத கமலத்தில்
மலராகத் தந்துவிட்டேன்!
மண்ணோடும் வேர்போலே உள்ளோடும் உன்றனையே
கொழுகொம்பாய்க் கொண்டுவிட்டேன்!
அந்தமெதும் இல்லாத விந்தைமிகும் என்தாயே
சொந்தமென வந்தவளே!
சந்ததமும் உனைப்போற்றி செந்தமிழால் பாடுந்தொழில்
தந்திடுவாய் என்றன்மயிலே!!
--கவிநயா
super akka.. :) sing and post na!?!
ReplyDeletetotal surrender at her lotus feet!
ReplyDeletethaaye saranam!
மிக்க நன்றி சங்கர். நீங்களே பாடித் தாங்களேன்! :)
ReplyDeleteஆம் லலிதாம்மா. மிக்க நன்றி!
ReplyDeleteVaraveyndum Varaveyndum Thaaye oru varam
ReplyDeletetharaveyndum tharaveyndum neeye
Varaveyndum Varaveyndum Thaaye
This song was by "THERAUNDHUR SISTERS". Can you upload this song in your BLOG?--- Thanks. Padma Suri
வாருங்கள் பத்மா சூரி. தேடிய வரை நீங்க கேட்ட பாடல் கிடைக்கவில்லை. கிடைத்தால் இடுகிறேன்... வருகைக்கு நன்றி.
ReplyDelete